Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews


♈🇮🇳  *8..30pm-16-3-2018-friday-வெள்ளிக்கிழமை*   

♈🇮🇳 அன்புதான் இன்று ஆட்சி தமிழகத்தில் ஊடகம் நீதித்துறை செய்தியாளர்கர்கள் ஒத்துழைப்புடன் !!!!!!????அந்த ஒரு நபரை பிடிக்க முடியலையே .என்னத்த படிச்சி என்னத்த செய்றது

♈🇮🇳 மதுரை திரைப்பட தயாரிப்பாளர் அன்பு [ எல்லா கட்சிகளின் அன்பு உள்ளம் ] தமிழகத்தில் இருக்கும் போது நீதி நிலை நாட்டபடும். அன்புவிடம் அடைக்கலம் ஆகுங்கள் ..எல்லா கட்சியினருக்கும் கட்டிங் வெட்டுங்கள் அவர் பகிர்ந்தளிப்பார் ..தனது மேனேஜரை வாட்ஸ் அப்பில் பேச சொல்லி விட்டு திருப்பூர் சுப்பிரமணியன்

தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது

♈ 🇮🇳    இது ஒரு கண் துடைப்பு .திரை உலகம் நேர்மையான உலகமல்ல .எடிட்டிங் உட்பட எல்லா தொழிலிலும் தொல்லைகள் திருட்டு அதிகம். பெண் சகவாசத்தால் பணத்தை இழக்கும் தயாரிப்பாளர்களே அதிகம். அங்கு கிடைக்கும் சுகங்களை அனுபவித்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் வெளி வர முடியாது. சேர்த்த பணத்தையெல்லாம் அங்கேயே கொட்ட சொல்லும் - இவங்க வெவ்வேறு இணைய தளங்களை உருவாக்கி கொண்டே உள்ளனர் . இந்த கைதால் நன்மை ஏதுமில்லை .அன்புவை காவல்துறை நெருங்க முடியவில்லை. ஐங்கரன் என்பவர் முன்பே திருட்டு விசிடியில் பெயர் அடிபட்டவர் .அவரை நெருங்க முடியவில்லை .புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த 28இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கையை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

♈🇮🇳 நாளை காலை 9.00 மணியளவில் காஞ்சிபுரம் கோட்ராம்பாளயம் தெருவில் பழைய வேலை வாய்ப்பு அலுவலகம் இருந்த இடத்தில் முதன்முறையாக "தொழிலாளர் நீதிமன்றம்" துவங்கபடுகிறது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி செல்வி.இந்திராபோனர்ஜி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.பின்னர் பெரியார் தூண் அருகே உள்ள பாபு திருமண மண்டபத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

♈🇮🇳 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இப்போது மறுத்துள்ளார். தங்களது அனுமதி இல்லாமல் 'அட்மின்' இப்படி ஒரு ட்விட்டை போட்டுவிட்டதாக கூறியுள்ளார் வீரப்ப மொய்லி மகன் ஹர்ஷா மொய்லி
♈🇮🇳 கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 35-வது வார்டு எம்எஸ்கே நகரில் புதிதாக தொடங்க இருக்கும் அரசு மது பானக் கடை அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் மதுபானக் கடைக்கான கட்டடம் கட்ட தொடங்கினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜிடம் மனு அளித்தனர். இதை விசாரித்த ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் கண்டீப் பாக டாஸ்மாக் கடை வராது. மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்

♈🇮🇳 திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு அளித்துள்ளனர்

♈🇮🇳 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில்  அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

♈🇮🇳 ISRO-SAC Notification 2018.ISRO- Space Applications Centre (SAC), Ahmedabad has released a notification for the recruitment of Technician.Interested and eligible candidates can apply for the vacancies.Last Date for Submission of Application is on April 02nd, 2018

♈🇮🇳 பாஸ்போர்டில் உள்ள பெயர் விசாவில் உள்ளதுடன் பொருத்தமாக இருக்க வேண்டுமாம் மத்திய அரசு தெரிவிக்கிறது ----india@ustraveldocs.com H1-B பிரச்சனையால் முன் குறிப்பிட்டுள்ள இமெயில் க்கு சென்று உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் .காலதாமதம் செய்யாமல் விவரங்களை பெற்று சரி செய்யுங்கள் அமெரிக்க செல்பவர்கள்

♈🇮🇳 புழல் சிறையில் உள்ள மருத்துவமனை மருத்துவர் பணியட மாற்றம்-*சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர் சங்கர் பழவேற்காட்டுக்கு பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தினகரனின் மைத்துனர் பாஸ்கரனுக்கு படுக்கை வசதிகளை செய்து தந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர் சங்கரை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

♈🇮🇳 திட்டக்குடி பகுதியை சேர்ந்த சுபா என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் அவர் கடந்த 9ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மலையேற்றம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீர் என ஏற்ப்பட்ட காட்டுத்தீயில் சுபா உட்பட அவரது நண்பர்களும் தீயில் இறந்தனர். தொடர்ந்து இன்று சுபாவின் தந்தை    செல்வராஜ் அவர்கள் திட்டக்குடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அதில் நான் திட்டக்குடி நகர அம்மா பேரவை செயலாளராக இருக்கிறேன் என் மகள் சென்ற குழுவினர் அரசு அனுமதி வாங்காமல் சென்றதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், இதுவரை கடலூர் ஆட்சியர், கடலூரில் உள்ள தொழில் துறை அமைச்சர் கூட இதுவரை ஒரு ஆறுதல் கூட கூறவில்லை, என வருத்தத்துடன் கூறினார்
♈🇮🇳 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தூப்பாக்கி மற்றும் கத்தியுடன் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 வெளிநாடுகளில் உடல்உழைப்பு சார்ந்த பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015 முதல் 2017 வரையிலும் பாதியாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடுகள் உட்பட 18 வெளிநாடுகள் உடல் உழைப்பு சார்ந்த இந்தியர்களின் தேர்வாக கருதப்படுகின்றன. இந்த நாடுகளில், 2015ம் ஆண்டில் சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், 2017ல் இது 3 லட்சத்து 91ஆயிரமாக குறைந்துள்ளது

♈🇮🇳  காலை முதல் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்      

♈🇮🇳 புயல் எச்சரிக்கைக்கூண்டு இறக்கப்பட்டதையடுத்து பாம்பன் தூக்குபாலத்தை கடந்து செல்ல கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது
♈🇮🇳 சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாயியிடம் பணம் பறிக்க முயன்று பொதுமக்களிடம் சிக்கி, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட கொள்ளையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
♈🇮🇳 பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரத்தில் மழை கொட்டியது
♈🇮🇳 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவியும் அவரது கணவர் 'ரிசர்வ்'வங்கி பாஸ்கரனும் சிறையில் சொகுசாக இருக்க நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி உள்ளது
♈🇮🇳  வரும் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
♈🇮🇳 வணக்கம் 16/3/2018இன்று இரவு 7.30 மணிக்கு அனதை்து இந்து இயங்கள் சாா்பாக ஆா்.கே.நகா் நாவலா் குடிருப்புயில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வாி அம்மன் ஆலையத்தியில் இன்று சிறப்பு பூஜை நடக்க இருக்கிறது அன்பான இந்து செந்தங்கலே அனைவரும் வருக அருள் பொருக இப்படிக்கு ஆலைய நிா்வாக குழு அகில பாரத இந்து மக்கள் சேனா
♈🇮🇳 சகோதரத்துவத்தை குலைக்கும் விஷ்வஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று சட்டசபை உறுப்பினர்கள்தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்
♈🇮🇳 சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் புதர் மண்டிக் கிடப்பதை சரிசெய்ய அக்கறை காட்டாத அரசு ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க ரூ. 50 கோடி நிதிஒதுக்கியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் மீது வழக்கு  

♈🇮🇳  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெயரில் அறக்கட்டளை தொடக்கம்

♈🇮🇳 2025-ம் ஆண்டுக்குள் உலகின் மிகச் சிறந்த ரயில்வே அமைப்பாக இந்திய ரயில்வேயை மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, வசதிகள், பயணசீட்டு விலை என அனைத்திலும் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்

♈🇮🇳 அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை நீக்கி ஓபிஎஸ்,இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று கே.சி.பழனிசாமி கூறியிருந்தார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவரை நீக்கியாக தெரிவிக்கப்பட்டுள்ளது


♈🇮🇳  *5pm-16-3-2018-friday-வெள்ளிக்கிழமை*   


♈🇮🇳🌴Today (16.3.2018) Hon’ble Governor Of Tamilnadu Thiru.Banwarilal Purohit will be the Chief Guest for The Doyens - Guardians of Health Care, Tamilnadu 2018 & Hon’ble Minister For Health & Family Welfare Dr.C.Vijayabaskar will be the Distinguished Guest for this Function.

Venue: Hotel Feathers, Mt. Poonamallee High Road, Manapakkam, Chennai at 6.30 pm.

Accreditation Card Holders of Press Reporters/Cameramen kindly extend coverage & please come before 6 pm.
♈🇮🇳 இந்தியாவின் ஜி.எஸ்.டி.தான் உலகிலேயே மிகச் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது

♈🇮🇳 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடமிருந்து செல்போன் திருடிய நபரை கண்காணிப்பு கேமராவில் கண்காணித்து போலீஸார் பிடித்தனர்

♈🇮🇳 கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் கடந்த2012-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே போக்குவரத்துக் காவலர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மோர் வழங்கினார். கோடை காலம் முடியும் வரை போக்குவரத்துக் காவலர்களுக்கு 2 மோர் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 நீதிமன்றத்தில் உடனடி அபராதம் விதிக்க எந்த சட்டமும் இல்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரலாமே தவிர தன் தரப்பு  நியாயத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது சட்டவிரோதம் என்றும் ஒரு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்

♈🇮🇳 நிர்பயா விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.விருது வழங்கிய முன்னாள் அமைச்சர் சங்லியானா, ‘நிர்பயாவின் தாயாரைப் பார்க்கிறேன். அவருக்கே இவ்வளவு அழகான உடற்கட்டு இருக்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்’ என அனைவரும் முகம்சுழிக்கும் விதமாக பேசினார். மேலும், ‘பாலியல் வன்முறையில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், பின்னர் வழக்கு தொடரவேண்டும். இதன்மூலம் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்’ என சர்ச்சைக்குரிய கருத்தையும் பகிர்ந்தார். அவரது இந்தக் கருத்து விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

♈🇮🇳 அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன்.அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.- டாக்டர் சி. விஜயபாஸ்கர்.மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
♈🇮🇳 புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் உள்நோயாளிகளாகவும்  தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த மாதம் ஒரு நகரப் பேருந்து கல்லூரிக்குள் திரும்பிய போது நிலைதடுமாறி நுழைவாயில் தூணில் மோதிக் கொண்டு நின்றது.மேலும் சிகிச்சைக்காக தினசரி ஏராளமானநோயாளிகள் வந்து செல்கின்றர்.நேற்று புதன்கிழமை காலை ஒரு நகரப் பேருந்து நிலைதடுமாறி தூணில் மோதிக்கொண்ட விபத்தில் 18 பயணிகள் காயமடைந்தனர். நோயாளிகளை பார்க்க சென்ற பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்

♈🇮🇳 பாரதிதாசன் பல்கலைகழக மோசடி பேராசிரியர்கள் ! வாழ்நாள் முழுவதும் தடை ! 

♈🇮🇳  கள்ளக்குறிச்சியில் தாயும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியான சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்தனர் போலீசார்      

♈🇮🇳 பாலேஸ்வரம் விவகாரம் தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு. டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
♈🇮🇳 தேசிய கீதத்தில் 'சிந்து' என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்
♈🇮🇳 ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் இருந்து சொத்தைப் பறிக்க முயன்றதாக திருச்சி சிவராஜயோக ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார் ரிஷி யோகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
♈🇮🇳 பாக்தாத் நகரில் சதாம் ஹுசேன் வாழ்ந்த அரண்மனைகளில் முக்கியமானது ரத்வானியா அரண்மனை, இதில்தான் சதாம் ஹுசேன் பெரும்பாலும் வாழ்ந்தார். இந்த அரண்மனையில் அமெரிக்க பல்கலைக்கழகம் வர உள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல்களை ஈராக் அரசுக்கு சொந்தமான ‘அல் சபா’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு சொத்துக்கள் துறையின் தலைவரான அகமது அரல் ருபாயி கூறுகையில், “பாக்தாத்தில் உள்ள ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கு,மந்திரிசபையால் உருவாக்கப்பட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது” என கூறினார்.பாக்தாத்தில் அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈராக்கிற்கான அமெரிக்க தூதரிடம், அந்த நாட்டின் கல்வி மந்திரி அப்துல் ராசிக் ஈசா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳  பிரித்தானியா நாடாளுமன்றத்தில் வைத்து காதலியிடம் காதலன் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது
♈🇮🇳 ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் ஜெட்லியின் பேச்சு பொறுப்பற்றது சந்திரபாபு நாயுடு காட்டம்
♈🇮🇳 மத்திய அரசின் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தெலுங்குதேசம் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு  

♈🇮🇳 2018-19 தமிழக பட்ஜெட்: ”இந்த பட்ஜெட், பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே” கமலஹாசன் விமர்சனம்

♈🇮🇳 மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்  

♈🇮🇳  ராஜீவ் கொலை வழக்கு: பரோலை நீட்டிக்கக் கோரி குற்றவாளி ரவிச்சந்திரன் மனு

♈🇮🇳 மதுரை: தமிழகத்தில் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்கால தடை தொடரும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 பாலிடெக்னிக் விரிவுளையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் டீக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். டி.எம்.எஸ் வளாக டீக்கடை உரிமையாளர் இடைத்தரகராக செயலபட்டுள்ளார். பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் பல அரசு ஊழியர்களும் சிக்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

♈ 🇮🇳    மகாராஷ்டிரா நீதிபதி லோயா மரண வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து மரணம் குறித்து,சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

♈ 🇮🇳    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா மாவட்டத்தில் கையெறி குண்டு வைத்திருந்த நபரை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கையெறி குண்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

♈ 🇮🇳   ஆள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தலர் மெஹந்திக்கு பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று பாடகர் தலர் மெஹந்தி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் 

♈ 🇮🇳    போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் ஜாமின் மனுவை நீதமன்றம் நிராகரித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில் கர்ப்பிணி உயிரிழந்தார். கர்ப்பிணி உஷா உயிரிழந்ததை அடுத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரிய ஆய்வாளர் மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

♈ 🇮🇳    3 சிறை கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு

♈ 🇮🇳    வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன

♈ 🇮🇳    தமிழகத்தில் ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More