Hi manisat
#ref-menu

Wednesday, March 7, 2018

இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil

7-3-2018-wednesday-புதன்கிழமை
இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil


♈🇮🇳 சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கும் காஞ்சிபுரம் ,சேலம் , விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - விஸ்வரூபம் - சிறந்த ஆட்சியர்களாக பொன்னையா(காஞ்சிபுரம்),ரோகிணி(சேலம்),சுப்பிரமணியன்(விழுப்புரம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த மாநகராட்சிக்கான விருதை சென்னை பெருமாநகராட்சி பெறுகிறது. சிறந்த காவல் ஆணையராக சென்னை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

♈🇮🇳 சேலத்தில் பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்லமுடியாமல் கதறி அழுத மாணவிக்கு வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் திரு பால்ராஜ் அவரைப் பள்ளியில் நேரத்துக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் .விஸ்வரூபம்

♈🇮🇳 அர்.கே.நகர் பொதுமக்கள்  வேண்டுகோள்*        சென்னை தண்டையார்பேட்டை கோட்டம் உட்ப்பட்ட அர்.கே.நகர் தொகுதி 38வது,41வது,47வது வட்டத்தில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட (மாவா)(குட்கா)(அன்ஸ்) போண்றவைகள் மறைழுகமாகவும் பகிரங்கமாகவும் விற்பனை செய்துவருகின்றனர்.......இதனால் படிக்கும் மாணவர்கள் வாங்கிபோடுகின்றனர்.... இதனால் கேன்சர் போன்ற கொடிய நோயால்   மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.இதை அகற்றகோரி பொதுமக்களின் கருத்து

♈🇮🇳 கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி அவரது அலுவலகத்திற்குள்ளேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது-தமிழ்நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நேர்மையற்ற நிர்வாகங்களினால் நீதியினால் அரங்கேறலாம் .நல்லவர்கள் அரசுகளை விரைவில் வழிநடத்த நல்ல மாற்றங்கள் வேண்டும்

♈🇮🇳 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

♈🇮🇳   கீதாஞ்சலி குரூப் நிறுவனங்களின் துணை தலைவர் விபுல் சைத்தாலியாவை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12,600கோடி முறைகேடுகளில் மூளையாக இருந்தவர் இவர்தான் என்று சிபிஐ தெரிவிக்கிறது

♈🇮🇳    குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு பெண்களை அனுப்புகிறார் என்று ஷமியின் மனைவி அடுத்த புகார் அளித்து இருக்கிறார். இந்த விஷயம் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்

♈🇮🇳 சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 பேர் பூணூல் அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திராவிட விடுதலை கட்சியினர் நால்வர் போலீசில் சரணடைந்துள்ளனர்

♈🇮🇳 Central Railway Recruitment 2018.Central Railway has released a notification for the recruitment of Jan Sadharan Ticket Booking Sewak(JTBS) vacancies.Interested and eligible candidates may apply for the posts. Last Date for Submission of Application is on April 02nd, 2018-Total No.of Posts:500-Name of the Post: Jan Sadharan Ticket Booking Sewak(JTBS)-Qualification:Candidates Should have Completed the 10th, 12th in reconized university.Job Location:Mumbai-Experience:Fresher-Application Fee Payment:Rs.500/-Address For The Job:Central Railway, Mumbai, Maharashtra-Selection Procedure:Selection Will be Based either Written Exam/Interview

♈🇮🇳 தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை .லெனின், பெரியார் போன்ற தலைவர்கள் மனித குலத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள்.அவர்களை இழிவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.பாஜக வைச் சேர்ந்த அச்.ராஜா மேற்கண்ட தலைவர்களை இழிவுபடுத்தியது மூலம் மக்களின் மன உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தி உள்ளார்.கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் அதை மழுப்பும் வகையில் அவர் கூறிய பதில் ஏற்கத்தக்கதல்ல.தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் பேசிவரும் அச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.அன்புள்ள-பழ.நெடுமாறன்

♈🇮🇳 பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடக் கட்டிடத்தை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் *கரைப்புதூர் A.நடராஜன்MLA* அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பெறியாளர், மற்றும் மார்கொட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், Ex ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், பாபாஸ் பழனிச்சாமி, ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி,  ஆறுக்குட்டி, பணிக்கம்பட்டி பழனிச்சாமி, கனேஷ், மற்றும் பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்

♈🇮🇳 சென்னை சேலையூா் அடுத்த மப்பேடு இடையில் பாரத் லா இன்ஸ்டியுட் கல்லூாியில் பயின்று சட்டபிாிவு மாணவா்கள் 80போ் கல்லூாி செய்த ஏற்பாட்டின்படி இன்று விமானம் மூலம் டெல்லி செல்கின்றா். டெல்லியில் சட்டத்துறைசம்பந்தப்பட்ட பாராளுமன்றம் ,சட்டகல்லூாி,திகாா்சிறை ஆகியவற்றை சென்று ஆய்வுசெய்யவுள்ளனா் .இன்று எனதருமை அண்ணன் பனங்காட்டுபாக்கம் அருண்குமாா் அவா்களை வழியனுப்ப இன்று காலை நான் சென்று வாழ்த்து தொிவித்து அனுப்பிவைத்துள்ளேன்-மூர்த்தி 

♈🇮🇳 E-3 காவல் நிலையத்தில் உதவி ஆய்வளராக பணிபுரியும் திருமதி ரதி அவர்கள் இன்று(06.03.2018) மாலை7 மணியளவில் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பெரவள்ளுர் கிராமத்தில் திருமதி சந்திரா அவர்கள் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து தள்ளி உள்ளார் இதனால் அவர்களுக்கு இதயவலி ஏற்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை மக்களை தாக்குகின்றது

♈🇮🇳 கன்னியாகுமரி - கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியில் ஒப்பந்ததாரர் பிராண்சீஸ்(48)  வெட்டி கொலை.தனது மகளை கிண்டல் செய்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அருள் என்பவர் மீது கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அருள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் பிரான்சீஸ் வெட்டி கொலை

♈🇮🇳 தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳 திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் காவலர்கள் குடியிருப்பு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

♈🇮🇳 கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2ஏ தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

♈🇮🇳 கேரள சட்டப்பேரவையில் வெடிகுண்டுடன் காங்கிரஸ் எம்எல்ஏ வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

♈🇮🇳 தமிழகத்தில் உள்ள ஏர்செல் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதிலளித்துள்ளது. ஏர்செல் ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் இடையே பிரச்சனை ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை மார்ச் 21க்கு ஒத்திவைத்தது

♈🇮🇳 சிலை உடைப்பு சம்பவங்களை தடுக்க மத்திய அரசு மீண்டும் அறிவுரை
♈🇮🇳 காவிரி வாரியம்: மத்திய அரசு ஆலோசனை

♈🇮🇳 பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் கைது

♈🇮🇳   சென்னையில் தற்கொலை செய்த எஸ் ஐ உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

♈🇮🇳    நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை 

♈🇮🇳   டில்லி அணிக்கு கவுதம் காம்பீர் கேப்டன்.

 வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்வு - பிசிசிஐ அறிவிப்பு

* 2-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 5 கோடி சம்பளம்

* 3-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு 
ரூ. 3 கோடி சம்பளம். குறைந்தபட்ச சம்பளம் ஒரு கோடி ரூபாய்

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 ம் தேதி தெலுங்கானா அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் சிறப்பு  விடுமுறை அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More