Hi manisat
#ref-menu

Tuesday, March 6, 2018

இன்றைய ராசிபலன்கள் 06.03.2018 today tamil rasipalan

இன்றைய ராசிபலன்கள்  06.03.2018 today tamil rasipalan 

🌞 *தின பலன்* 🌞
      *06/03/2018.*


*ராசி பலன்கள் மேஷம்*
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்

*ராசி பலன்கள் ரிஷபம்*
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்

*ராசி பலன்கள் மிதுனம்*
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தல் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்

*ராசி பலன்கள் கடகம்*
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை

*ராசி பலன்கள் சிம்மம்*
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்

*ராசி பலன்கள் கன்னி*
கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆரஞ்சு

*ராசி பலன்கள் துலாம்*
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:கிரே,மஞ்சள்

*ராசி பலன்கள் விருச்சிகம்*
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா

*ராசி பலன்கள் தனுசு*
தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,கருநீலம்

*ராசி பலன்கள் மகரம்*
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிரே

*ராசி பலன்கள் கும்பம்*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்

*ராசி பலன்கள் மீனம்*
சந்திராஷ்டமம் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ஊதா,இளஞ்சிவப்பு.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More