இன்றைய செய்திகள் 10/03/18
Today News tamil
News 10/03/18
சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்.
காவிரி விவகாரத்தில் முதல் நபராக ராஜினாமா செய்யத் தயார் : அன்புமணி ராமதாஸ் அதிரடி.
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபுவுக்கு விமான போக்குவரத்து துறை கூடுதலாக ஒதுக்கீடு : பிரதமர் மோடியிடம் இருந்து விமான போக்குவரத்து துறை சுரேஷ் பிரபுவுக்கு மாற்றம் - குடியரசுத் தலைவர்.
உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு.
சென்னையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் பிரேதப்பரிசோதனை நிறைவு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.
அரசுப் பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது - அமைச்சர் கேஏ.செங்கோட்டையன்.
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆகியோர் ஆலோசனை : இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
பாஜக என்பது தனிநபர் கட்சியோ, அம்மா - மகன் கட்சியோ அல்ல லட்சக்கணக்கான தொண்டர்களின் கட்சி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
ரஜினி, கமல் குறித்து ஏன் அதிகமாக கேள்வி கேட்கிறீர்கள் சரத்குமாருக்கும் முதல்வராகும் தகுதி உண்டு - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என காவிரி ஆலோசனை கூட்டத்தில் உறுதிபட தெரிவித்திருக்கிறோம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கூட்ட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்.
ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்திற்கு ரூ.50,147 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்.
மாணவிகள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு தனி பறக்கும் படை அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
ராமநாதபுரம்,கன்னியாகுமரி #மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச்செல்ல வேண்டாம் : சூறைக்காற்று வீசும் என்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன்.அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன் புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை - நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளவரை உண்மையான தேர்தலை எதிர்பார்க்க முடியாது - இயக்குநர் ரஞ்சித்.
தமிழகத்தில் விரைவில் 42 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் கிளை, புதுக்கோட்டையில் வரும் 26ம் தேதி திறக்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்.
சட்டம் ஒழுங்கு, காவிரிப் பிரச்னை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நடிகர் ரஜினிகாந்த் நழுவல் : இமயமலைக்குப் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழக முதலமைச்சராகும் ஸ்டாலினின் கனவு என்றும் கனவாகவே இருக்கும் டிடிவி தினகரனுக்கு அரசியல் தெரியவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
ரஜினியை தலைவராக ஏற்பதா, இல்லையா என்பதை மக்களே முடிவு செய்யட்டும் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
ஏர்செல் சிக்னல் சிக்கலால் பொதுமக்களின் வசதிக்காக பிஎஸ்என்எல் சேவை மையம் இன்றும் நாளையும் செயல்படும் என அறிவிப்பு.
மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும்.
மாணவி அஸ்வினி கொலை சம்பவம் போல் இனி நடக்காமலிருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்தும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
என் மீது வெறுப்பு காட்டுவோர் அதற்கான காரணம் கூறமுடியாமல் ராசியில்லாதவன் எனக்கூறுகின்றனர்.2004 தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற காரணமாக இருந்தவன் நான் - வைகோ.
பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.
காஞ்சிபுரம் பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் இல்லத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி 16 ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் - காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
பாஜக மாநில செயலாளர் கேடி.ராகவன் வீட்டை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது : திருச்செந்தூரில் அய்யாக்கண்ணுவை தாக்கிய பாஜக பெண் நிர்வாகி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வரும் 20 வரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்புவாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது : உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கேவியட் மனு.
நாசிக் : கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிராவில் விவசாயிகள் நடத்தி வரும் மெகா பேரணி 4ம் நாளை எட்டியுள்ளது.
உதகை தாவரவியல் பூங்காவில் மே 18,19,20 ஆகிய தேதிகளில் மலர்க்கண்காட்சி.
மார்ச் 16ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.
தென்மேற்கு வங்க கடல் பகுதி முதல் அதனை ஒட்டியுள்ள இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது இதன் காரணமாக மன்னார்வளைகுடா முதல் கன்னியாகுமரி கடலோர பகுதியில் வலுவான சுழல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.
0 comments:
Post a Comment