உத்தமபாளையத்தில் அதிகரித்துள்ள புதிய வாடிக்கையாளர்களால் பி.எஸ்.என்.எல். 3G சேவையில் தொய்வு
தேனி மாவட்டம் உத்தம பாளையம் பகுதியில் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருதால் பி.எஸ்.என்.எல். சேவை செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஏர்செல் தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக முடங்கி யதையடுத்து அதனுடைய 1.75 கோடி வாடிக்கையாளர்கள்பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற தனியார் சேவைக்கு மாறி வருகின்றனர்.இந்நிலையில், ஏர்செல்லுக்கு ஏற்பட்ட அதேநிலையிலேயே பிற தனியார்நிறுவனங் களும் இருப்பதால் அவர் களுடைய சேவையிலும் பாதிப்பு இருப்பதாக சமூக வளைதலங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அடுத்து பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மத்திய அரசு நிறுவனமனமான பி.எஸ்.என்.எல். சேவையை தேர்வு செய்து ஆர்வத்துடன் மாறி வருகின்றனர்.
புதிய வாடிக்கையாளர் களால் சேவையில் தொய்வு: ஏர்செல்லில் இருந்தும் மாறும் புதிய வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு துறைக்கு லட்சக்கணக்கில் மாறியுள்ளனர். கணிசமான அளவுக்கு புதிய வாடிக்கையாளர்கள் உயர்ந்த அளவுக்கு அதன் தொழில் நுட்பத்தில் மாற்றம் இல்லை. மேலும் அதன் சேவையில் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனால் எளிதாக யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் 3 ஜி சேவையும் திருப்தி கரமாக இல்லாத நிலையில் உத்தம பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பி.எஸ்.என்.எல். சேவையில் கடந்த ஒரு வாரமாக தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே தற்போது அதிகரித்துள்ள இந்த புதிய வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் வகையில் தனது சேவை யை துரிதப்படுத்தி, தடையில்ல சேவையை கொடுக்க புதிய தொழில் நுட்பத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் புகுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 comments:
Post a Comment