Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த போக்குவரத்துக் காவலர் இடமாற்றம்

*வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த போக்குவரத்துக் காவலர் இடமாற்றம்*


☀சேலத்தில் சீருடை அணியாத போக்குவரத்துக் காவலர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து அவரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

☀சேலம் விமான நிலையம் அருகே காமலாபுரத்தில் சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள், லாரிகள் ஆகியவற்றை மடக்கிப் போக்குவரத்துக் காவலர் ஒருவர் பணம்பறிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. லஞ்சம் வாங்கும் அந்தக் காவலர் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்திருந்தார்.

☀அவர் ஓமலூர் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிய காவலர் கனி என்பது தெரியவந்ததை அடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றிச் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவிட்டுள்ளார்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More