Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

3 மாநில தேர்தல் முடிவுகள்- திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போ

*live update 3 மாநில தேர்தல் முடிவுகள்- திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி*

*📡நாகாலாந்து(50/60)*

பாஜக- 25
என்பிஎஃப்-24
காங்கிரஸ்- 0
மற்றவை-1

*📡திரிபுரா(58/59*

மார்க்சிஸ்ட்-31
பாஜக- 26 
மற்றவை- 1

*📡மேகாலயா(42/59)*

காங்கிரஸ்-18
பாஜக- 0 
என்பிபி- 10
மற்றவை- 14
*Breaking:*

*தமிழக பட்ஜெட் மார்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்.*

*2018 - 19ஆம் ஆண்டுக்கான  தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்.*
*முக்கிய அறிவிப்பு*

_*பார்வதிபுரம் போக்குவரத்து மாற்றம்*_

_5ம் தேதி திங்கள்கிழமை முதல் அமல்_

* _*சுஷ்ருஷா மருத்துவமனை முன்னிருந்து பார்வதிபுரம் வரை எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை*_ 

* *இருசக்கர வாகனங்கள் இறச்சகுளம் சாலை திரும்பி Ponjesly கல்லூரி சென்று வலது புறம் திரும்பி சானல் கரையோரமாக பார்வதிபுரம் செல்ல வேண்டும்*

* *கார்கள் இறச்சகுளம் சாலை திரும்பி சானல்கரையோரமாக சென்று ரயில்வே கிராசிங் தாண்டி பின்னர் இடதுபுறமாக திரும்பி பார்வதிபுரம் EB அலுவலக சாலை மார்க்கமாக வரவேண்டும்*

* *கனரக வாகனங்கள், வேன்கள் இறச்சகுளம் புத்தேரி வழியாக வரவேண்டும்* 

* *குளச்சலில்* இருந்து வருகிறவர்கள் *ராஜக்கமங்கலம்* வழியாக வர வேண்டும் 

* *திங்கள்நகரில்* இருந்து வருகிறவர்கள் குருந்தன்கோடு, *ஆசாரிபள்ளம்* வழியாக வரவேண்டும் 

* *குலசேகரத்தில்* இருந்து வருகிறவர்கள் பூதப்பாண்டி, இறச்சகுளம், புத்தேரி வழியாக வர வேண்டும் 

_*கன்னியாகுமரி - திருவனந்தபுரம் செல்ல கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி, புத்தளம், ஈத்தாமொழி, ராஜக்கமங்கலம், குளச்சல், கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு, பழைய உச்சக்கடை வழியாக செல்ல வேண்டும்*_

*திரும்பி செல்லவும் இதே சாலை வழியாக செல்லவும்*

*வேகமாக பகிருங்கள்*
*திரிபுராவில் இடதுசாரியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க முன்னிலை....*

*நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் என்.பி.எஃப் 33 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை.*

*திரிபுரா: இடதுசாரி-30, பாஜக-28 இடங்களில் முன்னிலை.*

*மேகாலயா: காங்.-21, என்.பி.பி-15, பாஜக-6 இடங்களில் முன்னிலை.*
*🔵 ELECTION*

*✍3 மாநில தேர்தல் முடிவுகள்- திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி*

*✍நாகாலாந்து(59/60)*

பாஜக- 24
என்பிஎஃப்-32
காங்கிரஸ்- 0
மற்றவை-3

*✍திரிபுரா(59/59)*

மார்க்சிஸ்ட்-30
பாஜக- 28 
மற்றவை- 1

*✍மேகாலயா(56/59)*

காங்கிரஸ்-21
பாஜக- 0
என்பிபி- 15
மற்றவை- 20
*சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்: ஐநா மனித உரிமை பிரிவு அறிவிப்பு*

ஜெனிவா: சிரியாவில் அரசுப்படைகளும், ரஷ்யப்படைகளும் 13 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி ரஷ்ய விமானப்படை குண்டுவீசி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தினமும் ஐந்து மணிநேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது. 

இருந்தபோதிலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய பேரவை ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் போர் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் கூடிய மனித உரிமை பிரிவு கூட்டத்தில் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சிரியா பிரதிநிதி, தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் மிகைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இறுதியில் பேசிய மனித உரிமை ஆணைய பேரவை தலைவர், சிரியாவில் நடப்பது அப்படமான போர்க்குற்றம் என்றும் கிளர்ச்சியாளர்களை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
*🌴🐯🇮🇳🕊🌴சிரியா தாக்குதல் -வைரமுத்து  உருக்கமான கவிதை!*

சிரியா தாக்குதல் குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமாக கவிதை எழுதியுள்ளார். "எலும்புக் கூடுகளில் எது சியா, எது சன்னி எனத் தெரியாது.. போரும், மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை. குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்" என்று மரண ஓலத்தை கவிதையாக தெரிவித்துள்ளார். குழந்தைகளின் மரண ஓலத்தை கேட்டுமா? உங்களுக்கு இரக்கம் வரவில்லை...
*🌴🐯🇮🇳🕊🌴ஒரே நாளில் 2 ஹாட்ரிக்...*

நியூசிலாந்தில் உள்நாட்டு முதல்தர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 'பிளங்கட் ஷீல்டு' கோப்பைக்கான தொடரில் வெலிங்டன், கேன்டர்பரி அணிகள் மோதிய போட்டியில், வெலிங்கடன் வீரர் லோகன் வான் பீக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதேபோல், ஆக்லாந்து, வடக்கு மாவட்ட அணிகள் மோதிய போட்டியில் ஆக்லாந்து வீரர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இது நியூசி., கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையாகும்.
*🌴🐯🇮🇳🕊🌴"மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு”*

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு” எனப் பதிவிட்டுள்ளார்.
*🌴🐯🇮🇳🕊🌴கேரள முதல்வர் மருத்துவமனையில் அனுமதி...*

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாக இன்று அதிகாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்றதாகவும், எந்த உடல்நிலை குறைபாடும் இல்லை எனவும் மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*🌴🐯🇮🇳🕊🌴ஒரு ரூபாய் செலவு இல்லாமல்- ஜியோ* 

10ஜிபி இலவச டேட்டா!
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் 1299 என்ற டோல்பி-ப்ரீ எண்ணுக்கு கால் செய்து 10ஜிபி இலவச டேட்டா பெற்றுக்கொள்ளலாம். அதனை மார்ச் 27-க்குள் பயன்படுத்திட வேண்டும். ஜியோ வேலை செய்யவில்லை என்பதைத் திசை திருப்பவே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
*🌴🐯🇮🇳🕊🌴77வது முறையாக கண்ணாடி டமால்*

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது வழக்கமாகி வருகிறது. தற்போது 77வது முறையாக உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. இதனால் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திரிபுராவில் இடதுசாரியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க முன்னிலை....*

*நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் என்.பி.எஃப் 33 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை.*

*திரிபுரா: இடதுசாரி-30, பாஜக-28 இடங்களில் முன்னிலை.*

*மேகாலயா: காங்.-21, என்.பி.பி-15, பாஜக-6 இடங்களில் முன்னிலை.*
*சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்: ஐநா மனித உரிமை பிரிவு அறிவிப்பு*

ஜெனிவா: சிரியாவில் அரசுப்படைகளும், ரஷ்யப்படைகளும் 13 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி ரஷ்ய விமானப்படை குண்டுவீசி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தினமும் ஐந்து மணிநேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது. 

இருந்தபோதிலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய பேரவை ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் போர் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் கூடிய மனித உரிமை பிரிவு கூட்டத்தில் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சிரியா பிரதிநிதி, தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் மிகைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இறுதியில் பேசிய மனித உரிமை ஆணைய பேரவை தலைவர், சிரியாவில் நடப்பது அப்படமான போர்க்குற்றம் என்றும் கிளர்ச்சியாளர்களை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
*🔰🔰அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சரை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்பது முற்றிலும் தவறானது : அமைச்சர் ஜெயக்குமார்*

*🔰🔰தமிழகத்தில் 5 #தாய்ப்பால் #வங்கிகள் அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் #விஜயபாஸ்கர் தகவல்*

சென்னை: தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.10 கோடியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம், ரூ 20 கோடியில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தகவல் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More