இன்றைய செய்திகள் 09/03/18 Today News. Today
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்திட வேண்டும் -டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தல்.
உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்குள் காவிரி நதிநீர் தொடர்பான செயல்திட்டம் உருவாக்கப்படும்.அது காவிரி மேலாண்மை வாரியமாக கூட இருக்கலாம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்.
சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த எழும்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச்செல்வன்.
மீளமுடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம்.
மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு - இந்திய உச்சநீதிமன்றம்.
காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம் பெறக்கூடிய பிரதிநிதிகள் பெயரை 4 மாநில அரசுகளும் சமர்பிக்க அறிவுறுத்தல் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்.
தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிடும் காவிரி நீரில் அதிக அளவு கழிவுநீர் கலந்து வருகிறது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.
இரட்டை இலை சின்னம் கோரிய வழக்கை தொடர்ந்து நடத்துவேன்.சின்னம், கொடி தொடர்பான பணிகள் இருப்பதால் நாளை செல்லவிருந்த தஞ்சை சுற்றுப்பயணம் ரத்து - டிடிவி.தினகரன் எம்எல்ஏ.
விசாரணை முடிந்த பின் எல்லாம் தெரிய வரும் - ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தில் ஆஜரான பின் விவேக் ஜெயராமன் பேட்டி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலதாமதப்படுத்துவது வருத்தமளிக்கிறது - மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் 5-வது நாளாக போராட்டம்.
தமிழகத்தில் குப்பை அரசியல் நடைபெற்று வருகிறது தமிழகத்தின் மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - மும்பையில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு.
நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன்.நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை அமலாக்கத்துறை, சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
நானும், ராஜீவ்காந்தியும் முக்கிய கோயில்களுக்கு சென்று இருந்தாலும் அதைவெளியே காட்டிக்கொண்டதில்லை.
காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என மக்களிடம் தவறாக பரப்புகிறது பாஜக - சோனியா காந்தி குற்றச்சாட்டு.
சிலைக்கடத்தல் தொடர்பான 21 உத்தரவுகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்ச் 23 வரை இறுதி கெடு விதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்.
பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - கர்ப்பிணி உயிரிழப்பு சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் கருத்து.
குக்கர் சின்னம் என்றாலே ஊழல் சின்னம் தான்; தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு சரியில்லை - தமிழிசை.
சிரியா போரில் சிறு குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது அதிர்ச்சியை தருகிறது.பொதுமக்களின் உயிர் பறிக்கப்படுவதை ஐநா. மன்றம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் - முக.ஸ்டாலின்.
"'நாயக்கர்' சிலையை தகர்ப்பது குறித்து நாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறோம். ஆனால், 1947ல் பெரியார் பிரிட்டிஷ் ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் பிரிட்டிஷ் படையினர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்''- சுப்பரமணிய சாமி.
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வருகிற 12-ல் பூங்குன்றன், 14-ல் மருத்துவர் சிவக்குமார், 15-ல் ஜெயலலிதாவின் தனி செயலாளர் வெங்கட்ரமணன் ஆஜராக உத்தரவு - ஆறுமுகசாமி ஆணையம்.
பெற்றோர்களின் பணத்தில் சினிமா பார்ப்பதை ஏற்கும் ரஜினி, மாணவர்கள் அரசியலுக்கு வருவதை ஏன் ஏற்கவில்லை? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விதிகளை மீறும்போது துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்கின்றன திருச்சியில் உஷா உயிரிழப்பு, சென்னையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் பலி குறித்து நீதிமன்றம் கருத்து - சென்னை உயர்நீதிமன்றம்.
மதுரை : திருவாதவூரில் உள்ள +2 படிக்கும் அரசு பள்ளி மாணவன் அர்ஜூனை அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவன் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா தற்போது காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சிறப்பு வழிபாடு, அங்கு நடைபெறும் சுதர்சன யாகத்தில் பங்கேற்பு.
போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷாவின் உடல் நல்லடக்கம்
திருச்சி மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நாளை ஈரோடு மாமரத்துப்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியை திறந்து வைக்கிறார் கமல்ஹாசன் : பெருந்துறையில் பிற்பகல் 2.15க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்கிறார் கமல்.
நடிகர் ரஜினிகாந்த் நாளை இமயமலை செல்கிறார்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகி மாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண்.
மதுரையில் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.2,500 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது - வருமான வரித்துறை.
லஞ்சப்புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலை.பேராசிரியர் தர்மராஜூக்கு ஜாமீன் வழங்கியது கோவை சிறப்பு நீதிமன்றம்.
பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஒருவர் கைது.
சற்றுமுன் - காஞ்சிபுரம் - *கீழ்ஒட்டிவாக்கம் என்ற பகுதியில் இருசக்ர வாகனத்தில் சென்றவர்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. மற்றொருவர் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி.வாலாஜாபாத் போலீஸார் விசாரணை*
0 comments:
Post a Comment