இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil
*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் இன்று காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவிப்பு.*
*🔵⚪BREAKING | கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விரட்டியடிப்பு*
*ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியதால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 1000 மீனவர்கள் கரை திரும்பினர்*
*🔵⚪பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்....*
*🔵⚪தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக கூறி சிலர் கட்சி ஆரம்பித்துள்ளனர்*
அவர்களது முடிவு சரியா, தவறா என்பது தேர்தலின் போது தெரியும் - ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன்
*🔵⚪சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு*
*🔵⚪திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாள் திண்டுக்கல் அருகே வத்தலகுண்டில் உடல்நலக்குறைவால் காலமானார்*
முன்னாள் அமைச்சரும், தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாள்,92, நேற்று இரவு மரணமடைந்தார்.கடந்த சில நாட்களாக வயது முதிர்வால், உடல்நலம் பாதிப்படைந்தார். சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று இரவு வத்தலகுண்டு நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். அவரது உடலுக்கு அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று (மார்ச் 6) மாலை 4:00 மணிக்கு வத்தலக்குண்டு நகரில் நடைபெற உள்ளது. இவரது பேரன் செந்தில்குமார் பழநி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
*🔵⚪ஹார்வர்ட் பல்கலை. தமிழ் இருக்கைகள் அமைய தேவையான நிதி திரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
6 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் இருக்கைகள் அமைய உழைத்த தன்னார்வலர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் செயற்குழு நன்றி தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment