Hi manisat
#ref-menu

Saturday, March 10, 2018

ஏர்செல் திவால்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

*ஏர்செல் திவால்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன???*

     ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்த நிலையில், இந்த மனுவை தேசிய தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது.

       ஏறக்குறைய ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15,000 கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35,000 கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறதாம்.


ஏர்செல் திவால் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை ஏர்செல் நிறுவனர், இயக்குனர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அனுமதியின்றி நிறுவனத்தை விட்டு வெளியேற கூடாது.

அடுத்து ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து மற்றும் பங்குகளை கையகப்படுத்தி விற்றோ அல்லது ஏலத்தில் விட்டோ, ஓரளவுக்கு கடனை அடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும் - முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியீடு



BREAKING | காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும் - முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியீடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை தமிழகம் தெளிவுபடுத்தி உள்ளது - முதல்வர் பழனிசாமி

காவிரி மேலாண் வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

 தமிழக பிரதிநிதிகளை சந்திக்க நேரம் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட , அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் - முதலமைச்சர் பழனிசாமி 

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.பி-க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர் - முதலமைச்சர் பழனிசாமி

நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு தான் - முதலமைச்சர் பழனிசாமி

* காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றுவதை தவிர மத்திய அரசுக்கு மாற்று வழி இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்

காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை ஒரு கண்துடைப்பு நாடகம் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆலோசனை கூட்டத்தை கார்நாடக மாநில தேர்தல் லாபத்திற்காக மத்திய அரசு நடத்தியுள்ளது

தமிழக பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பே சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்-ஸ்டாலின்

தாமதப்படுத்தாமல் வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளது


அறிக்கை மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்

அறிக்கை மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்



இன்றைய செய்திகள் 10/03/18 Today News tamil

இன்றைய செய்திகள் 10/03/18 
Today News tamil 


*🔵⚪கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி அஸ்வினி உடல் காலை 9.30 மணிக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது*

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

🔵⚪ஓசூர் அருகே சூளகிரியில் கடந்த மாதம் 3 பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை போடூர் வனப்பகுதிக்கு வந்துள்ளது

* சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை


🔵⚪ஆன்மிக சாமியார் மலையேறி விட்டார்: ரஜினி இமயமலை சென்றது பற்றி ஜெயக்குமார் விமர்சனம்  


🔵⚪இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

* அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன்; புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை- ரஜினி

தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன் - ரஜினி

* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கேள்விக்கு "தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை" என ரஜினி பதில்


🔵⚪ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் கிடைத்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

* இந்தியாவிலேயே தமிழகம் அமைதி தவழும் மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

* ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் - ரஜினி-இன் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.


🔵⚪குமரி மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடலில் பலத்த காற்று வீசுவதால் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

முட்டம், குளச்சல் பகுதிகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

🔵⚪ஏர்செல் சிக்னல் சிக்கலால் பொதுமக்களின் வசதிக்காக பி.எஸ்.என்.எல். சேவை மையம் இன்றும் நாளையும் செயல்படும் என அறிவிப்பு


🔵⚪சென்னை துறைமுகம் வழியாக சீனாவுக்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.4 கோடி செம்மரங்கள் பறிமுதல்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடத்திய சோதனையில் 2 கண்டெய்னரில் இருந்த 10 டன் செம்மரம் சிக்கியது

செம்மரங்களை கொண்டு வந்தது யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வு துறை விசாரித்து வருகிறது


🔵⚪வலிமையான தலைமை இல்லாததால், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- அன்புமணி


🔵⚪தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 319 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்   

காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்   


🔵⚪மதுரவாயல் காவல்துறையினர் அஸ்வினி கொலைக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்

அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை- அஸ்வினி உறவினர்கள் 

அழகேசன், அஸ்வினி படிப்பிற்கு எந்த பணமும் அளிக்கவில்லை, எந்த உதவியும் செய்யவில்லை- அஸ்வினி உறவினர்கள்


🔵⚪மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணக்கமாக இருக்க வேண்டும்

கல்வி நிறுவனத்தின் உள்ளே, வெளியே மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க கவுன்சிலிங் தரவேண்டும்

மாணவர்களுக்கான ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்

- உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி அறிவுறுத்தல்

🔓 ஜம்மு - காஷ்மீர் மிதமான நிலநடுக்கம் எற்பட்டது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு


*நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (10-03-2018)*

 பாபநாசம்: 
 உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 32.05 அடி
நீர் வரத்து :  12.27 கன அடி
வெளியேற்றம் 1304.75 கனஅடி                                     

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 19.68 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு : 
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 84.31 அடி 
நீர் வரத்து : 32 கன அடி 
வெளியேற்றம்:  175 கன அடி

 🔵⚪மாணவி அஸ்வினி கொலை சம்பவம் போல் இனி நடக்காமலிருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்தும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* வரும் 15ம் தேதி தாக்கலாகும் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


🔵⚪ஜம்மு- காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவு

🔵⚪உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6வாரத்திற்குள் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க வலியுறுத்தியுள்ளோம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் நடைபெறும் – ஓபிஎஸ்

"மத்திய நீர்வளத்துறை குழுவிடம் மேலாண்மை வாரியம் குறித்து தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது"

மாணவி அஸ்வினியின் மரணம் உள்ளத்தையே உருக்கும் துயர சம்பவமாக உள்ளது – ஓபிஎஸ்

மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் – ஓபிஎஸ்

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி

🔵⚪காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் - அன்புமணி

என்னுடன் சேர்ந்த மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் - அன்புமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சூழ்ச்சி செய்கிறார்கள் - அன்புமணி

கர்நாடக தேர்தலுக்காக காவிரி பிரச்சனையில் அரசியல் செய்கிறார்கள்  - அன்புமணி

மார்ச் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் - அன்புமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரிய போராட்டம் நடக்கும் - அன்புமணி


🔵⚪தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன

ஜனவரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக முகாம்

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

🔵⚪பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2013-ல் தமிழக அரசு அறிவித்த 13 திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

 🔵⚪ டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற தலைமை செயலாளர் தலைமையிலான குழு,முதலமைச்சருடன் சந்திப்பு

* டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆலோசனை



🔵⚪மூடப்பட்ட மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


🔵⚪#JUSTIN போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்

* அஸ்வினி கொலை வழக்கில் அழகேசனுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்


🔵⚪பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் வீட்டை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

திருச்செந்தூரில் அய்யாக்கண்ணுவை தாக்கிய பாஜக பெண் நிர்வாகி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கூட்ட வேண்டும்

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கூட்ட வேண்டும்

* முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்



பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிம்கார்டு வாங்க குவிந்த மக்கள்

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிம்கார்டு வாங்க குவிந்த மக்கள்


சிதம்பரத்தில் தனியார் மொபைல் டவர் சரியாக செயல்படாததால், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிம்கார்டு வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.கடந்த ஒரு மாதமாக ஏர்செல் சிக்னல் தடைபட்டதால், அதன் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனம் வழங்கும் போர்ட் எண் மூலம் தாங்கள் விரும்பிய நெட் ஓர்க்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால் ஏராளமானோருக்கு போர்ட் எண் கிடைக்கவில்லை.சிதம்பரம் பகுதியில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் பி.எஸ்.என்,எல்., நெட் ஒர்க்கிற்கு மாறி வருகின்றனர். ஏர்செல் சிம் பயன்படுத்திய பெரும்பாலானவர்கள் சிம்கார்டு பி.எஸ்.என்.எல்., வாங்க அலுவலகத்தில் குவிகின்றனர்.ஏர்செல் போர்ட் எண் கிடைத்தவர்கள் அதே எண்ணில் பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெறுகின்றனர். போர்ட் எண் கிடைக்காதவர்கள் புதிய சிம் வாங்கிக்கொள்கின்றனர்.இதனால், சிதம்பரத்தில் வண்டிகேட், தெற்கு சன்னதி தெரு, அண்ணாமலை நகர் போன்ற அனைத்து பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களிலும் அதிக அளவில் கூட்டம் காணப் படுகிறது.

இன்றைய செய்திகள் 10/03/18 Today News tamil

இன்றைய செய்திகள் 10/03/18 
Today News tamil 


News  10/03/18 

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்.

காவிரி விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா செய்யத் தயார் : அன்புமணி ராமதாஸ் அதிரடி.

மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபுவுக்கு விமான போக்குவரத்து துறை கூடுதலாக ஒதுக்கீடு : பிரதமர் மோடியிடம் இருந்து விமான போக்குவரத்து துறை சுரேஷ் பிரபுவுக்கு மாற்றம் - குடியரசுத் தலைவர்.

உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு.

சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் பிரேதப்பரிசோதனை நிறைவு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

அரசுப் பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது - அமைச்சர் கேஏ.செங்கோட்டையன்.

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆகியோர் ஆலோசனை : இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

பாஜக என்பது தனிநபர் கட்சியோ, அம்மா - மகன் கட்சியோ அல்ல லட்சக்கணக்கான தொண்டர்களின் கட்சி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

ரஜினி, கமல் குறித்து ஏன் அதிகமாக கேள்வி கேட்கிறீர்கள் சரத்குமாருக்கும் முதல்வராகும் தகுதி உண்டு - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என காவிரி ஆலோசனை கூட்டத்தில் உறுதிபட தெரிவித்திருக்கிறோம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கூட்ட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்.

ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்.

மாணவிகள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு தனி பறக்கும் படை அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

ராமநாதபுரம்,கன்னியாகுமரி #மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச்செல்ல வேண்டாம் : சூறைக்காற்று வீசும் என்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன்.அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன் புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை - நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளவரை உண்மையான தேர்தலை எதிர்பார்க்க முடியாது - இயக்குநர் ரஞ்சித்.

தமிழகத்தில் விரைவில் 42 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் கிளை, புதுக்கோட்டையில் வரும் 26ம் தேதி திறக்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்.

சட்டம் ஒழுங்கு, காவிரிப் பிரச்னை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நடிகர் ரஜினிகாந்த் நழுவல் : இமயமலைக்குப் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழக முதலமைச்சராகும் ஸ்டாலினின் கனவு என்றும் கனவாகவே இருக்கும் டிடிவி தினகரனுக்கு அரசியல் தெரியவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

ரஜினியை தலைவராக ஏற்பதா, இல்லையா என்பதை மக்களே முடிவு செய்யட்டும் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

ஏர்செல் சிக்னல் சிக்கலால் பொதுமக்களின் வசதிக்காக பிஎஸ்என்எல் சேவை மையம் இன்றும் நாளையும் செயல்படும் என அறிவிப்பு.

மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்.
மாணவி அஸ்வினி கொலை சம்பவம் போல் இனி நடக்காமலிருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்தும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

என் மீது வெறுப்பு காட்டுவோர் அதற்கான காரணம் கூறமுடியாமல் ராசியில்லாதவன் எனக்கூறுகின்றனர்.2004 தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற காரணமாக இருந்தவன் நான் - வைகோ.

பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.

காஞ்சிபுரம் பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி 16 ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் - காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

பாஜக மாநில செயலாளர் கேடி.ராகவன் வீட்டை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது : திருச்செந்தூரில் அய்யாக்கண்ணுவை தாக்கிய பாஜக பெண் நிர்வாகி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வரும் 20 வரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்புவாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது : உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கேவியட் மனு.

நாசிக் : கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிராவில் விவசாயிகள் நடத்தி வரும் மெகா பேரணி 4ம் நாளை எட்டியுள்ளது. 

உதகை தாவரவியல் பூங்காவில் மே 18,19,20 ஆகிய தேதிகளில் மலர்க்கண்காட்சி.

மார்ச் 16ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

தென்மேற்கு வங்க கடல் பகுதி முதல் அதனை ஒட்டியுள்ள இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது இதன் காரணமாக மன்னார்வளைகுடா முதல் கன்னியாகுமரி கடலோர பகுதியில் வலுவான சுழல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

பொள்ளாச்சி, உடுமலையில் தூர்தர்ஷன் நிலையம் மூடல்

பொள்ளாச்சி, உடுமலையில் தூர்தர்ஷன் நிலையம் மூடல் :

பொள்ளாச்சி, உடுமலையில் இயங்கி வந்த துார்தர்ஷன் ஒளிபரப்பு நிலையம், வரும் 12ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படும் என, துார்தர்ஷன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு தொலைக்காட்சி நிறுவனமான துார்தர்ஷன், 'டிவி' சேனல், நிதிநெருக்கடியில் திணறிவருகிறது.இதன் காரணமாக, குறைந்த பவர் டிரான்ஸ்மிட்டருடன் இயங்கி வரும் துார்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில், தொலைக்காட்சி இயக்குனரகம் ஈடுபட்டு உள்ளது.நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுார் ஒளிபரப்பு நிலையம், 2017, மே 5 ல் மூடப்பட்டது.வால்பாறை, கவரக்கல் ஒளிபரப்பு நிலையம், கடந்த பிப்., 12 முதல் மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள், பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், உடுமலை துார்தர்ஷன் நிலைய ஒளிபரப்பு சேவையும், வரும் 12ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளதாக, கோவை துார்தர்ஷன் பராமரிப்பு மைய இணை இயக்குனர், களஞ்செழியன் தெரிவித்துள்ளார்.


ரயில் மோதியும் மயிரிலையில் உயிர் தப்பிய காளை

ரயில் மோதியும் உயிர் தப்பிய காளை..
#Tiruvannamalai #Bull
ரயில் மோதியும் மயிரிலையில் உயிர் தப்பிய காளை







இன்றைய ராசிபலன்கள் 10.03.2018 Today Tamil Rasipalan


இன்றைய ராசிபலன்கள் 10.03.2018 Today Tamil Rasipalan 

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜



இன்றைய ராசிபலன்கள் - 


🔔 10.03.2018  🔔



🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♈ மேஷம் : 

அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯


♉ ரிஷபம் :

தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : விவேகம் வேண்டும்.
ரோகிணி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♊ மிதுனம் :

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : அன்பு அதிகரிக்கும். 
திருவாதிரை : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : பயணங்களில் கவனம் தேவை.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♋ கடகம் :

எதிர்பார்த்த வங்கிக் கடனுதவிகள் கிடைக்கும். மனைவியால் சுப விரயம் ஏற்படும். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள்h அதிகரிக்கும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♌ சிம்மம் :

பூர்வீக சொத்துகளினால் சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : சேமிப்பு உயரும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯


♍ கன்னி :

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் உபதேசம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். பணிகளில் உழைப்பிற்கு ஏற்ற முன்னுரிமை கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : செயல்பாடுகள் சிறப்படையும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ துலாம் :

தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தாய் வழி உறவினர்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : மதிப்பு உயரும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : காரிய சித்தி உண்டாகும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ விருச்சகம் :

தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : எண்ணிய உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ தனுசு :

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கறுப்பு

மூலம் : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ மகரம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடிப் பேசி மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும். 
அவிட்டம் : நிதானம் தேவை.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ கும்பம் :

கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஞானம் கிடைக்கும்.
சதயம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

🔯🌹⚜🌹🕉🌹⚜🌹🔯

♍ மீனம் :

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். மறுமணத்திற்கான வரன்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆரோக்கிய குறைகள் நீங்கும்.
ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

உத்தமபாளையத்தில் அதிகரித்துள்ள புதிய வாடிக்கையாளர்களால் பி.எஸ்.என்.எல். 3G சேவையில் தொய்வு

உத்தமபாளையத்தில் அதிகரித்துள்ள புதிய வாடிக்கையாளர்களால் பி.எஸ்.என்.எல். 3G சேவையில் தொய்வு

தேனி மாவட்டம் உத்தம பாளையம் பகுதியில் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருதால் பி.எஸ்.என்.எல். சேவை செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஏர்செல் தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக முடங்கி யதையடுத்து அதனுடைய 1.75 கோடி  வாடிக்கையாளர்கள்பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற தனியார் சேவைக்கு மாறி வருகின்றனர்.இந்நிலையில், ஏர்செல்லுக்கு ஏற்பட்ட அதேநிலையிலேயே பிற தனியார்நிறுவனங் களும் இருப்பதால் அவர் களுடைய சேவையிலும் பாதிப்பு இருப்பதாக சமூக வளைதலங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அடுத்து பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மத்திய அரசு நிறுவனமனமான பி.எஸ்.என்.எல். சேவையை தேர்வு செய்து ஆர்வத்துடன் மாறி வருகின்றனர்.
புதிய வாடிக்கையாளர் களால் சேவையில் தொய்வு: ஏர்செல்லில் இருந்தும் மாறும் புதிய வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு வாரத்தில்  மட்டுமே பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு துறைக்கு லட்சக்கணக்கில் மாறியுள்ளனர். கணிசமான அளவுக்கு புதிய வாடிக்கையாளர்கள் உயர்ந்த  அளவுக்கு அதன் தொழில் நுட்பத்தில் மாற்றம் இல்லை. மேலும் அதன் சேவையில் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனால் எளிதாக யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் 3 ஜி சேவையும் திருப்தி கரமாக இல்லாத நிலையில் உத்தம பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பி.எஸ்.என்.எல். சேவையில் கடந்த ஒரு வாரமாக தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே தற்போது அதிகரித்துள்ள இந்த புதிய வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் வகையில் தனது சேவை யை துரிதப்படுத்தி, தடையில்ல  சேவையை கொடுக்க புதிய தொழில் நுட்பத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் புகுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Friday, March 9, 2018

இன்றைய செய்திகள் 09/03/18 Today News. Today

இன்றைய செய்திகள் 09/03/18 
Today News. Today 


 09/03/18 

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்தால், குற்றவாளிக்கு மரண தண்டனை - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பள்ளி நிர்வாகங்களே முழு பொறுப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.

உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழுக்கு 2-வது இடம், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள்.

யாழ்பாண நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தககங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால்அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது - போக்குவரத்து காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு.

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் தாக்கிக் கொண்டனர்.

விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே புதுக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி.

எங்கள் கட்சி பெண் நிர்வாகியை தாக்கிய மிகக் கொச்சயான நபர் அய்யாகண்ணு; அவரை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை - ஹெச் ராஜா.

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் - பா.ஜனதா.

அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நேர்மையான, திறமையான வழக்கறிஞர்களை நியமிக்காவிட்டால், அது மாநிலத்தின் நலனுக்கு எதிரானதாகி விடும் - உயர்நீதிமன்றம்.

கர்நாடகா பாகல்கோட் தாலுகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ.

திரிபுராவில் லெனின் சிலைஅகற்றப்பட்டதற்கு 
கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் 
பெங்களூருவில் போராட்டம்.

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்துவிட்டு, அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் - துணை ஆணையர் அரவிந்தன்.


🔵⚪புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை இந்தியாவிற்கான சீன தூதர் "லோ சாஓஹுய்" மரியாதை நிமித்தமாக சந்திப்பு .


🔵⚪கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டதற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்.

* மனித நேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத இத்தகைய வன்செயல்கள் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல - பன்னீர்செல்வம்.


🔵⚪பா.ஜ.க. பெண் நிர்வாகியை அய்யாக்கண்ணு திட்டியதால் அவர் மருத்துவமனையில் உள்ளார் -தமிழிசை. அய்யாக்கண்ணு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழிசை எச்சரிக்கை


🔵⚪சென்னையில் மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திய பின்னர் அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் - தி.நகர் காவல் ஆணையர் அரவிந்தன் பேட்டி 

🔵⚪பி.ஐ.பி. (Press Information Bureau) புதிய இயக்குநர் ஜெனரலாக எஸ்.ஆர்.கர் நியமனம்; மே 1ஆம் தேதி முதல் பெறுப்பேற்பார் - மத்திய அரசு 

🔵⚪மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும் - தமிழக காவல்துறைக்கு சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை.

🔵⚪விழுப்புரம்,கண்டமங்கலம் அருகே புதுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மதிய உணவு முட்டை தக்காளி தொக்கில் பல்லி விழுந்து கிடந்த உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் உட்பட 9 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*🔵⚪கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்ற வழக்கு; சிறையில் இருந்து கணபதி வெளியே வந்தார்*

*🔵⚪வேலூர் : 2016-ல் அணைகட்டு அருகே முன்விரோதம் காரணமாக வேலு என்பவரை கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட முதன்மை நீதிமன்றம்.*




♈🇮🇳9-3-2018-friday-வெள்ளிக் கிழமை*   ♈

♈🇮🇳 தூத்துக்குடி சி.வ.அரசுப்பள்ளியில்10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஆனந்த கிருஷ்ணன் துப்பாக்கியில் இருந்த குண்டு வெளியேறியுள்ளது. பணி முடிந்து துப்பாக்கியை சோதனை செய்தபோது வானத்தை நோக்கி குண்டு பாய்ந்தது. இச்சாம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள் உள்ளதாக உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. ஜப்பன், சீன மொழிகளை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை தமிழ் மொழி பிடித்துள்ளது

♈🇮🇳 சென்னை மெரீனா கடற்கரை சாலையில் லைட் அவுஸ் , குடிசை மாற்று வாரிய சிக்னல் அருகில் வாகன சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர் . குடிசை மாற்று வாரிய சிக்னல் அருகில் ஒரு சின்ன யானை லோடு வண்டியை மடக்கினர். காக்கி உடையணிந்த காவலர் ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த லோடு வண்டி ஓட்டுனர் இறங்கும்போது போது வாகனங்கள் வருகிறதா என்று பார்க்காமலேயே திடீரென கதவை திறக்கிறார். இதை சற்றும் எதிர் பார்க்காத வாகன ஓட்டிகள் அச்சத்தில் மிரண்டனர். தற்போது ஒரு பெண் இறந்தும் கூட வாகன ஓட்டுனர்களும் , காவல்துறையும் உணரவில்லை.ஒரு உயிர் விலை மதிப்பில்லாதது .அதற்கு சாலை விதிகளை ஒழுக்கத்தை பண்பை கடைபிடிக்காமல் காவலர்களும் ஓட்டுனர்களும் செய்யும் தவறுகள் அந்த உயிர்க்கு அரசாங்கம் விலை நிர்ணயிக்கும் போது தமிழகம் மனித நேயமில்லாத மனிதர்களை கொண்ட நாடா !!!!!??????விஸ்வரூபம்    

♈🇮🇳 பழனி கோவிலில் மார்ச் 12 முதல் வின்ச் நிறுத்தம்

♈🇮🇳 சென்னை: கொரட்டூர் ரயில் நிலையத்தில் மாணவர்களிடையே மோதல்

♈🇮🇳 மே 18, 19, 20ல் ஊட்டியில் மலர் கண்காட்சி

♈🇮🇳 சொத்து வரி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

♈🇮🇳 தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

♈🇮🇳 தமிழகத்தில் பழைய படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பு

♈🇮🇳 காவிரி விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

♈🇮🇳 சேலத்தில் ஒரே நாளில் 62ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ரவுடிகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்

♈🇮🇳 சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 50 மீ. ரைபில் பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

♈🇮🇳 திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மன்னவனூரில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வ.உ.சி சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து மன்னவனூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு

FEDERATIN  OF  CABLE  TV  ASSOCIATIONS  OF  TAMILNADU
தமிழ்நாடு  கேபிள்  டிவி  சங்கங்களின்  கூட்டமைப்பு
கேபிள்  குடும்பத்தின்  வாழ்வாதாரத்தை  பாதுகாத்தல்,
புதிய  கேபிள்  அமைப்புகள்  உருவாவதைத்  தடுத்தல்,
எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள்  ஆப்பரேட்டர்களின்  ஏரியாவில்
 நேரடியாக  இணைப்பு  வழங்குதல்  போன்ற  அநீதிகளை 
தடுப்பதில்  கூட்டமைப்பு  உறுதியாக  உள்ளது.
விழுப்புரம்  மாவட்டத்தில்  புதிய  ஆப்பரேட்டர்கள்  உருவாக்
கப்படுவதற்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப் படவில்லை 
என  தங்களை  எதிரணியாக  நினைக்கின்றவர்கள்   தொடர்ந்து 
கேள்வி  எழுப்பினார்கள். சகோதரர் கில்ட்.பாண்டியும்  உடனடி
 நடவடிக்கை  தேவை என  வலியுறுத்தினார். திரு.ஆறுமுகம்,
டி.வி.ரமேஷ்,  தங்கராஜ்  மற்றும்  பலர்  ஆர்ப்பரித்தெழுந்தனர்.
அவசரத்தை  முன்னிட்டு  09-03-2018 அன்று  பாதிக்கப்
பட்ட  விழுப்புர  ஆப்பரேட்டர்கள்  சென்னை  கூட்ட மைப்பு 
தலைமை  அலுவலகம்  வர  கோரப்பட்டு  12
ஆப்பரேட்டர்கள்  வந்தனர். அனைவரிடமும்  தனியாக
விசாரிக்கப்பட்டு  எழுத்து  மூலமாக  மனு  பெறப்பட்ட
பின்னர்  கேபிள்  காஸ்ட்  நிறுவன  மேலாளர்  திரு.டி.
விவேகானந்தன்  ஐ.ஏ.எஸ். அவர்களை  நேரடியாக
சந்திப்பதென  முடிவு  செய்து  கூட்டமைப்பின்  சார்பாக
மனு  தயாரிக்கப்பட்டு  அவரை  சந்தித்தோம். (மனு நகல் 
பார்கவும்)
*கேபிள்  காஸ்ட்  நிறுவனம்  புதிய  போட்டி  ஆப்பரேட்டர்களை
 உருவாக்காது. அப்படி  மாவட்ட  கட்டுப்பாட்டு  அறையினர்
 உருவாக்கி  இருந்தால்  அவர்கள்  கொடுத்த  சிக்னல்  துண்டிக்கப்
படும்  என்கிற  உறுதி   மொழியை  ஆப்பரேட்டர்களிடம் 
திரு.விவேகானந்தன்  அவர்கள்  நேரடியாக  தெரிவித்தார்.
கூட்டமைப்பின்  சார்பாக  கேபிள்  டிவி  ஆப்பரேட்டர்
தான்  விரும்பும்  நிறுவனத்தோடு  முறையாக  ஒப்பந்
தம்  செய்து  தொழில்  செய்வதை  வரவேற்கிறோம்.
ஆனால்  ஆப்பரேட்டர்களுக்கு  எதிராக  எந்த  நிறுவனம் 
செயல்பட்டாலும்  எதிர்ப்போம்  என  எடுத்துரைக்கப்
பட்டுள்ளது .ஒருவார  கால  அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது.
அதற்குள்  பிரச்சனை  தீராவிட்டால்   தமிழகத்தில்  விழுப்புரம்
மாவட்டத்திலிருந்து  கேபிள் டிவி  தொழிலில்  வளரும் 
களைகள்  அகற்றும்  பணி  ஆரம்பமாகும்.
***சென்னையில்  இருந்து  பல  ஆப்பரேட்டர்கள்  புகார்
  மனு தந்துள்ளனர். அதில்  சம்மந்தப்பட்ட  நிறுவன
  நிர்வாக  இயக்குனர்களை  ஆப்பரேட்டர்களோடு
  நேரடியாக  சென்று  சனி/திங்கள்  கிழமைகளில்
  சந்திக்கிறோம்.
கேபிள்  டிவி  ஆப்பரேட்டர்களின்  துணையோடு 
கூட்டமைப்பு  நிச்சயம்  வென்று  காட்டும்.
          வணக்கத்துடன்-டி.ஜி.வி.பி.சேகர்.

மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்

மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் 

மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது 

டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்னையில் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகளும் நடைபெறாது 

- தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்


விக்கிப்பீடியாவில் அமைச்சர் செல்லுர் ராஜுவின் தகவல்களை இறந்ததாக மாற்றி பதிவிட்ட மர்ம நபர்கள் .

விக்கிப்பீடியாவில் அமைச்சர் செல்லுர் ராஜுவின்  தகவல்களை இறந்ததாக மாற்றி  பதிவிட்ட மர்ம நபர்கள் .


ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

*ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ*

*ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ*


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் காலதாமதம் குழப்பம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் - ஸ்டாலின்.




திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது - திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு

*திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது - திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு*


​சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி ஏற்கனவே அழகேசனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக தகவல்​

சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி ஏற்கனவே அழகேசனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக தகவல்


அஸ்வினியின் காதல் திருமணத்தை விரும்பாத பெற்றோர் பிரித்து வைத்து உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர்
உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி

INXMediaCase : CBI gets custody of KartiChidambaram till 12th March

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி


காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் டெல்லி சென்ற குழு நாளை ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் டெல்லி சென்ற குழு நாளை ஆலோசனை

* அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை மதியம் 1 மணிக்கு தலைமை செயலர், அமைச்சர்கள் ஆலோசனை



12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்தால், குற்றவாளிக்கு மரண தண்டனை - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்தால், குற்றவாளிக்கு மரண தண்டனை - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.


பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பள்ளி நிர்வாகங்களே முழு பொறுப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.

பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பள்ளி நிர்வாகங்களே முழு பொறுப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.

* ஒவ்வொரு பள்ளியிலும் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர்.


சென்னை தனியார் கல்லூரியில் காதலிக்க மறுத்த மாணவி குத்திக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ராமதாஸ்

சென்னை தனியார் கல்லூரியில்  காதலிக்க மறுத்த  மாணவி குத்திக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

இத்தகைய  கொடிய நிகழ்வுகளைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது : பாமக நிறுவனர் ராமதாஸ்


இன்றைய செய்திகள் 09/03/18 Today News. Today

இன்றைய செய்திகள் 09/03/18 Today News. Today 


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்திட வேண்டும் -டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தல்.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்குள் காவிரி நதிநீர் தொடர்பான செயல்திட்டம் உருவாக்கப்படும்.அது காவிரி மேலாண்மை வாரியமாக கூட இருக்கலாம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்.

சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த எழும்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச்செல்வன்.

மீளமுடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம்.
மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு - இந்திய உச்சநீதிமன்றம்.

காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம் பெறக்கூடிய பிரதிநிதிகள் பெயரை 4 மாநில அரசுகளும் சமர்பிக்க அறிவுறுத்தல் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்.

தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிடும் காவிரி நீரில் அதிக அளவு கழிவுநீர் கலந்து வருகிறது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.

இரட்டை இலை சின்னம் கோரிய வழக்கை தொடர்ந்து நடத்துவேன்.சின்னம், கொடி தொடர்பான பணிகள் இருப்பதால் நாளை செல்லவிருந்த தஞ்சை சுற்றுப்பயணம் ரத்து - டிடிவி.தினகரன் எம்எல்ஏ.

விசாரணை முடிந்த பின் எல்லாம் தெரிய வரும் - ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தில் ஆஜரான பின் விவேக் ஜெயராமன் பேட்டி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலதாமதப்படுத்துவது வருத்தமளிக்கிறது - மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் 5-வது நாளாக போராட்டம்.

தமிழகத்தில் குப்பை அரசியல் நடைபெற்று வருகிறது தமிழகத்தின் மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - மும்பையில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு.

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன்.நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்.

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை அமலாக்கத்துறை, சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

நானும், ராஜீவ்காந்தியும் முக்கிய கோயில்களுக்கு சென்று இருந்தாலும் அதைவெளியே காட்டிக்கொண்டதில்லை.
காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என மக்களிடம் தவறாக பரப்புகிறது பாஜக - சோனியா காந்தி குற்றச்சாட்டு.

சிலைக்கடத்தல் தொடர்பான 21 உத்தரவுகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்ச் 23 வரை இறுதி கெடு விதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்.

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - கர்ப்பிணி உயிரிழப்பு சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் கருத்து.

குக்கர் சின்னம் என்றாலே ஊழல் சின்னம் தான்; தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு சரியில்லை - தமிழிசை.

சிரியா போரில் சிறு குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது அதிர்ச்சியை தருகிறது.பொதுமக்களின் உயிர் பறிக்கப்படுவதை ஐநா. மன்றம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் - முக.ஸ்டாலின்.

"'நாயக்கர்' சிலையை தகர்ப்பது குறித்து நாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறோம். ஆனால், 1947ல் பெரியார் பிரிட்டிஷ் ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் பிரிட்டிஷ் படையினர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்''- சுப்பரமணிய சாமி.

ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வருகிற 12-ல் பூங்குன்றன், 14-ல் மருத்துவர் சிவக்குமார், 15-ல் ஜெயலலிதாவின் தனி செயலாளர் வெங்கட்ரமணன் ஆஜராக உத்தரவு - ஆறுமுகசாமி ஆணையம்.

பெற்றோர்களின் பணத்தில் சினிமா பார்ப்பதை ஏற்கும் ரஜினி, மாணவர்கள் அரசியலுக்கு வருவதை ஏன் ஏற்கவில்லை? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விதிகளை மீறும்போது துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்கின்றன திருச்சியில் உஷா உயிரிழப்பு, சென்னையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் பலி குறித்து நீதிமன்றம் கருத்து - சென்னை உயர்நீதிமன்றம்.

மதுரை : திருவாதவூரில் உள்ள +2 படிக்கும் அரசு பள்ளி மாணவன் அர்ஜூனை அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவன் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா தற்போது காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சிறப்பு வழிபாடு, அங்கு நடைபெறும் சுதர்சன யாகத்தில் பங்கேற்பு.

போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷாவின் உடல் நல்லடக்கம்
திருச்சி மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நாளை ஈரோடு மாமரத்துப்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியை திறந்து வைக்கிறார் கமல்ஹாசன் : பெருந்துறையில் பிற்பகல் 2.15க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்கிறார் கமல்.

நடிகர் ரஜினிகாந்த் நாளை இமயமலை செல்கிறார்.

புதுச்சேரி வைத்திக்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகி மாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண்.

மதுரையில் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.2,500 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது - வருமான வரித்துறை.

லஞ்சப்புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலை.பேராசிரியர் தர்மராஜூக்கு ஜாமீன் வழங்கியது கோவை சிறப்பு நீதிமன்றம்.

பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது.


சற்றுமுன் - காஞ்சிபுரம் -  *கீழ்ஒட்டிவாக்கம் என்ற பகுதியில் இருசக்ர வாகனத்தில் சென்றவர்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. மற்றொருவர் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி.வாலாஜாபாத் போலீஸார் விசாரணை*

மாணவி அஸ்வினி கொலையால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

*மாணவி அஸ்வினி கொலையால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு*

*கே கே நகர் மீனாட்சி கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்*

*கழுத்தில் கத்தியால் குத்தியாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல்*

*சுவாதி  போல அஸ்வினி கழுத்தை அறுத்து கொலை செய்தார் அழகேசன்*

*சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலிலேயே மாணவி குத்திக் கொலை..!*

*கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் பெற்றோர் ஏற்கனவே கொலையாளி அழகேசன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..!*

அஸ்வினி மற்றும் அழகேசன் புகைப்படம்



எய்ம்ஸ் அமைப்பது குறித்து வரும் 13ம் தேதி மத்தியஅமைச்சரை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்க உள்ளார்.



*எய்ம்ஸ் அமைப்பது குறித்து வரும் 13ம் தேதி மத்தியஅமைச்சரை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்க உள்ளார்.*

மத்தியஅமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை.

எய்ம்ஸ் தொடர்பான அனைத்து தகவல்களும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது :   சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக உத்தரவு

*ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக உத்தரவு*

*வருகிற 12-ல் பூங்குன்றன்,

* 14-ல் மருத்துவர் சிவக்குமார்,

* 15-ல் ஜெயலலிதாவின் தனி செயலாளர் வெங்கட்ரமணன் ஆஜராக உத்தரவு - ஆறுமுகசாமி ஆணையம்



போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷாவின் உடல் நல்லடக்கம்

போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷாவின் உடல் நல்லடக்கம்

திருச்சி மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணியான உஷா நேற்று முன்தினம் உயிரழந்தார்



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More