Hi manisat
#ref-menu

Saturday, March 10, 2018

இன்றைய செய்திகள் 10/03/18 Today News tamil

இன்றைய செய்திகள் 10/03/18 
Today News tamil 


*🔵⚪கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி அஸ்வினி உடல் காலை 9.30 மணிக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது*

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

🔵⚪ஓசூர் அருகே சூளகிரியில் கடந்த மாதம் 3 பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை போடூர் வனப்பகுதிக்கு வந்துள்ளது

* சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை


🔵⚪ஆன்மிக சாமியார் மலையேறி விட்டார்: ரஜினி இமயமலை சென்றது பற்றி ஜெயக்குமார் விமர்சனம்  


🔵⚪இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

* அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன்; புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை- ரஜினி

தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன் - ரஜினி

* காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கேள்விக்கு "தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை" என ரஜினி பதில்


🔵⚪ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் கிடைத்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

* இந்தியாவிலேயே தமிழகம் அமைதி தவழும் மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

* ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் - ரஜினி-இன் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.


🔵⚪குமரி மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடலில் பலத்த காற்று வீசுவதால் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

முட்டம், குளச்சல் பகுதிகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

🔵⚪ஏர்செல் சிக்னல் சிக்கலால் பொதுமக்களின் வசதிக்காக பி.எஸ்.என்.எல். சேவை மையம் இன்றும் நாளையும் செயல்படும் என அறிவிப்பு


🔵⚪சென்னை துறைமுகம் வழியாக சீனாவுக்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.4 கோடி செம்மரங்கள் பறிமுதல்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடத்திய சோதனையில் 2 கண்டெய்னரில் இருந்த 10 டன் செம்மரம் சிக்கியது

செம்மரங்களை கொண்டு வந்தது யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வு துறை விசாரித்து வருகிறது


🔵⚪வலிமையான தலைமை இல்லாததால், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- அன்புமணி


🔵⚪தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 319 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்   

காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்   


🔵⚪மதுரவாயல் காவல்துறையினர் அஸ்வினி கொலைக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்

அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை- அஸ்வினி உறவினர்கள் 

அழகேசன், அஸ்வினி படிப்பிற்கு எந்த பணமும் அளிக்கவில்லை, எந்த உதவியும் செய்யவில்லை- அஸ்வினி உறவினர்கள்


🔵⚪மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணக்கமாக இருக்க வேண்டும்

கல்வி நிறுவனத்தின் உள்ளே, வெளியே மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க கவுன்சிலிங் தரவேண்டும்

மாணவர்களுக்கான ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்

- உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி அறிவுறுத்தல்

🔓 ஜம்மு - காஷ்மீர் மிதமான நிலநடுக்கம் எற்பட்டது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு


*நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (10-03-2018)*

 பாபநாசம்: 
 உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 32.05 அடி
நீர் வரத்து :  12.27 கன அடி
வெளியேற்றம் 1304.75 கனஅடி                                     

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 19.68 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு : 
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 84.31 அடி 
நீர் வரத்து : 32 கன அடி 
வெளியேற்றம்:  175 கன அடி

 🔵⚪மாணவி அஸ்வினி கொலை சம்பவம் போல் இனி நடக்காமலிருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்தும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* வரும் 15ம் தேதி தாக்கலாகும் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


🔵⚪ஜம்மு- காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவு

🔵⚪உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6வாரத்திற்குள் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க வலியுறுத்தியுள்ளோம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் நடைபெறும் – ஓபிஎஸ்

"மத்திய நீர்வளத்துறை குழுவிடம் மேலாண்மை வாரியம் குறித்து தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது"

மாணவி அஸ்வினியின் மரணம் உள்ளத்தையே உருக்கும் துயர சம்பவமாக உள்ளது – ஓபிஎஸ்

மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் – ஓபிஎஸ்

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி

🔵⚪காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன் - அன்புமணி

என்னுடன் சேர்ந்த மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் - அன்புமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சூழ்ச்சி செய்கிறார்கள் - அன்புமணி

கர்நாடக தேர்தலுக்காக காவிரி பிரச்சனையில் அரசியல் செய்கிறார்கள்  - அன்புமணி

மார்ச் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் - அன்புமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரிய போராட்டம் நடக்கும் - அன்புமணி


🔵⚪தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன

ஜனவரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக முகாம்

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

🔵⚪பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2013-ல் தமிழக அரசு அறிவித்த 13 திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

 🔵⚪ டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற தலைமை செயலாளர் தலைமையிலான குழு,முதலமைச்சருடன் சந்திப்பு

* டெல்லியில் நடைபெற்ற காவிரி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆலோசனை



🔵⚪மூடப்பட்ட மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


🔵⚪#JUSTIN போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்

* அஸ்வினி கொலை வழக்கில் அழகேசனுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்


🔵⚪பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் வீட்டை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

திருச்செந்தூரில் அய்யாக்கண்ணுவை தாக்கிய பாஜக பெண் நிர்வாகி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More