இன்றைய செய்திகள் 05/03/18 Today News Tamil
*♨ஜிப்மர் மருத்துவக்கல்லூரி படிப்புகளுக்கு ஜுன் 3ஆம் தேதி நுழைவுத்தேர்வு♨*
☀புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவ இடங்களுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஜீன் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
☀புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான நுழைவுத்தேர்வு ஜீன் மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் தெரிவிவித்துள்ளார்.
☀மேலும் நுழைவுத்தேர்விற்கு வருகின்ற 7ஆம் தேதி முதல் ஏப்ரல்13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 120 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறு உள்ளதாகவும், இந்த தேர்வில் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாக கூறியுள்ளது
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
: *♨சீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜி ஜின்பிங்♨*
☀சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங்கைத் தேர்ந்தெடுப்பதற்கான அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
☀பதினைந்து நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத் தொடரில், 3 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இரண்டு முறைக்குமேல் ஒருவர் அதிபர் ஆவதைத் தடுக்கும் அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
☀இதற்கான வாக்கெடுப்பு வரும்11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுந்தாலும், அரசின் கெடுபிடி காரணமாக அந்தத் தகவல்கள் அதிகம் வெளியாகவில்லை.
☀மார்ச் 11ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் போது, நாடாளுமன்றத்திற்குள் செய்தியாளர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
*┈┉┅━❀☀☀❀━┅┉┈
*♨சாலையில் மது அருந்திய கும்பலை தட்டிக் கேட்ட காவலருக்கு அடி- சாதாரண பிரிவில் மட்டும் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்ததாகப் புகார்♨*
☀சென்னை விருகம்பாக்கத்தில் காவலர் ஒருவர் போதைக் கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாக்கிய நபர்கள் மீது சாதாரண பிரிவில் மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
☀ராயலா நகர் காவல் ஆய்வாளராக இருப்பவர் நாகராஜ். இவர் காவலர் பாலமுருகனுடன் நேற்றிரவு விருகம்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது வேர் ஹவுஸ் அருகே ஆற்காடு சாலை சிக்னல் பகுதியில் இளைஞர்கள் 3 பேர், சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை பாலமுருகன் தட்டிக் கேட்ட போது மூவரும் சேர்ந்து அவரை சரமாரியாக காவல் ஆய்வாளர் கண் முன்னே தாக்கியுள்ளனர்.
☀இதை அடுத்து அவர்களை கே.கே.நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் நாகராஜ் 75 பிரிவின் கீழ் மட்டும் வழக்குப்பதிவு செய்து, அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. காவலரை தாக்கிய அந்த 3 பேரும் ஆய்வாளருக்கு தெரிந்தவர்கள் என்பதால் சாதாரண பிரிவில் வழக்கு பதிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
*♨தமது காலணிகள் மாயமானதால், குடித்து விட்டு வந்து மாணவர்களை ஆசிரியர் அடித்ததாகப் புகார்♨*
☀விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தமது காலணிகள் மாயமானதால், குடித்து விட்டு வந்து மாணவ மாணவிகளை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
☀கள்ளக்குறிச்சியில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் பணிபுரியும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் விஜயகுமாரின் காலணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.
☀இதையடுத்து இன்று அவர் பள்ளிக்கு குடித்து விட்டு வந்ததாகவும், வகுப்பறைக் கதவுகளை பூட்டி விட்டு மாணவர்களை பிரம்பால் அடித்ததாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர்.
☀தகவல் அறிந்து அங்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்
*┈┉┅━❀☀ROYAL☀❀━┅┉┈*
*♨வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் - நடிகை வரலட்சுமி♨*
☀வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும்
☀என நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி, பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
☀தொடர்ந்து ரத்ததான முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, வருங்கால சந்ததியினருக்கு பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும் என்றும், வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் கூறினார்
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
*♨பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த புதிய வகை பேட்டரி கார்♨*
☀தூத்துக்குடி சாண்டி (( Chandy )) பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பேட்டரியால் இயங்கும் புதிய வகை கார் ஒன்றை மாணவர்கள் அறிமுகம் செய்தனர்.
☀இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆட்டோமொபைல் படித்துவரும் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து இந்தக் காரை வடிவமைத்துள்ளனர். இந்தக் காரிலுள்ள பேட்டரியை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 60 கீலோ மீட்டரில் இருந்து 80 கிலோ மீட்டர் வரை செல்லமுடியும் என அவர்கள் கூறினர். மேலும் காற்று மாசுபாடு இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இந்த காரினை பெண்கள் எளிதாக ஒட்டி செல்ல முடியும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
_*♨ராயல் எக்ஸ்பிரஸ்♨*_
*♨ மக்கள் தீர்ப்பை மதிக்காமல் அதிகாரத்தை பிடிக்க பாஜக முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்♨*
💫டெல்லி: மக்கள் தீர்ப்பை மதிக்காமல் அதிகாரத்தை பிடிக்க பாஜக முயற்சிப்பதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பதவியை பிடிப்பதற்காக பண பலத்தை பயன்படுத்தி சந்தர்ப்பவதாக கூட்டணியை பாஜக அமைத்துள்ளது என்று தெரிவித்தார். 2 எம் எல் ஏக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக மேகாயலாவில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது என்று கூறினார்.
*♨ ஆண்டாள் குறித்து கட்டுரை: முகாந்திரம் இருந்தால் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு♨*
💫சென்னை: ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதிய வைரமுத்து மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்து தொடர்பாக பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
*♨ மாநில உரிமையை அதிமுக அரசு விட்டுக்கொடுக்காது: அமைச்சர் ஜெயக்குமார்♨*
💫சென்னை: காவிரி விவகாரத்தில் மாநில உரிமையை அதிமுக அரசு விட்டுக்கொடுக்காது என்று முதல்வர் ஆலோசனைக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.
*♨ சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்த வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்..♨*
💫சென்னை: சென்னையில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்த வைத்துள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலை திறப்புக்குப் பின் கல்லூரி மாணவர்கள், மக்கள் மத்தியில் ரஜினி உரையாற்றுகிறார். அரசியல் அறிவிக்குப்பின் ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பத குறிப்பிடத்தக்கது.
*♨ஆர்.பி.இன்போசிஸ்டமஸ் இயக்குநரிடம் ரூ.515 கோடி முறைகேடு பற்றி விசாரனை♨*
💫கொல்கத்தா: ரூ.515 கோடி வங்கிக்கடன் மோசடி தொடர்பாக ஆர்.பி.இன்போசிஸ்டமஸ் இயக்குநரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ஆர்.பி.இன்போசிஸ்டமஸ் இயக்குநர் சிவாஜி பாஞ்சா என்பவரை விசாரித்தது மத்திய புலனாய்வு அமைப்பு பிரிவு. கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்.பி.இன்போசிஸ்டமஸ் 17 வங்கிகளில் ரூ.515 கோடி கடன் பெற்று மோசடி செய்தது குறிப்பிடதக்கது
*♨ வயதை தவறாக குறிப்பிட்ட புகாரில் 7 மல்யுத்த வீரர்களுக்கு ஓராண்டு தடை♨*
💫டெல்லி: 7 மல்யுத்த வீரர்களுக்கு ஓராண்டு தடையை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விதித்துள்ளது. வயதை தவறாக குறிப்பிட்ட புகாரின் பேரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
*♨ தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை♨*
💫சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
*♨ தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்♨*
💫டெல்லி: தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
*♨ வார்டு வரையறை குறித்து இறுதி முடிவு எடுக்க மார்ச் 8ல் கருத்து கேட்பு கூட்டம்♨*
💫சென்னை: சென்னை மாநகராட்சியின் வார்டுகள் வரையறை குறித்து இறுதி முடிவு எடுக்க மார்ச் 8ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. ஆணையத்தலைவர், உறுப்பினர்களால் நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
*♨ ரஜினியை காண ரசிகர்கள் திரண்டதால் கோயம்பேட்டில் போக்குவரத்து முடங்கியது♨*
💫சென்னை: ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கோயம்பேட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரஜினியை வரவேற்க ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கொடிகளுடன் திரண்டனர். திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து காரில் இருந்தவாறு ரஜினி கையசைத்தார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் எம்.ஜி.ஆர். சிலையை திறக்க ரஜினி செல்கிறார்.
*♨ மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் செம்மரக் கடத்தலை தடுக்க ஆலோசனை♨*
💫சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செம்மரம் வெட்ட செல்வதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு செல்லும் தெழிலாளருக்கு மாற்று வேலை வாய்ப்பு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. தமிழகர்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் இடைத்தரகர்களை கண்டறிந்து தடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
*♨ சென்னையிலிருந்து மலேஷியாவுக்கு கடத்த இருந்த 8 கிலோ போதை மாத்திரை பறிமுதல்♨*
💫சென்னை: சென்னையிலிருந்து மலேஷியாவுக்கு கடத்த இருந்த 8 கிலோ போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை மருத்து கடத்தல் கடத்தல் தடுப்பு போலீசார், முகமத் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து விமானத்தில் போதை மாத்திரை கடத்த முகமத் திட்டமிட்டுள்ளார்.
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
*♨ மானசரோவர், முக்திநாத் யாத்திரைக்கு செல்ல மானியம் பெற ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்கலாம்♨*
💫சென்னை: மானசரோவர், முக்திநாத் யாத்திரைக்கு செல்ல அரசு மானியம் பெற ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்களாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மானியத்திற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக www.tnhrce.org என்ற இணையதளத்தில் விவரங்கள் அறியலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
*♨ புதுச்சேரியில் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு♨*
💫புதுச்சேரி: காவிரி பிரச்சனை தொடர்பாக புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ளும்படி முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
*┈┉┅━❀
0 comments:
Post a Comment