Hi manisat
#ref-menu

Wednesday, March 14, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 14/03/18 Today Tamil ManisatNews

  *3pm-14-3-2018-wednesday-புதன்கிழமை*   

இன்றைய மணிசாட் செய்திகள்  14/03/18 Today Tamil ManisatNews




♈🇮🇳🌴*அண்ணாமலை பல்கலைக்கழகம் , இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி தமிழக அரசின்  ஆணைப்படி சிதம்பரம் அரசு மருத்துவமனை  உடன்  இணைக்கபட்டு உள்ளது  அங்கு இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய  ஆரம்பித்து விட்டார்கள்  ...
♈🇮🇳 ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும். வெடிகுண்டு தயாரிக்க முக்கியமாக இருந்ததே அந்த பேட்டரிகள்தான். 9வாட் பேட்டரியை கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்று டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு தெரியாதா?.ராஜிவ் கொலை வழக்கில், 9 வோல்ட் பேட்டரியை தாண்டி பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் இருக்கின்றன, அதற்கு உங்கள் பதில் என்ன..?பேரறிவாளன் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பேரறிவாளன் விடுதலைப்புலிகளின் அனுதாபி. அவருக்கு விடுதலைப்புலி இயக்கத்தினருடன் நேரடி தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. 25ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என்றும்சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

♈🇮🇳 சுக்மா நக்சல் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட 3 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு

♈🇮🇳 குயின்ஸ்லாந்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை பெண் ஒருவர் லாவகமாக பிடித்துள்ளார்

♈🇮🇳 அல் கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க குடிமகனுக்கு 45வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.வாஷிங்டன்

♈🇮🇳 கார் ஓட்ட பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுமி ஒருவரின் உயிரைப் பறித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது..சென்னை,சூளைமேடு

♈🇮🇳 வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 2ஆயிரம் குமரி மாவட்ட மீனவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த 200 விசைப்படகுகளில், 2ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்றுள்ளனர்

♈🇮🇳 சூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய தீப்பிழம்புகள் உருவாகி உள்ளனவாம். இந்த தீப்பிழம்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிக திற்னுடன் இருப்பதால் ஏற்படும் புயல் பூமியை தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து வெளியாகும் தீப்பிழம்புகள் பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாக உருவெடுத்து தாக்குமாம். இதனால் பூமியின் இயர்கை தன்மை மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு,பூமியை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். விமானங்களின் ஜிபிஎஸ் சிஸ்டம் பாதிப்பு,பூமியில் சில இடங்களில் மின் வினியோக பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளனர்

♈🇮🇳 குஜராத் சட்டசபையில் அடிதடி - பாஜக எம்எல்ஏ மீது காங்கிரஸ் எம்எல்ஏ தாக்குதல்
♈🇮🇳   உத்தர பிரதேச அரசு ஆவணங்களின்படி கடந்த ஒரு வருடத்தில்1,038 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கணக்குப்படி தினமும் 4 பேர் மரணம் அடைகிறார்கள். ஒரு மாதத்திற்கு 120 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள். இந்த பகுதியில் அதிகம் கொலை செய்யப்பட்டது இஸ்லாமியர்களும், தலித்துகளும்தான். இந்த கொலையில் 14ல் 13பேர் இஸ்லாமியர்கள் என்பது உறையவைக்கும் உண்மை. இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக தலித்துகள் அதிகமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தேர்தலில் பிரதிபலித்துள்ளது. பாஜகவினர்,மீடியாக்காரர்களை வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றினர். மீடியாக்களுக்கு, உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை தகவல் தெரிவிக்க கூடாது என தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஒரு மர்மமான சூழல் அங்கு நிலவுகிறது
♈🇮🇳 நடிகர் அஜித்துக்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 'பில்லா' படத்துக்குப் பிறகு மலேசியாவில் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் வருடாவருடம்'ஃபுட்சால்' என்ற விழிப்புணர்வு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.மலேசியா அஜித் நல்லெண்ண ரசிகர் மன்றம் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடமும் வரும் மார்ச் 24-ம் தேதி இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன

♈🇮🇳 அதிநவீன கண்டுபிடிப்புகள், அவுட் சோர்ஸ்,இறக்குமதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்ற காரணங்களால் அடுத்த பத்தாண்டுகளில் காணமல் போகும் 6 தொழில்களின் பட்டியல் ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ளது.ஐ.டி துறையில் மட்டுமல்ல, உலகின் அத்தனை துறைகளுக்குள்ளும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டது ஆட்டோமேஷன். தொழிற்சாலைக‌ள் முதல் நெடுஞ்சாலைக‌ள் வரை எல்லாவற்றிலும் ஆட்டோமேஷன் நுழைந்துவிட்டது-செமிகண்டக்டர் (ஐ.ஸி)- நெசவுத்தொழில்-தபால் துறை-புகையிலை உற்பத்தி-தோல் உற்பத்தி-செய்தித்தாள்-ஸ்பிரிங் உற்பத்தி

♈🇮🇳 உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக தோல்விமுகத்தில் உள்ள நிலையில், நரேந்திர மோடியின் அலை நாட்டில் ஓய்ந்துவிட்டது என்று, அதன் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது

♈🇮🇳 நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி இன்று பதவியேற்க உள்ளார்

♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறும்பட்சத்தில் மக்களின் உணர்வுக்கு ஏற்ப போராட்டம் விரிவடையும் - தம்பிதுரை எம்.பி

♈🇮🇳 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து கலாநிதி, தயாநிதி விடுவிக்கப்பட்டுள்ளனர். கலாநிதிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

♈🇮🇳 விருதுநகர்: திருச்சுழி அருகே அ.முக்குளத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

♈🇮🇳 மதுரை: பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரசாரம் மேற்கொள்ள விதித்த தடையை நீக்கக் கோரிய வழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. துண்டு பிரசாரம்,வலைத்தளங்களில் பிரசாரம் செய்ய தடை விதித்ததற்கு எதிராக வழக்கறிஞர் ஆனந்த முருகன் தொடர்ந்த வழக்கு மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினசரி பஸ் பாஸ் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. சில மாற்றங்களுடன் தினசரி பஸ் பாஸ் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும்,  கட்டணத்திலும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது

♈🇮🇳 தமிழகத்தில் ஆண்டுக்கு 17,000சாலை விபத்துகள் ஏற்படும் நிலையில், சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. சென்னை டிஎம்சி வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர்,ஆஸ்திரேலியா அமைச்சர் லியோன் மெல்டன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

♈🇮🇳 சென்னை: 2வது மாடியிலிருந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு

♈🇮🇳 விவாதமில்லாமல் லோக்சபாவில் பட்ஜெட் நிறைவேற்றம்

♈🇮🇳 குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம்

♈🇮🇳 கடந்த 2 நாட்களாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.23,300 க்கும் கீழாகவே இருந்து வந்தது. திருமண சீசன் சமயத்தில் இன்று (மார்ச் 14) மீண்டும் ரூ.23,300 ஐ கடந்துள்ளது வாடிக்கையாளர்களை கவலையடைய வைத்துள்ளது

♈🇮🇳 சேமிப்பு கணக்கில், குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41.16 லட்சம் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More