Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews



*பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 110 இடங்கள் தான் கிடைக்கும் என கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்க கட்டுரையில் இன்று வெளியாகியுள்ளது*

*விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லியில் வரும் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்*

*தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்யுமாறு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

 *இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல்முறையாக தங்கள் நாட்டு வீதியில் விஷ ரசாயனத் தாக்குதல் நடத்தி முன்னாள் உளவாளியை கொல்ல முயன்றதாக புதின் மீது பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது*

*பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான தும்கா கருவூலம் தொடர்பான கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது*

*பிரிட்டன் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்லே திருமணத்திற்கு ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்*

*கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்!*

வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ந் தேதி முதல் சென்னை துறைமுகத்திற்கு சரக்கு எடுத்து வரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

*ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : காலிறுதியில், ஜப்பானின் ஒகுஹாராவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து.*

*மோடிக்கு ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் பயப்படட்டும் நான் ஏன் பயப்படணும்? தில் காட்டும் கே.சி.பழனிசாமி!*

*அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதற்கு ஓபிஎஸ்க்கோ, இபிஎஸ்க்கோ அதிகாரம் இல்லை  என்றும், அவர்கள் இருவரையும் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி "தில்" பேச்சு,*

‬: *ஆட்டம் ஆரம்பம்,*

*சசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ்.. மோடிக்கு பயந்து என்னை நீக்குகிறார்கள்.. கேசி பழனிச்சாமி பகீர்,*

*கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக முன்னாள் எம்பியும் செய்தித்தொடர்பாளருமான கேசி பழனிச்சாமியை அதிமுக தலைமைக்கழகம் கட்சியில் இருந்து நீக்கியது.*

*கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதிவியில் இருந்தும் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளார். அவருடன் கட்சித் தொண்டர்கள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.*

*இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கேசி பழனிச்சாமி, துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடினார். காவிரிக்காக ஓபிஎஸும் ஈபிஎஸும் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்,*

*அன்று கையைக் கட்டிக்கொண்டு சசிகலாவின் காலில் விழுந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று விமர்சித்த கேசி பழனிச்சாமி, தான்தான் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தேன் என்றும் தெரிவித்தார்.*

*ஆனால் ஓபிஎஸும் ஈபிஎஸும் மோடிக்கு பயந்துகொண்டு தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தான் எம்ஜிஆரால் கட்சியில் சேர்க்கப்பட்டவன் என்றும் ஜெயலலிதாவால் எம்எல்ஏ, எம்பியாக்கப்பட்டவன் என்றும் தன்னை நீக்கியது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.*

: *எங்களது நோக்கம் நிறைவேறாத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கடிதம்.*

*ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம் - சந்திரபாபு நாயுடு.*

*பெங்களூருவில் கனமழை : சிலிகுரி, கொச்சி, டெல்லி, ராஞ்சி, அமிர்தசரஸ் நகரங்களிலிருந்து சென்ற 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்.*

*சென்னையிலிருந்து, பெங்களூருக்கு செல்ல வேண்டிய 2 விமானங்கள் புறப்பாடு தாமதம்.*

*இறுதி போட்டியில் நுழைந்தது வங்கதேசம்.*

*முத்தரப்பு டி20 கிரிக்கெட் : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More