Hi manisat
#ref-menu

Tuesday, March 6, 2018

இன்றைய ராசிபலன்கள் 06.03.2018 today rasipalan

இன்றைய ராசிபலன்கள்  06.03.2018 today rasipalan 
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜


இன்றைய ராசிபலன்கள் - 


     🔔06.03.2018 🔔


⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜



♈ மேஷம் : 

தாயின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : ஆரோக்கியம் மேம்படும்.
பரணி : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : சுப செய்திகள் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♉ ரிஷபம் :

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். தன்னம்பிக்கை மேம்படும். மனையில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குறுகிய தூர பயணத்தால் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.
ரோகிணி : முயற்சிகள் ஈடேறும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♊ மிதுனம் :

குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். நினைவாற்றல் மேம்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அந்நியர்களால் வருமானம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் : நினைவாற்றல் மேம்படும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♋ கடகம் :

எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான சிந்தனைகள் மேம்படும். நீர் வழி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எண்ணிய இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : சிந்தனை மேம்படும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♌ சிம்மம் :

எதிர்பாராத சுப செய்திகளால் சுப செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் நிதானம் வேண்டும். பழைய கடனை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : சுப செய்திகள் கிடைக்கும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : தனவரவு உண்டாகும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ கன்னி :

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : திறமையால் இலாபம் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ துலாம் :

புதிய தொழில் செய்வதற்கான சிந்தனைகள் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : தொழில் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ விருச்சகம் :

அறச்செயல்களால் புகழ் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு உயரும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : செல்வாக்கு உயரும்.
அனுஷம் : தடைகளை களைவீர்கள்.
கேட்டை : நம்பிக்கை மேம்படும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ தனுசு :

பணியில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்படவும். இயந்திரம் சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்படவும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இழுபறியான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : அமைதி காக்கவும்.
பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ மகரம் :

கணவன், மனைவிக்கிடையே அன்பு மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எண்ணிய இலாபம் உண்டாகும். மனைவியால் சேமிப்பு உயரும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : உறவு மேம்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : இலாபம் உண்டாகும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ கும்பம் :

தந்தையிடம் பேசும்போது சற்று கவனத்துடன் இருக்கவும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களால் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம். எண்ணிய செயலில் தடங்கல்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : பேச்சில் கவனம் தேவை.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பணியில் நிதானம் வேண்டும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

♍ மீனம் :

சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளினால் பணியில் சாதகமற்ற சூழல் உண்டாகும். மந்தத் தன்மையால் பணியில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
உத்திரட்டாதி : செயல்பாடுகளில் கவனம் தேவை.
ரேவதி : பணியில் எச்சரிக்கை தேவை.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🚩🙏🔯🕉பக்தி🕉🔯🙏🚩
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More