இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil
♈🇮🇳🌴 *9.30am-6-3-2018-tuesday-செவ்வாய்கிழமை*
♈🇮🇳🌴 TN 72 G 1464 மாவட்ட ஆட்சியர் வாகனம் ஏற்படுத்திய அச்சுறத்தலில் இருந்து தப்பித்தேன் மேலுலகம் செல்வதிலிருந்து . சில மணி நேரத்திற்கு முன் மெரீனா கடற்கரை சாலையில் மைலாப்பூரிலிருந்து கடற்கரை சாலை வழியாக இராயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த ஓர் கார் அருகில் வந்து ஒரு அணை அணைத்து விட்டு வேகமாக சென்றது.நல்ல வேலை வாகனத்தை கண்டுபிடிக்க நினைத்த போது துறைமுக ட்ரஸ்ட் அருகில் சிக்னலில் நின்றது. அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில் அந்த வாகனத்தை பார்த்த போது மாவட்ட ஆட்சியர் என்று குறிப்பிடபட்டிருந்தது . உயர்ந்த பதவியில் இருப்பவர்களே சாலையில் இப்படி வேகமாக பயமுறுத்தி பயணித்தால் எங்க போய் சொல்வது.விஸ்வரூபம்
♈🇮🇳 கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மேற்குவங்க மாஜி பெண் ஐ.பி.எஸ். அதிகாரி காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது
♈🇮🇳🌴மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
♈🇮🇳 விழுப்புரம்: வெள்ளம்புத்தூரில் சிறுவன் சமயன் கொலை மற்றும் தாய் ராமாயி, சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 300பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது
♈🇮🇳 திருப்பூர்: பல்லடம்-மங்கலம் சாலையில் சாலையோரம் இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
♈🇮🇳 Saposhi can take over electronic devices and use them for DDoS attack
♈🇮🇳 நீரவ் , முக்கூல் ஜோஷி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த பணம் அவர்களுடைய யு எஸ் சார்ந்த நிறுவனங்கள் வழியாக பல வங்கிகள் மூலமாக திசை திருப்பட்டிருக்கலாம் .அதற்கு இந்திய வங்கிகள் பல வழிகளில் துணை நின்றிருக்கிறது என்று ஒரு தகவல்?????
♈🇮🇳 தெற்கு டெல்லியில் முப்பத்தைந்து வயது மதிக்க தக்க ஒருவர் மர்ம மனிதனால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸ் தகவல்.சித்தரஞ்சன் பூங்கா
♈🇮🇳 பனாமா நகரில் உள்ள டிரம்ப் ஹோட்டலின் உரிமையாளர் திங்கட்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதியின் குடும்பத்தின் நிர்வாக நிறுவனத்தை கட்டடத்திலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெற்றார்.வர்த்த ரீதியான பிரச்னையை அந்த நகர் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது
♈🇮🇳 டெக்சாஸில் ஒரு இறைச்சி தயாரிப்பு நிறுவனத்தில் அமெரிக்கர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில். சட்டபூர்வ அங்கீகாரமில்லாமல் அதிகளாக வருபவர்களே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கலாம்
♈🇮🇳 தெற்கு காஷ்மீரில் ஷாசியானில் துப்பாக்கிச் சூடு நடந்தது இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராணுவம் தனது செக் போஸ்ட் இவர்களால் தாக்கப்பட்ட போது எதிர் தாக்குதலில் அந்த பயங்கரவாதிகளும் அவர்களது கூட்டாளிகளும் கொல்லப்பட்ததாக தகவல்
♈🇮🇳 சீனா இந்தியாவை விட மூன்று மடங்கு தன் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு நிதியை உயர்த்தி உள்ளது -$175 Billion
♈🇮🇳 தென்னாப்பிரிக்க திங்களன்று காண்டா மிருங்கங்களின் கொம்புக்கு ஒரு ஆன்லைன் சந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது, திறந்த வர்த்தக வியாபாரத்தில் மிருகங்களை வேட்டையாடி கள்ள சந்தையில் விற்பதை தடுக்க உதவும் என்று கூறியுள்ளனர்
♈🇮🇳 மனதில் இரண்டு பக்க நாடுகளின் முற்றுகை போரைக் நினைவில் கொண்டு, போரை எதிர்கொள்ள இந்திய கடற்படை இராணுவம், விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து ஒரு கடினமான இராணுவ பயிற்சியை மேற்கொண்டது
♈🇮🇳 இந்தியாவின் பட்மின்டன் சங்கத்திலிருந்து அசாம் மந்திரி மற்றும் ஹிந்து பிஸ்வா சர்மா ஆகியோரை வெளியேற்றுவதற்கு தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது
♈🇮🇳 இந்தியா மற்றும் சீனா உறவுகளை மேம்படுத்துவதில் வேகத்தை அதிகரிக்க இரண்டு நாடுகளும் மும்முரம் காட்டுகின்றன , இந்த மாதம் இருநாடுகளும் இடையே நடக்கும் உச்சிமாநாடு கூட்டம் இதற்கு வழிவகுக்கிறது
♈🇮🇳சோபாசி ஒரு புதிய வைரஸ் அச்சுறுத்தலானது சைபர்ஸ்பேஸ் தொடுதிரையில் பெரியதாக தாக்குதல் இருக்கும் என்று தெரிய வருகிறது . மிராய் மற்றும் ரீப்பீருக்குப் கண்டு பிடிப்புக்களுக்கு பின், சோபாசி என்ற புதிய வைரஸ் தீப்பொருளை ஃபயர்பவரை, முழு தொழிற்துறையையும் முடக்கிவிடலாம் . எலெக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து, அவற்றை 'போட்ஸ்' என்று மாற்றக்கூடிய திறன் கொண்டது- A new threat looms large on the horizon of cyberspace. After Mirai and Reaper, cybersecurity agencies have detected a new malware called Saposhi, which is capable of taking over electronic devices and turning them into ‘bots’, which can be then used for any purpose, including a Distributed Denial Of Service attack which, with enough firepower, can cripple entire industries
♈🇮🇳. தெலுங்கான மாநிலத்திற்கு சிறப்பு தொகுப்பு மற்றும் மற்ற 19 கோரிக்கைகளில் நான்கு பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளிவரும் –மத்திய மந்திரி அருண் ஜெட்லி ♈🇮🇳 தில்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் மற்றும் டெல்லி-மீரட் அதிவேக நகர்ப்புற இரயில் இணைப்பு ஆகியவற்றின் கட்ட நிர்மாணத்தின்படி விரைவில் பணிகள் நடைபெறும் என மத்திய அரசு கூறியுள்ளது
♈🇮🇳 தனது 91 வது பிறந்த நாள் அன்று புரூஷிய ஸ்பானிஷ் எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கெஸுக்கு Google இன்று அஞ்சலி செலுத்தியது
♈🇮🇳 பிப்ரவரி 28 ம் தேதி மத்திய தகவல் தொடர்பு துறை 208 கோடியை உள்நாட்டு மற்றும் கூடுதல் வரவு-செலவுத் திட்ட ஆதாரங்களில் இருந்து அல்லது பி.பீ.வின் தற்செயல் நிதிகளிலிருந்து விடுவித்தது: அமைச்சரகம் PB க்கு மாதாந்திர உதவித் நிதி தொகையை விடுவிக்கவில்லை
♈🇮🇳 புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 900 காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்
♈🇮🇳 தலைமை ஆசிரியை அடித்ததில்6ம் வகுப்பு மாணவன் கை எலுப்பு முறிந்துள்ளது. பள்ளி வளாகத்தில் விளையாடியதற்காக மாணவனை தலைமை ஆசிரியை அடித்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ பள்ளி மாணவன் கோகுலகிருஷ்ணன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
♈🇮🇳 டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளனர். ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது
♈🇮🇳 ஹார்வர்ட் பல்கலை. தமிழ் இருக்கைகள் அமைய தேவையான நிதி திரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் இருக்கைகள் அமைய உழைத்த தன்னார்வலர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் செயற்குழு நன்றி தெரிவித்துள்ளது
♈🇮🇳 டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளனர். ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது
♈🇮🇳சென்னை: பூக்கடை தொழிலாளி கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,தேடப்பட்டு வந்த திவான் கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளான்.
♈🇮🇳 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முழு மின்உற்பத்திக்கான பணிகள் தொடங்கியது. 4வது அலகில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 21ம் தேதி மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் 4வது அலகில்210 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. ஏற்கனவே 1,2,3அலகுகளில் 640 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது
♈🇮🇳 மேகாலயா முதல்வராக சங்மா இன்று பதவியேற்பு?
♈🇮🇳 கேரளாவில் விபத்து: 3 தமிழர்கள் பலி
♈🇮🇳 லோயா மரணத்தில் லேசான சந்தேகம்: சுப்ரீம் கோர்ட் கருத்து
மார்ச்-06: பெட்ரோல் விலை ரூ. 75.07, டீசல் விலை ரூ.66.39
0 comments:
Post a Comment