Hi manisat
#ref-menu

Friday, March 16, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  16/03/18 Today Tamil ManisatNews

 *ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு; தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.*


*பேட்டி கேட்டு சென்ற பெண் நிருபரை அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை.*

*பேட்டி கேட்டு சென்ற பெண் நிருபரை அழகாக உள்ளீர்கள் என அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.*

*கட்சி தீர்மானம் பற்றி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் கேள்வி கேட்டிருந்தார்.*

*நிருபர் கேள்விக்கு பதில் தராமல் அவரது கண்ணாடி அழகாக உள்ளது என அமைச்சர் வர்ணித்துள்ளார்.*

*பெண் நிருபரை வர்ணித்த சி.விஜயபாஸ்கருக்கு பத்திரிகையார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.*

*அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன்.*

*அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.*

*- பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்று பேசியது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.*

 *திருவெறும்பூர் உஷா மரணம் : போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ஜாமின் மனு தள்ளுபடி - திருச்சி நீதிமன்றம் உத்தரவு.*

*வாகன சோதனையின்போது உஷா உயிரிழந்தது தொடர்பாக ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டிருந்தார்.*

*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறும் - தினகரன் அறிவிப்பு. 

*🔵⚪பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டுகிறது*

*🔵⚪நாகை : பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாராய வியாபாரிகளை கைது செய்யக் கோரி பொறையாறு காவல் நிலையத்தை மருதம்பள்ளம் கிராம மக்கள் முற்றுகை.*

*🔵⚪வாடகை உயர்வு கோரி வரும் திங்கள் முதல் சென்னை துறைமுகத்திற்கு சரக்கு எடுத்துச்செல்லும் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்.*

*🔵⚪புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவேற்றிவந்த 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை*

*🔵⚪தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு மற்ற மொழியை கற்றுக்கொள்ளுங்கள் - சென்னை நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு.*

🔵⚪பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உள்நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது -  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

* சிறு, குறு நிறுவனங்களும் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரித்து வழங்கலாம் - நிர்மலா சீதாராமன்


*🔵⚪ஈரோடு : சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை.*

🔵⚪தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு.

* ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.


🔵⚪நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலாசாரம், கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் 

பிரிட்டிஷ் கல்வி முறையால் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் குறைவாக உள்ளனர்

நாடாளுமன்றம் இருக்கிறது, ஆனால் இயங்குகிறதா, இல்லையா என்பது மக்களுக்கு தெரியும் 

- வெங்கய்யா நாயுடு


🔵⚪மக்கள் உரிமைக்காக போராடும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டு முடக்கம் 

ஜார்கண்டில் விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறாவிடில் பல்வேறு போராட்டம் நடக்கும் 

- சீமான் 


🔵⚪செல்போன் சேவையில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்னை சரிசெய்யப்படும்

சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழில்நுட்ப குழு பணியாற்றுகிறது 

- வோடஃபோன் நிறுவனம்


🔵⚪சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சீமான், வேல்முருகன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 

பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது ஜார்கண்ட் அரசு விதித்துள்ள தடைக்கு கண்டனம்


🔵⚪அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் நடவடிக்கை

சற்றுமுன் - காஞ்சிபுரம் - *மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் " பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியத்தை  ஊராட்சி செயலர்களுக்கு வழங்க அரசு ஏற்று கொண்டு அரசாணையை உடனே வெளியிட கோரி" நடை பெற்ற கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் 175 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்*

*பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 110 இடங்கள் தான் கிடைக்கும் என கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்க கட்டுரையில் இன்று வெளியாகியுள்ளது*

 *விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லியில் வரும் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்*

 *தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்யுமாறு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

 *இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல்முறையாக தங்கள் நாட்டு வீதியில் விஷ ரசாயனத் தாக்குதல் நடத்தி முன்னாள் உளவாளியை கொல்ல முயன்றதாக புதின் மீது பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது*


 *பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான தும்கா கருவூலம் தொடர்பான கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது*

 *பிரிட்டன் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்லே திருமணத்திற்கு ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்*

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல்  மழை.*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More