Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News

4-3-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை*  🌴🇮🇳 ♈  ♈ 🇮🇳 🌴 *

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News


*_🌴🐯🇮🇳🕊🌴சத்ருஹன் சின்ஹாவுக்கு சாதனையாளர் விருது_*

லண்டன்:பிரிட்டன் பார்லிமென்டில் நடந்த விழாவில், பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருஹன் சின்ஹாவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள, 'ஏஷியன் வாய்ஸ் வீக்லி' என்ற பத்திரிகை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்களுக்கு, ஆண்டு தோறும், விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 
இதன், 12வது ஆண்டு விருது வழங்கும் விழா, சமீபத்தில், பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது.இந்த விழாவில், பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருஹன் சின்ஹாவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இதில், சத்ருஹன் சின்ஹா பேசுகையில், ''போட்டி நிறைந்த இந்த உலகில், நாம் சார்ந்த துறையில், சிறப்பானவர் என்ற பெயர் எடுப்பது அவசியம்; அது முடியவில்லை என்றால், மற்றவர்களை விட வித்தியாசமானவர் என்ற பெயரையாவது எடுக்க வேண்டும்,'' என்றார்.

*🌴🐯🇮🇳🕊🌴ஐபோன் 8க்கு  பதில் சோப்பு டப்பா*

உலக முழுவதும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் ஃபில்ப்கார்ட்டில் வாடிக்கையாளர்கள் ஒருவர் "ஐபோன் 8"  ஆர்டர் செய்துள்ளார். ஆனால் "ஐபோன் 8"-க்கு பதிலாக டம்மி மொபைலை டெலிவிரி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஃபிலிப்கார்ட் நிறுவனத்திடம்  புகார் அளித்துள்ளார்

 *🌴🐯🇮🇳🕊🌴எச்.ராஜா ஈசான்ய மூலை ட்வீட்*

திரிபுரா தேர்தல் வெற்றி குறித்து எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் " வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதெல்லாம் சரி வடமாநிலங்கள் பூஜை அறையாக மாறலாம்.. தமிழகம், கேரளா பூஜை அறையாக மாறுமா?

 *🌴🐯🇮🇳🕊🌴தேசிய கீதத்தை கிண்டல் செய்த மாணவர்..*

கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஸ்லாம் சலீம். இவர் கடந்த 27ஆம் தேதி வகுப்பில் தேசிய கீதத்தை கிண்டல் செய்யும் விதமாக பாடியும், ஆடியும் உள்ளார். மேலும், இதை நண்பர்கள் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த கல்லூரி முதல்வர் சலீமை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


 *🌴🐯🇮🇳🕊🌴அய்யயோ! ஆள் மாறிப்போச்சு..!*

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள, கென்யாட்டா தேசிய மருத்துவமனையில் மூளையில் கட்டி இருப்பதாகக் கூறி ஒருவர் சேர்ந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். குறித்த நாளில் ஆபரேஷன் செய்தபோது மூளையில் இருந்த கட்டியை காணவில்லை. பின்னர் தான் தவறான நபருக்கு ஆபரேஷ்ன் செய்தது தெரிய வந்தது. நல்லவேளை அந்த நபர் பிழைத்துவிட்டார்.

*🌴🐯🇮🇳🕊🌴சூப்பர்..அட்டகாசமான வசதி!!*

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்வீட்களை ஷேர் செய்யவும், அதைப் பதிவு செய்யும் புக்மார்க் வசதிவை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. டுவிட்டர் ஆப்பில் ஷேர் ஐகானை கிளிக் செய்து அதை மற்றவர்களுக்கு எளிமையாகப் பகிரவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும். புக்மார்க் செய்யப்பட்ட ட்வீட்களை ஹோம் பேஜ்ல் உள்ள புக்மார்க் ஆப்சனில் பார்க்கமுடியும்.

*🌴🐯🇮🇳🕊🌴மும்பை அணியில் ரஹானே!*

மும்பை லீக் என்ற பெயரில் டி 20 தொடர் மார்ச் 11 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. மும்பை வடக்கு அணி, இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானேவை ரூ.7 லட்சத்துக்கும் சூர்யகுமார் யாதவை ரூ.7 லட்சத்திற்கும், ரோகித் சர்மாவை ரூ.6 லட்சத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது. இருப்பினும், இலங்கை முத்தரப்பு டி20 தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பதால், அவர் மும்பை லீக்கில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

*🌴🐯🇮🇳🕊🌴"நீதான் என் இளவரசி" ஒரு அப்பாவின் நினைவு!*

சின்ன தல ரெய்னா தனது மகள் கிரேசியாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். புகைப்படத்தின் கீழ் "நீதான் என் இளவரசி. என் வாழ்க்கை உன்னைச் சுற்றியே இருக்கிறது. என் வாழ்க்கை தேவதை கதை போல் இருப்பதாக நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

*🌴🐯🇮🇳🕊🌴போக்குவரத்துக் கழகம் மக்களுக்கான சேவை !*

கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், கல்வித்துறை மந்திரி செங்கோட்டையன் பேசுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கிய போதும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழகம் மக்களுக்கான சேவை நோக்குடன் செயல்படுகிறது. லாப நோக்குடன் அல்ல என்றார்.

‬: *🌴🐯🇮🇳🕊🌴600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!*

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2-ஆம் நிலையின் முதல் பிரிவில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பதிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது

 *🌴🐯🇮🇳🕊🌴நீதி வேண்டி உண்ணாவிரதம்..!*

விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூரில் கிராம மக்கள் 2 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுவன் சமயனை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உயிர் போராட்டத்தில் இருக்கும் ஆராயி-மாணவி தனம் ஆகியோருக்கு நீதிவிசாரனை வேண்டும் எனவும் அனைத்து சமூக மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர

 *🌴🐯🇮🇳🕊🌴ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்..!*

காவிரி டெல்டா பகுதியிலிருந்து ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும். டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  மேலும், ஒரு கிணறுக்கு கூட ஓஎன்ஜிசி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

*🌴🐯🇮🇳🕊🌴சசிகலா சலுகை- முன்னாள் டிஜிபி மீது  வழக்குப்பதிவு !*

ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்ட புகாரில் சிறைத்துறை முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் டிஜிபி சத்யநாராயணன், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

*🌴🐯🇮🇳🕊🌴அகழாய்வு பணிகளை தொடர சிலர் நிலம் தர மறுப்பு!*

கீழடியில் அகழாய்வு பணிகளை தொடர சிலர் நிலம் தருவதில் தடையாக உள்ளனர் என்று மந்திரி மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், புரிதலின்றி இருக்கும்போது மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

 *🌴🐯🇮🇳🕊🌴தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி - முதல்வர்!*

பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கும் விதமாக கர்நாடக அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பேசுகையில், "பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் இனி ஒரு பைசா கூடக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை" என்றார்.

 *🌴🐯🇮🇳🕊🌴கருப்பி... அடி கருப்பி...!*

ஒரு அழுகையின் குரல் ஒரு கவிதையின் குரல் கேட்கிறது. மனதை கேள்வி கேட்கும் பாடலாக உள்ளது "கருப்பி அடி கருப்பி" என்னும் பாடல். "பரியேறும்   பெருமாள்" படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. மனித வலிமைகளையும், பலவீனத்தையும் எடுத்துரைக்கிறது. "அழிஞ்சது நீயா அழுதது நானா" மனசே தொலைந்து போன இடமாக உள்ளது. மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 *🌴🐯🇮🇳🕊🌴உள்ளே ஒன்று, வெளியே ஒன்று பேசும் ஸ்டாலின்*

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளே ஒன்று பேசிவிட்டு, வெளியே ஒன்று பேசுவது நாகரிகமல்ல என்று மந்திரி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். முதலில் நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்கரியை சந்தியுங்கள் என பிரதமர் அலுவலகம் கூறியது. மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தின் இரு அவையில் அதிமுக அழுத்தம் கொடுக்கும் என்றார்.

*🌴🐯🇮🇳🕊🌴சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டைக்கு என்ன காரணம்?*

கவுட்டா: சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நீடிப்பதற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தான் காரணம் என்பது அனைத்து தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் நடைெபறும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். சிரியா உள்நாட்டு சண்டைக்கு என்ன காரணம்? இப்படி குண்டு மழை பொழிவது சிரியாவில் இன்று நேற்று அல்ல 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. ஆசாத்துக்கு சிரியா பிரிவினர் அதிகம் உள்ள நாடுகளான ஈரான், ஈராக் மற்றும் இஸ்புல்லா இயக்கத்தினர் ஆதரவாக இருக்கின்றனர். மேலும் அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் களம் இறங்கியது. மறுபுறம் கிளர்ச்சியாளர்களுக்கு சன்னி பிரிவு மக்கள் அதிகம் உள்ள துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆதரவு தருகிறது. 

எப்போதும் வலைகுடா நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் அமெரிக்காவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக பேர்களத்தில் குதித்தது. இவர்கள் அனைவரையும் ஓழித்துக்கட்டி இஸ்லாமிய அரசை நிறுவும் முயற்சியில் ஐ.எஸ் போர்க்கொடி தூக்க சிரியா உள்நாட்டு போர் கிட்டத்தட்ட உலக நாடுகளின் சண்டையாகிவிட்டது. சிரியாவின் எண்ணெய் வளத்தைக் கைவசம் வைத்துக்கொள்ள வல்லரசு நாடுகளான ரஷ்யாவும், அதற்கு போட்டியாக அமெரிக்காவும் போரில் தலையிட்டதே சிரியாவில் ஓயாமல் சண்டை நடைபெற முக்கிய காரணமாகும். இதனால் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் மடிந்துள்ளனர். உடைமகைளை இழந்து உயிரைக் காப்பாற்ற எண்ணி சுமார் 1 கோடி பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றபோது 2015ஆம் ஆண்டு துருக்கி கடற்கரையில் சிறுவன் ஹைரான் இறந்து கிடந்த காட்சி தான் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது.  

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More