FEDERATIN OF CABLE TV ASSOCIATIONS OF TAMILNADU
தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு
கேபிள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல்,
புதிய கேபிள் அமைப்புகள் உருவாவதைத் தடுத்தல்,
எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் ஆப்பரேட்டர்களின் ஏரியாவில்
நேரடியாக இணைப்பு வழங்குதல் போன்ற அநீதிகளை
தடுப்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய ஆப்பரேட்டர்கள் உருவாக்
கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படவில்லை
என தங்களை எதிரணியாக நினைக்கின்றவர்கள் தொடர்ந்து
கேள்வி எழுப்பினார்கள். சகோதரர் கில்ட்.பாண்டியும் உடனடி
நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார். திரு.ஆறுமுகம்,
டி.வி.ரமேஷ், தங்கராஜ் மற்றும் பலர் ஆர்ப்பரித்தெழுந்தனர்.
அவசரத்தை முன்னிட்டு 09-03-2018 அன்று பாதிக்கப்
பட்ட விழுப்புர ஆப்பரேட்டர்கள் சென்னை கூட்ட மைப்பு
தலைமை அலுவலகம் வர கோரப்பட்டு 12
ஆப்பரேட்டர்கள் வந்தனர். அனைவரிடமும் தனியாக
விசாரிக்கப்பட்டு எழுத்து மூலமாக மனு பெறப்பட்ட
பின்னர் கேபிள் காஸ்ட் நிறுவன மேலாளர் திரு.டி.
விவேகானந்தன் ஐ.ஏ.எஸ். அவர்களை நேரடியாக
சந்திப்பதென முடிவு செய்து கூட்டமைப்பின் சார்பாக
மனு தயாரிக்கப்பட்டு அவரை சந்தித்தோம். (மனு நகல்
பார்கவும்)
*கேபிள் காஸ்ட் நிறுவனம் புதிய போட்டி ஆப்பரேட்டர்களை
உருவாக்காது. அப்படி மாவட்ட கட்டுப்பாட்டு அறையினர்
உருவாக்கி இருந்தால் அவர்கள் கொடுத்த சிக்னல் துண்டிக்கப்
படும் என்கிற உறுதி மொழியை ஆப்பரேட்டர்களிடம்
திரு.விவேகானந்தன் அவர்கள் நேரடியாக தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்
தான் விரும்பும் நிறுவனத்தோடு முறையாக ஒப்பந்
தம் செய்து தொழில் செய்வதை வரவேற்கிறோம்.
ஆனால் ஆப்பரேட்டர்களுக்கு எதிராக எந்த நிறுவனம்
செயல்பட்டாலும் எதிர்ப்போம் என எடுத்துரைக்கப்
பட்டுள்ளது .ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்குள் பிரச்சனை தீராவிட்டால் தமிழகத்தில் விழுப்புரம்
மாவட்டத்திலிருந்து கேபிள் டிவி தொழிலில் வளரும்
களைகள் அகற்றும் பணி ஆரம்பமாகும்.
***சென்னையில் இருந்து பல ஆப்பரேட்டர்கள் புகார்
மனு தந்துள்ளனர். அதில் சம்மந்தப்பட்ட நிறுவன
நிர்வாக இயக்குனர்களை ஆப்பரேட்டர்களோடு
நேரடியாக சென்று சனி/திங்கள் கிழமைகளில்
சந்திக்கிறோம்.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் துணையோடு
கூட்டமைப்பு நிச்சயம் வென்று காட்டும்.
வணக்கத்துடன்-டி.ஜி.வி.பி.சேகர்.
0 comments:
Post a Comment