Hi manisat
#ref-menu

Friday, March 9, 2018

இன்றைய செய்திகள் 09/03/18 Today News. Today

இன்றைய செய்திகள் 09/03/18 
Today News. Today 


 09/03/18 

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்தால், குற்றவாளிக்கு மரண தண்டனை - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

மார்ச் 16ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பள்ளி நிர்வாகங்களே முழு பொறுப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.

உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழுக்கு 2-வது இடம், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள்.

யாழ்பாண நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தககங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால்அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது - போக்குவரத்து காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு.

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் தாக்கிக் கொண்டனர்.

விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே புதுக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி.

எங்கள் கட்சி பெண் நிர்வாகியை தாக்கிய மிகக் கொச்சயான நபர் அய்யாகண்ணு; அவரை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை - ஹெச் ராஜா.

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் - பா.ஜனதா.

அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நேர்மையான, திறமையான வழக்கறிஞர்களை நியமிக்காவிட்டால், அது மாநிலத்தின் நலனுக்கு எதிரானதாகி விடும் - உயர்நீதிமன்றம்.

கர்நாடகா பாகல்கோட் தாலுகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ.

திரிபுராவில் லெனின் சிலைஅகற்றப்பட்டதற்கு 
கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் 
பெங்களூருவில் போராட்டம்.

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்துவிட்டு, அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் - துணை ஆணையர் அரவிந்தன்.


🔵⚪புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை இந்தியாவிற்கான சீன தூதர் "லோ சாஓஹுய்" மரியாதை நிமித்தமாக சந்திப்பு .


🔵⚪கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டதற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்.

* மனித நேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத இத்தகைய வன்செயல்கள் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல - பன்னீர்செல்வம்.


🔵⚪பா.ஜ.க. பெண் நிர்வாகியை அய்யாக்கண்ணு திட்டியதால் அவர் மருத்துவமனையில் உள்ளார் -தமிழிசை. அய்யாக்கண்ணு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழிசை எச்சரிக்கை


🔵⚪சென்னையில் மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திய பின்னர் அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் - தி.நகர் காவல் ஆணையர் அரவிந்தன் பேட்டி 

🔵⚪பி.ஐ.பி. (Press Information Bureau) புதிய இயக்குநர் ஜெனரலாக எஸ்.ஆர்.கர் நியமனம்; மே 1ஆம் தேதி முதல் பெறுப்பேற்பார் - மத்திய அரசு 

🔵⚪மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும் - தமிழக காவல்துறைக்கு சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை.

🔵⚪விழுப்புரம்,கண்டமங்கலம் அருகே புதுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மதிய உணவு முட்டை தக்காளி தொக்கில் பல்லி விழுந்து கிடந்த உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் உட்பட 9 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*🔵⚪கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்ற வழக்கு; சிறையில் இருந்து கணபதி வெளியே வந்தார்*

*🔵⚪வேலூர் : 2016-ல் அணைகட்டு அருகே முன்விரோதம் காரணமாக வேலு என்பவரை கொலை செய்த வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட முதன்மை நீதிமன்றம்.*




♈🇮🇳9-3-2018-friday-வெள்ளிக் கிழமை*   ♈

♈🇮🇳 தூத்துக்குடி சி.வ.அரசுப்பள்ளியில்10-ம் வகுப்பு கேள்வித்தாள் அறையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஆனந்த கிருஷ்ணன் துப்பாக்கியில் இருந்த குண்டு வெளியேறியுள்ளது. பணி முடிந்து துப்பாக்கியை சோதனை செய்தபோது வானத்தை நோக்கி குண்டு பாய்ந்தது. இச்சாம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள் உள்ளதாக உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. ஜப்பன், சீன மொழிகளை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை தமிழ் மொழி பிடித்துள்ளது

♈🇮🇳 சென்னை மெரீனா கடற்கரை சாலையில் லைட் அவுஸ் , குடிசை மாற்று வாரிய சிக்னல் அருகில் வாகன சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர் . குடிசை மாற்று வாரிய சிக்னல் அருகில் ஒரு சின்ன யானை லோடு வண்டியை மடக்கினர். காக்கி உடையணிந்த காவலர் ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த லோடு வண்டி ஓட்டுனர் இறங்கும்போது போது வாகனங்கள் வருகிறதா என்று பார்க்காமலேயே திடீரென கதவை திறக்கிறார். இதை சற்றும் எதிர் பார்க்காத வாகன ஓட்டிகள் அச்சத்தில் மிரண்டனர். தற்போது ஒரு பெண் இறந்தும் கூட வாகன ஓட்டுனர்களும் , காவல்துறையும் உணரவில்லை.ஒரு உயிர் விலை மதிப்பில்லாதது .அதற்கு சாலை விதிகளை ஒழுக்கத்தை பண்பை கடைபிடிக்காமல் காவலர்களும் ஓட்டுனர்களும் செய்யும் தவறுகள் அந்த உயிர்க்கு அரசாங்கம் விலை நிர்ணயிக்கும் போது தமிழகம் மனித நேயமில்லாத மனிதர்களை கொண்ட நாடா !!!!!??????விஸ்வரூபம்    

♈🇮🇳 பழனி கோவிலில் மார்ச் 12 முதல் வின்ச் நிறுத்தம்

♈🇮🇳 சென்னை: கொரட்டூர் ரயில் நிலையத்தில் மாணவர்களிடையே மோதல்

♈🇮🇳 மே 18, 19, 20ல் ஊட்டியில் மலர் கண்காட்சி

♈🇮🇳 சொத்து வரி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

♈🇮🇳 தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

♈🇮🇳 தமிழகத்தில் பழைய படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பு

♈🇮🇳 காவிரி விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

♈🇮🇳 சேலத்தில் ஒரே நாளில் 62ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ரவுடிகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்

♈🇮🇳 சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 50 மீ. ரைபில் பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

♈🇮🇳 திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மன்னவனூரில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வ.உ.சி சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து மன்னவனூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More