இன்றைய செய்திகள் 05/03/2018 Today News Tamil
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் வரும் 9ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் - 4 மாநிலங்களுக்கு அழைப்பு.
தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது.தமிழகத்திற்கு ஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்.ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கிறார் - நடிகர் ரஜினி.
தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்.
மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம் - நடிகர் ரஜினி.
எம்ஜிஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்.அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது.நான் தற்போது வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க காரணமானவர் எம்ஜிஆர் - நடிகர் ரஜினி.
அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை.படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - நடிகர் ரஜினிகாந்த்.
தூய்மையான அரசியல்தான் ஆன்மீக அரசியல்.ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள்.அரசியல் பாதை எனக்கும் தெரியும், பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை - நடிகர் ரஜினி.
அப்போலோ மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்டிருந்த நிலையில் விரைவில் மருத்துவக்குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்.
5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம் : சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு.
திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேச்சு : பாஜக , காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள்.
சென்னை : மதுரவாயலில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
திமுகவுடன் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி எதுவும் இல்லை.தேர்தலில் 234 தொகுதிகளிலும் எனது தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் - டிடிவி.தினகரன்.
காவிரி விவகாரம் : 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, டெல்லியில் வரும் 9-ம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.
மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும் - நடிகர் கமல்ஹாசன்.
அரசியலில் நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் - நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக மார்ச் 9ம் தேதி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராக ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனுக்கு சம்மன்.
தமிழகத்தில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்களை புதுப்பித்து மேம்படுத்த ரூ.876 கோடி புதிய முதலீடு - மக்களவையில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே எழுத்துப்பூர்வமாக விளக்கம்.
முக்கிய பிரமுகர்கள் செல்லும் பொது 10 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்த ஐகோர்ட் உத்தரவு : வழக்கறிஞர் துரைசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவதாக தொடர்ந்த வழக்கில் கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீதான புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் அதிகாரத்தை பிடிக்க பாஜக முயற்சிப்பதாக ராகுல்காந்தி கண்டனம்.
கொச்சியில் இருந்து பெங்களூரு வரை கெயில் குழாய்கள் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.175 கிரமங்களில் 50,000 ஏக்கர் நிலங்களில் கெயில் குழாய்கள் அமைக்கப்படுகின்றன - பேராசிரியர் ஜெயராமன்.
சொத்து குவிப்பு வழக்கு : டிடிவி.தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, கணவர் பாஸ்கரன் சரண்- சிறையிலடைக்க உத்தரவு.
மதுவிலக்கை அமல்படுத்தினால், அதைவிட கொடிய போதைகளுக்கு மக்கள் அடிமையாவார்கள் - நடிகர் கமல்ஹாசன்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 12-ல் ஆரம்பம் : மாநிலம் முழுவதும் 70 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி,விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு.
தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணை மண்டலம் : லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.
அனைத்து வாடிக்கையாளர்களும் எம்என்பி சேவை பெறும் வரை ஏர்செல் தனது சேவையை தொடர உத்தரவிடக் கோரி பொதுநல மனு : வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க டிராய்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மதுரை என்கவுன்டர் வழக்கு : சரணடைந்த மாயக்கண்ணனுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் - வாடிப்பட்டி நீதிமன்றம்.
சாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
நித்தியானந்தா மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய தடை விதித்தது உயர் நீதிமன்றம்.
தாஜ் மஹால் அருகே ஆளில்லா விமானம் - வெளிநாட்டுக்காரர் உள்பட இருவர் கைது.
ரஷ்யாவில் நடந்த டால் மெமோரியல் செஸ் தொடரில் ஆனந்த் சாம்பியன்.
ஆஸ்கர் விழாவில் ஶ்ரீதேவி மற்றும் சசி கபூருக்கு நினைவஞ்சலி.
புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம், முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
0 comments:
Post a Comment