இன்றைய மணிசாட் செய்திகள் 14/03/18 Today Tamil ManisatNews

*6pm-14-3-2018-wednesday-புதன்கிழமை*
♈🇮🇳 சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி போர் புரிந்த 98 வயது சுதந்திர போராட்ட தியாகி தனக்கு சாதாரா மாவட்டம் நிலமும் கொடுக்கவில்லை பணமும் கொடுக்கவில்லை என்பதனால் மந்த்ராயலாவில் தற்கொலை செய்து கொள்ளவா என்று கேட்கிறார்
♈🇮🇳 பாபர் மசூதி நில ஒதுக்கீடு விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்து இருக்கிறது. மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படி 14 பேர் வரை மனுதாக்கல் செய்து இருந்தார்கள். ஆனால் சன்னி வஹ்பு வாரியம் , நிரோமி அகாரா, ராம் லல்லா மூன்று பேரை தவிர வேற யாரையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி 14 பேர் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சாமியின் மனுவும் ஒன்றாகும். அந்த சர்ச்சையான நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று சு.சாமி மனுதாக்கல் செய்து இருந்தார்
♈🇮🇳 மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிணற்றை தூர்வாரும் போது நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 2017-ல் மதவாத மோதல்கள் நடைபெற்ற மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம்
♈🇮🇳 ஐதராபாத்தில் இருந்து ராய்பூர் புறப்பட்ட இண்டிகோ விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது
♈🇮🇳 பொது மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களைபயன்படுத்தி மேகங்களை கண்காணிக்க குடிமகன் விஞ்ஞானிகள் என்ற திட்டத்தின் மூலம் நாசா அழைப்பு விடுத்து உள்ளது
♈🇮🇳 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் டிஜிட்டல் வியூகத்தை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் தளமான டுவிப்ளோமேசி அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்கள் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் அதிகம் போலி முகவரி கொண்ட கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்திய பிரதமர் மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில்60% பேர் போலி முகவரி என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ டுவிட்டரரில் பின் தொடர்பவர்களில் 30% பேர் என்பது தெரியவந்துள்ளது.உலக அரசியல் தலைவர்கள் ஒபாமா, டிரம்ப் ஆகியோரை போன்று அதிக அளவில் பின்தொடர்பவர்களை கொண்ட அரசியல் தலைவராக மோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் பலரிடம் பாராட்டும் பெற்றார். இந்நிலையில் டுவிப்ளோமேசி தெரிவித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது
♈🇮🇳 ஏர்செல் சேவை முடக்கத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற பொது மக்கள் அலை மோதி வருவதால் இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது
♈🇮🇳 மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதில் பேஸ்புக் ஒரு "பங்கு" வகிக்கிறது என ஐ.நாவின் விசாரணை குற்றஞ்சாட்டியுள்ளது
♈🇮🇳 அச்சன்புதூர், வடகரை பண்பொழி கணக்கப்பிள்ளை வலசை மேக்கரைப் பகுதிகளில் மூன்று மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. அந்த மூன்று மணி நேரத்தில் சுமார் 500 தடவைகள் கண்களைக் கூச வைக்கிற அளவுக்கு மின்னல் வெட்டியதால் இரவு முழுக்க சுற்றுப்புறக் கிராம மக்கள் பீதியிலும் பயத்திலும் உறங்கவில்லை
♈🇮🇳 மத்திய நைஜீரியாவில் புதிய மோதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்பெல்ஜிய மற்றும் சாலை முன்முயற்சிகளுக்கு (BRI) தொடர்பான வெளிநாட்டு உதவி மற்றும் திட்டமிடல் செயல்திட்ட திட்டங்களை சீனா ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க உள்ளது - யூரிஷியா தொழில்சார்ந்த வளர்ச்சிக்கு ஜனாதிபதி Xi Jinping கையொப்பம் இடும் இணைப்புத் திட்டம் தயாரிக்கப்படுகிறது
♈🇮🇳 கேரளா காங்கிரஸ் பிரமுகர் சுகயப் கொலை செய்யப்பட்டது குறித்து கீழ் நீதிமன்றம் சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது .அதற்கு கேரளா நீதிமன்றம் தடை விதித்துள்ளது
♈🇮🇳 சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீசார் ஆய்வு
♈🇮🇳 தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர் கைது
♈🇮🇳 குரங்கணி தீவிபத்து: விசாரணை அதிகாரியாக அதுல்ய மிஸ்ரா நியமனம்
♈🇮🇳 3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்-சிஆர்பிஎப் டிஐஜி சோனல் மிஸ்ரா, ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கு செல்கிறார்.திருச்சி எஸ்.பி.,யாக இருந்த பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சேலம் அமலாக்கத்துறை எஸ்.பி., ஸயூல் ஹாக்யு, திருச்சி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்
♈🇮🇳 மாணவர்களின் மன நலம் குறித்து ஆராய குழு அமைத்தது ஐகோர்ட்
♈🇮🇳 அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கை மற்றும் விசா கெடுபிடி காரணமாக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது
♈🇮🇳 டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் தரப்பட்டதை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது
♈🇮🇳 பல்வேறு திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார்
♈🇮🇳 மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும், பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்
♈🇮🇳 உ.பி. மக்கள் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்
♈🇮🇳 தென்காசி அருகேயுள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
♈🇮🇳 20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது.03.08.2013ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு முடிவுகளைwww.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 46,797விண்ணப்பதாரர்களில் 45,802 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது
♈🇮🇳 தமிழகத்திற்கு மானிய விலையிலான மண்ணென்ணெய் குறைக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மாநிலங்ளவை உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு பதில் கூறிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,தமிழகத்தில் 89.1% எரிவாயு இணைப்பும், 100% மின் இணைப்பு உள்ளதால் மானிய விலை மண்ணென்ணெய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
♈🇮🇳 காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் வீண் பிடிவாதம் தவறானது என்று டெல்லியில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழக விவசாயிகளின் பொறுமையை இனியும் மத்திய அரசு சோதிக்க கூடாது. காவிரி பிரச்னையை மத்திய அரசு இந்திய அளவிலான பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
♈🇮🇳 உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிகமான மதவாத மோதல்கள் நடந்து உள்ளது என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.2017-ம் ஆண்டு நாடு முழுவதும் 822 மதவாத சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் கூறிஉள்ளார். இதுவே 2016-ல் 703 ஆகவும், 2015-ல் 751 ஆகவும் இருந்தது. மாநிலங்கள் வாரியாக உத்தரபிரதேச மாநிலத்தில் 2017-ல் அதிகமான மதவாத மோதல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. மாநிலத்தில் 195 சம்பவங்கள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கர்நாடகா உள்ளது. அங்கு 100 சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தானில் 91 சம்பவங்களும்,பீகாரில் 85 சம்பவங்களும், மத்திய பிரதேசத்தில் 60 சம்பவங்களும் நடந்து உள்ளது,பிற மாநிலங்களிலும் இச்சம்பவங்கள் பதிவாகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதேபோன்று 2016-ம் ஆண்டும் உத்தரபிரதேச மாநிலத்திலே அதிகமான மதவாத மோதல் சம்பவங்கள் பதிவாகி உள்ளது. அங்கு 162 சம்பவங்கள் நடந்து உள்ளது. இதற்கு அடுத்த இடங்களை கர்நாடகம் (101), மராட்டியம் (68) பீகார் (65) மற்றும் ராஜஸ்தான் (63) பிடிக்கிறது. இந்த மோதல்களுக்கு மதவாத காரணிகளே முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. இட விவகாரம்,பாலினம் தொடர்பான சம்பவங்கள், சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதர பிறகாரணிகள் மோதல்களுக்கு அடிப்படையாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
♈🇮🇳 அமெரிக்காவில் உள்ள நாசாவின் லாங்லி ஆராய்ச்சி மையம். உலக மேக கண்காணிப்பு திட்ட தலைவர் மர்லி கோலோன் ரோபல்ஸ் கூறும் போது ,இந்த திட்டம் பொது மக்கள் தரையில், இருந்து மேகங்களை கண்காணிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. நாசா (NASA) குடிமகன் விஞ்ஞான அறிஞர்களைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காக GLOBE திட்டம் இந்த சவாலை வழங்குகிறது;நாம் குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு செல்கிறோம். அதனால் புயல்களின் வகைகள் மாறும் இதற்கு தகுந்தாற்போல் மேகங்களின் வகைகளும் மாறும், "என்றார்.லாங்லியில் உள்ள விஞ்ஞானிகள், மேகங்களாகவும்,புவியின் கதிர்வீச்சு எரிசக்தி அமைப்பு (CERES)எனவும் அழைக்கப்படும் ஆறு கருவிகளின் தொகுப்புடன் வேலை செய்கின்றனர்.CERES 'கருவிகள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், ஆய்வாளர்கள் தங்கள் படங்களில் உள்ள அனைத்து வகையான மேகங்களைக் கண்டறிவதற்கு எப்போதும் எளிதல்ல
♈🇮🇳 மாதம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வாடகை உள்ள அதிநவீன ஆடம்பரமான வீட்டிற்கு பிரபல நடிகை ஒருவர் தனது கணவருடன் விரைவில் குடியேறவுள்ளார். அவர்தான் பாலிவுட்டின் முன்னணி நாயகியான அனுஷ்கா சர்மா
♈🇮🇳 கொல்கத்தா போலீஸார் பிசிசிஐயிடம் ஹமியின் பயண விவரங்களை கேட்டுள்ளது. தற்போது இதில் புது சிக்கல் என்னவெனில் பிசிசிஐ சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். எனவே, முகமது ஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணை முடிவில் என்ன தகவல்கள் வெளியாகும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
0 comments:
Post a Comment