Hi manisat
#ref-menu

Wednesday, March 14, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 14/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  
14/03/18 
Today Tamil ManisatNews


 14/03/18 

கர்நாடக கடலில் பாறைமீது படகு மோதியதில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 8 பேர் தத்தளிப்பு.

மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும், அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும்.ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்.அதிமுக எம்பி. வேணுகோபாலுக்கு எழுதிய கடிதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்.

ராஜிவ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்ய கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

தேனி குரங்கணி காட்டுத்தீ விபத்து உயிரிழப்பு குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்தது தமிழக அரசு : விசாரணை அதிகாரியாக அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமனம்.

பாபர் மசூதி நில விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி.

பீகார் மாநிலம் பபுவா பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ரின்கி ராணி பாண்டே வெற்றி.

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு ஒப்புதல்.

கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்.

உத்தர பிரதேசத்தில் புல்பூர் எம்பி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கோராக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி.

உத்தர பிரதேச மாநிலம் புல்பூர், கோரக்பூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக அரசு மீதான மக்களின் கோபத்தை காட்டுகிறது : ராகுல்காந்தி.

டிடிவி.தினகரன் அணிக்கு கட்சி பெயரையும், குக்கர் சின்னத்தையும் ஒதுக்க முதலமைச்சர் தரப்பு எதிர்ப்பு : டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.

தொலைபேசி இணைப்பக வழக்கு : கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேர் விடுவிப்பு - சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேர் கைது.

சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேர் மேல்முறையீடு : உடுமலை காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 8ஆவது நாளாக தொடரும் அதிமுகவினரின் போராட்டம்.

ஒகி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 20 லட்சம் நிதியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லும் 2 நாள்களுக்கு முன்னரே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது - மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம்.

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 8-ஆவது நாளாக முடங்கியது.

சென்னை : பாலவாக்கத்தில் உள்ள டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வீட்டில் தேனி காவல்துறையினர் ஆய்வு.

தஞ்சை - கோடியக்கரை சாலையை தேசிய சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் லண்டனில் காலமானார்.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்க, மேலும் சில எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எங்களது அணி பெயரை நாளை அறிவிக்க உள்ளோம் நாளை தொடங்க உள்ளது புதிய கட்சி அல்ல, அணி தான் - டிடிவி.தினகரன்.

வங்கி மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி, உறுதியளிப்பு கடிதங்களை கொண்டு கடன் வாங்க முடியாது.

பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கும் ரஜினி விரைவில் அரசியல் ஊழியராக மாறுவார் : அமைச்சர் ஜெயக்குமார்.

ட்விட்டரில் 'ஃபேக் ஃபாலோவர்ஸ்’ அதிகம் கொண்ட 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடர்ந்த வழக்கு: டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆஜர்.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் மீனவர்கள் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.இதனால் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் இது மகிழ்ச்சிக்குரியது : அமைச்சர் ஜெயக்குமார்.

குமரி - நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரயில் இன்ஜின் தடம் புரண்டது : நாகர்கோவில் - திருநெல்வேலி செல்லும் ரயில் சேவை பாதிப்பு.

ராமநாதபுரம் அருகே இடையார்வலசை கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

தொடர் மழை பெருக்கெடுத்த வெள்ளம் - கும்பக்கரை அருவியில் குளிக்க தடை.

இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் 5வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை : கடலில் பலத்த காற்று வீசிவரும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

உத்தரகாண்ட் : ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரஜினி வழிபாடு.

அரியலூர் செந்துறையில் நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்து விவசாய கூலி தொழிலாளி அன்னக்கிளி உயிரிழப்பு 2 பெண்கள் படுகாயம்.

சென்னை சூளைமேட்டில் கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது - ப்ரீத்தி என்பவர் கைது.

2018-19 க்கான பட்ஜெட் ஒதுக்கீடு ராணுவத்தின் நம்பிக்கைகளை சிதைத்து உள்ளது - ராணுவத் துணைத்தலைவர்.

திருப்பதி, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 பேர் கைது ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

புயல் சின்னம் அரபிக்கடலுக்கு நகர்ந்ததால் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஆபத்து நீங்கியது.

கோவை : மதுக்கரை அருகே மத்திபாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் ஆண் யானை உயிரிழப்பு.

தூத்துக்குடி துறைமுகத்தில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் பயணிக்க சீட் பெல்ட் கட்டாயம் : விபத்தை தவிர்க்க கர்நாடக அரசு புதிய திட்டம்.

வரும் 16ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை - சென்னை திரையரங்க சம்மேளனம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More