Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

Today news இன்றைய செய்திகள்

♈🇮🇳🌴 *1.30pm-3-3-2018-saturday-செவ்வாய்கிழமை*  🌴🇮🇳  ♈  

♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வி மக்கள் மனதில் ஊஞ்சலாடுகிறது
♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் இருந்து செல்ல இருந்த குழுவை பார்க்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா?
♈🇮🇳 பள்ளிக்கு வரும் மாணவ,மாணவிகளை படிக்க விடாமல் பாத்திரம் கழுவ வைத்து சமையலறை,கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்தும் ஆசிரியர்கள் வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகிலுள்ள சோபனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்
♈🇮🇳 தமிழக அரசை வேண்டுமானால் பிரதமர் கிள்ளுக்கீரையாக நினைக்கலாம். தமிழர்களை அப்படி நினைத்து விடாதீர்கள் என்று வைகோ கூறியுள்ளார்

♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து மறுத்தால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்
♈🇮🇳இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் டடோபாவிலுள்ள புலிகள் காப்பகத்தில் புலிக்கும்,கரடிக்கும் இடையே நடைபெற்ற அரிய சண்டையின் தத்ரூப காட்சிகள் வெளியாகி உள்ளன

♈🇮🇳பர்கீனா ஃபாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்கானது

♈🇮🇳 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியபோது, அவரை துரத்தி சென்று பிடிக்க போலீஸ் நாய் உதவியது

♈🇮🇳 சராஹா ஆப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலானது. இதன் மூலம் முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கமெண்ட்களை பெற முடியும். மேலும், மற்றவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் என்பது இந்த செயலியை உருவாக்கியவர்களின் கருத்து. சராஹாவில் மற்றவர்களின் ப்ரோஃபைல்களை பார்த்து,அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.ஆனால்,மெசேஜ் பெற்றவர்கள் அனுப்பும் மெசேஜை மட்டிமே பார்க்க முடியும், அதை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது. இதில் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். ஆனால், தனி நபர் பாதுகாப்பு அம்சங்கள் சற்று கேள்விகுறியாவே இருந்தது. இந்நிலையில்,இந்த ஆப் அதிக தொந்தரவு அளிப்பதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இது குறித்து Change.org என்ற வலைதளத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சராஹா செயலியை நீக்கக் கோரியிருந்தார். சராஹா ஆப் மிகவும் தொந்தரவு அளிப்பதை ஒப்புக்கொண்ட 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இதற்கு ஆதரவு அளித்தனர். இதனால் இந்த ஆப் நீக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 விஸ்வாசம் படத்திற்காக தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஜித்

♈🇮? திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - பாரதீய ஜனதா மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன. பாரதீய ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டம்.

♈🇮🇳 கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

♈🇮🇳அமெரிக்காவின் போஷ்டான் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக 5 பேர் பலியாகியுள்ளனர் 

♈🇮🇳காவிரி படுகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது – கமல்------------ சென்னை விமான நிலையத்தில்78வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து. ----------- தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் -----------------முதலமைச்சர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது- அமைச்சர் ஜெயக்குமார் ------

♈🇮🇳காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முதல் அமைச்சர் பழனிசாமியுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்  
♈🇮🇳காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தினை சந்திக்க பிரதமர் மறுப்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம் என மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

♈🇮🇳 துணைவேந்தர்களுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More