Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews


*🔵⚪தமிழகத்தின் மழை விவரம்...*

*🔵⚪சென்னை-யில் சாரல் மழை...*

*சென்னை: பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை*

*நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை*

*🔵⚪ கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை*

*🔵⚪ சென்னை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக மழை.*

*🔵⚪மீனவர்கள்கடலுக்கு சென்றனர்*

*ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் 7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்*

*ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்*

*🔵⚪ முத்தரப்பு டி20 கிரிக்கெட் :*

*இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.*

*நாளை கொழும்புவில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.*

*🔵⚪ இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்*

*பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.95 காசுகள்*

*டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.15 காசுகள்*


*🔵⚪காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா...*

*சென்னையில் சிறப்பாக பணியாற்றிய 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடக்கிறது*

*எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கும் பதக்கம் வழங்கும் விழாவில் காவல் ஆணையர் பங்கேற்பு*


*🔵⚪ சென்னையில் 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழாவில்...* 

*காவல் பணி கடினமானது, மக்களுக்கு சேவையாற்றும் பணியை காவலர்கள் செய்கின்றனர் - காவல் ஆணையர் விஸ்வநாதன*

*சவாலான காலத்திலும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர் - காவல் ஆணையர் விஸ்வநாதன்*


 *ஜெகன் மோகன் ரெட்டிக்கு பா.ஜனதாவுடன் மறைமுக உறவு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ள தெலுங்கு தேசம், தனியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது*


 *ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவை குவியல் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று பொழிந்துள்ளது*


*புதுவையில் இளம்பெண்ணை கடத்தி சென்ற டிவைவர் குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளபெண்ணை தேடி வருகிறார்கள்*

*நாகை : வேளாங்கண்ணி அருகே கார் மீது லாரி மோதியதில் கேரள சுற்றுலாப் பயணிகள் 3 பேர் உயிரிழப்பு.*

*🔵⚪சென்னையில் மகனை கொன்று தந்தை தற்கொலை முயற்சி*


சென்னை: சென்னையில் 7 வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கே.கே.நகரில் மகன் மாதவின் கை நரம்பை அறுத்து கொன்ற தந்தை ஊர்மில்டோலியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.


*🔵⚪ரூ.2,000 நோட்டு வாபஸ் கிடையாது: மத்திய அரசு விளக்கம்*


புதுடில்லி: 'தற்போது புழக்கத்தில் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


*🔵⚪சத்தீஸ்கரில் 5 ரூபாய் உணவு திட்டம்; ஏப்.,1 முதல் அமல்*


ஜாஞ்ச்கிர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், ஏழை தொழிலாளர்களுக்காக, ஏப்., 1 முதல், ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்படும் என, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.


*🔵⚪முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்:
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம்*


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் வங்காளதேச அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


*🔵⚪சென்னை கோயம்பேட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்*


சென்னை: சென்னை கோயம்பேட்டில் வீட்டின் சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த ஐய்யப்பன், மதன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு கசிவு ஏற்பட்டது தெரியாமல் கொசுவர்த்தி பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்தது.


*கிருஷ்ணகிரி பகுதியில் நேற்று இரவு 9 மணி மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது தற்போது வரை இன்னும் மின்சாரம் வழங்கவில்லை*.


சற்றுமுன் - காஞ்சிபுரம் - *ஒரகடம் -  கோமாஸ் கம்பெனி அருகே விபத்து ஏற்பட்டு ஓரமாக நின்றிருந்த அரசு பேருந்து மீது அப்பல்லோ நிறுவன பேருந்து மோதியதில் 25 க்கும் மேற்பட்டவர்கள் காயம். ஶ்ரீபெரும்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை க்காக அனுமதி*

*பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மர்மமான முறையில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது*


*சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படுகிறது. இதற்கு சைதை துரைசாமி ரூ.25 லட்சம் வழங்கினார்*


*வடக்கு மற்றும் தெற்கு சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருவதால் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது*


🔵⚪ *இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹிலாரி கிளிண்டன், மத்தியபிரதேச மாநிலம் மண்டுவில் சுற்றிப்பார்த்தபோது தவறி கீழே விழுந்ததால் கிளிண்டனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது*


*🔵⚪வேலூர் மாவட்டம் -ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து 1/2 மணி நேரம் பெய்து வருகிறது இதனால்" வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசி வருகிறது சாலைகளில்  மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது இதனால் விவாசாயிகள் மகிழ்ச்சி அடைந்துயுள்ளனர் பலத்த இடியுடன் மழை பெய்ததால் மின்சாரம் தடைப்பட்டது*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More