Hi manisat
#ref-menu

Wednesday, March 14, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 14/03/18 Today Tamil ManisatNews


இன்றைய மணிசாட் செய்திகள்  14/03/18 Today Tamil ManisatNews



ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இடையார்வலசை கிராமத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளத்தில் குளித்த 10ம் வகுப்பு மாணவர் பாலாஜி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

 *_🌴🐯🇮🇳🕊🌴ட்விட்டரில் ஃபேக் ஃபாலோவர்ஸ் அதிகம் கொண்ட தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்_*

டெல்லி: ட்விட்டரில் 'ஃபேக் ஃபாலோவர்ஸ்’ அதிகம் கொண்ட 10  தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடியை ஃபாலோ செய்பவர்கள் 4 கோடி பேர் ஆவர், இதில் 60% ஃபேக் ஃபாலோவர்ஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

: *_🌴🐯🇮🇳🕊🌴சேலம் அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல்_*

சேலம்: ஓமலூர் அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 டன் எடையுள்ள கிரானைட் கற்களை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


*_🌴🐯🇮🇳🕊🌴டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்வு_*

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.64.87 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் அதிகரித்து ரூ.64.89 காசுகளாக இருந்தது குறிப்பிடத்



: *_🌴🐯🇮🇳🕊🌴வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிவு_*

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 61.16 புள்ளிகளாக சரிந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 166.17 புள்ளிகள் சரிந்து 33,690.61 புள்ளிகளாக உள்ளது. உலோகம், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட், எண்ணெய் & எரிவாயு, ஆட்டோ, மின்சாரம் மற்றும் வங்கி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.87% வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.90 புள்ளிகள் குறைந்து 10,388.95 புள்ளிகளாக உள்ளது.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க், ஆந்திரப் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற நிறுவன பங்குகள் விலை 2.30% வரை சரிந்துள்ளபோது, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டிஸ், எல் அண்ட் டி மற்றும் ஆசிய பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.46%, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.18% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.03% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.68% வரை குறைந்து முடிந்தது.


 *_🌴🐯🇮🇳🕊🌴சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி: தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகள்_*

சத்தியமங்கலம்: தண்ணீரின்றி அலையும் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் தண்ணீர் தேடி விலை நிலங்களில் புகும் யானைகள் அவற்றை நாசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் நீரை நிரப்பினால் மட்டுமே குடியிருப்பு பகுதிகளுக்கு விலங்குகள் வருவதை தடுக்க முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பல்வேறுவகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு நிலவும் வறட்சி காரணமாக தண்ணீருக்காக யானைகள் சுற்றித் திரிவதால் அங்குள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 


☀இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு : பிரதமர் மோடி, குடியரசு தலைவர் இரங்கல்_*

வாஷிங்டன் : இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் காலமானார். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புத்திசாலித்தனம், விடா முயற்சியால் உலக மக்களால் ஈர்க்கப்பட்டவர் என மோடி கூறியுள்ளார். மேலும் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 


*⚡இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடர்ந்த வழக்கு: டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆஜர்

*🔵⚪BREAKING NEWS :*

🔵⚪அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் கொலை வழக்கில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி.

* 6 மாதத்தில் விசாரணையை முடிக்கவும், விசாரணைக்கு ஆஜராகாதவர்களை கைது செய்து விசாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

🔵⚪நேபாளத்தின் புதிய அதிபராக பித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்வு: இன்று மாலை பதவியேற்பு

🔵⚪ராஜிவ் கொலை வழக்கில், 9 வோல்ட் பேட்டரியை தாண்டி பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் இருக்கின்றன, அதற்கு உங்கள் பதில் என்ன..?

* பேரறிவாளன் வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..

🔵⚪ குரங்கணி மலை காட்டுத்தீ வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற அதிகாரிகள் யோசனை.

* வழக்கு ஆவணங்களை உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்

🔵⚪தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு ஒப்புதல் 

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெறவேண்டும்: ஆய்வுக்குழு

🔵⚪"டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை வைத்து தினகரன் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது"

* முதலமைச்சர் சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தினகரனுக்கு கடிதம்

🔵⚪கோவை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி முகமது அன்சாரிக்கு 20 நாள் பரோல்

*மகள் திருமண ஏற்பாடுகள் செய்ய, 2 மாத பரோல் கேட்டு மனைவி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* ஏப்.10 முதல் 20 நாட்கள் பரோல் வழங்கி நீதிபதி சி.டி.செல்வம், சதீஷ் குமார் அமர்வு உத்தரவு

🔵⚪தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை;

இந்திய நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை முழுமையாக ஏற்றது சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு

நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு அபாயங்கள் இருக்காது: இனி பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டியதில்லை சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு

நியூட்ரினோ திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களின் உணர்வுகளை அறிந்து மத்திய அரசிடம் கூறுவோம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

🔵⚪ஒகி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 20 லட்சம் நிதியை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

* தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி..


*🔵⚪சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி மேல்முறையீடு*

*சின்னசாமி உட்பட 6 பேர் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு*

*உடுமலை காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*


*🔵⚪முக்கிய செய்தி :*

*நாளை மாலை 5 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்*

*ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு*

*பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்*

*திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நாளை மாலை நடைபெறுகிறது..*



*நிதி மசோதா 2018  மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.*

*எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு*


 *🔵⚪ அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்*

*காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் - வானிலை மையம்..*

*குமரி கடல்பகுதியில் மணிக்கு 40 - 50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்*

*கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..*

*தூத்துக்குடி : 63 ஆண்டு சாதனையை தகர்த்தது மழை!!!*

*கடந்த 24 மணிநேர நிலவரப்படி, சில மணிநேரங்களிலேயே 200 மி.மீ. மழை பதிவு....*

*1955, டிசம்பர் 3ம் தேதி, 188 மி.மீ மழை பெய்ததே அதிகபட்ச அளவாக குறிப்பிடத்தக்கது....*


 *🔵⚪ இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : விசாரணை ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.*

*🔵⚪ நாளை எனது புதிய அணியின் பெயரை அறிவிப்பேன்.*

*இதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை அணுகி மனு அளிக்கப்பட்டது  : டிடிவி தினகரன்*

*நாளை நடைபெறும் அணி அறிவிப்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எனக்கு ஆதரவு தெரிவித்த 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்கள்  : டிடிவி தினகரன்*

*ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கட்சி ஆரம்பிக்க முழு உரிமை உள்ளது  : டிடிவி தினகரன்*

*🔵⚪ உத்தரப்பிரதேசம் : கோரப்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை*

*பா.ஜ.க.வை 9466 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது சமாஜ்வாதி கட்சி*


 *🔵⚪ காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை மையம்*

*காற்றழுத்த தாழ்வுமண்டலம் மினிகாய் தீவுக்கு தென்கிழக்கே 190 கி.மீ.-ல் நிலைகொண்டுள்ளது*

*தென் தமிழகம், வடமாவட்டத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்*

*காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளது*

*குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் படிப்படியாக மத்திய கிழக்கு அரபிகடலில் வலுவிழக்ககூடும்*

*தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது - வானிலை மையம்*

*அதிகபட்சமாக பாபநாசத்தில் 20, பாபநாசத்தில் 19, செங்கோட்டையில் 10 செ.மீ. மழை பதிவு*

 *🔵⚪ கோவை பெரியக்கடை வீதியில் உள்ள நகைக்கடை உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.*

*பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக வைர வியாபாரி விமலிடம் அதிகாரிகள் விசாரணை..*


*🔵⚪ சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது தினசரி பஸ் பாஸ்*

*சில மாற்றங்களுடன் தினசரி பஸ் பாஸ் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை தகவல்*

*தினசரி பஸ் பாஸ் கட்டணத்திலும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல்*

 *🔵⚪ ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு நடிகர் கமல் இரங்கல்*

*ஸ்டீபன் ஹாக்கிங் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள் - கமல்*

*அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம் - கமல்ஹாசன்*

*அவர் புகழ் வாழும் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

*🔵⚪BREAKING : கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி உறுதியானது*

*சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீன் குமார் 10,000த்திற்கு அதிகமான வாக்குகளுடன் முன்னிலை*


*🔵⚪பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.*

*🔵⚪#JUSTIN பீகார் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!*


 🔵⚪திருப்பூர் : பல்லடம் - உடுமலை சாலையின் ஓரம் இருந்த கிணற்றில் கார் பாய்ந்து விபத்து.

* காரில் பயணம் செய்த 5  பேரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்.


🔵⚪மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்.

சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு

🔵⚪குரங்கணி தீ விபத்து: போடிநாயக்கனூர் டிஎஸ்பி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு


*🔵⚪BREAKING | முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லும் 2 நாள்களுக்கு முன்னரே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது - மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம்*

*🔵⚪விருதுநகர் : அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை.*

🔵⚪திருப்பூர் : பல்லடம் - உடுமலை சாலையின் ஓரம் இருந்த கிணற்றில் கார் பாய்ந்து விபத்து.

* காரில் பயணம் செய்த 5  பேரையும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.


🔵⚪செப்.,22ல் போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா மயக்கமடைந்த பின் முதலுதவி அளிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் - மருத்துவர் சிவக்குமார்

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது நான் உடன் இருந்தேன் : மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம்


🔵⚪ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

"அசாதாரண மனிதர், இயற்பியல் உலகம் போற்றும் தலைசிறந்த விஞ்ஞானி, தன்னம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு மனித குலத்திற்கு மாபெரும் பேரிழப்பு. உலகம் உள்ளளவும் மறந்திட இயலா மாமனிதருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்"
- ஒ.பன்னீர்செல்வம்

 *🔵⚪FLASH NEWS :*


*பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பை விதியை மீறி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட 7 பேர் விடுதலை*

*BREAKING:*

 *சட்டவிரோத தொலைபேசி இணைப்பு தொடர்பான வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு - சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம்.*


🔵⚪மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் இரு வாரங்களுக்கு முன்னர் ஜெ. ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டார்

ஸ்டீராய்டு மருந்து எடுத்து கொண்டதால் அவரது உடல்நிலை பாதிக்கப்படவில்லை

மருத்துவமனையில் நான் அவருடன் உடனிருந்தேன் 

வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார்- டாக்டர் சிவக்குமார் 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் இருநாள்கள் முன்னரே ஜெ.வுக்கு லேசான காய்ச்சல் இருந்தது- சிவக்குமார்

 ஜெயலலிதா வீட்டில் மயங்கிவிழுந்தவுடன் முதலுதவி அளிக்கப்பட்டு அப்பல்லோ அழைத்து சென்றோம்

🔵⚪உ.பி இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சிறந்த வெற்றி - மம்தா பேனர்ஜி

பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இது - மம்தா பேனர்ஜி 

உ.பி இடைத்தேர்தல் குறித்து மம்தா பேனர்ஜி டிவிட்டரில் கருத்து

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More