Hi manisat
#ref-menu

Tuesday, March 6, 2018

இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil


 இன்றைய செய்திகள் 06/03/2018 Today News Tamil


________________________________


🔵⚪ *கார்த்தி சிதம்பரத்தை பார்க்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் வருகை*



🔵⚪ *Hyderabad: B Aruna Reddy, first Indian to win an individual medal (bronze) at #GymnasticsWorldCup in Australia's Melbourne, given employment in South Central Railway in Group C category #Telangana*

🔵⚪ *Fire breaks out at a building in Kalachowki area, Dattaram Lad Marg in Mumbai.  #Maharashtra*

*Eight fire tenders and six water tankers reached the spot. Fire fighting operation underway*


🔵⚪ *Justin | ஏர்செல் நிறுவன சேவையை வேறு நிறுவனத்திற்கு மாற்றித்தர வலியுறுத்தி திருச்சி தில்லைநகரில் உள்ள ஏர்செல் நிறுவன அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மறியல்*



🔵⚪ *சென்னை திருமங்கலத்தில் நகைக் கடையின் சுவரில் துளையிட்டு சுமார் 10 கிலோ தங்கம் கொள்ளை.*



🔵⚪ *"தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் பதில்*



🔵⚪ *#JUSTIN | பெரியார் சிலையை உடைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் கனவிலும் நடக்காது - கு.ராமகிருஷ்ணன்



🔵⚪ *விருதுநகர்: மேல் தொட்டியபட்டி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்ற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை 1500க்கும் மேற்பட்டோர் முற்றுகை*


🔵⚪ *விழுப்புரம், அரசு மருத்துவக் கல்லூரியை பிரதமரின் சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வின் குமார் சௌபே நாடாளுமன்றத்தில் தகவல்*


🔵⚪ *எதிர்க்கட்சிகள் அமளியால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.*



🔵⚪ *கோயில்கள் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும்: அர்ஜுன் சம்பத்*

*ரஷ்ய தலைநகரத்திலேயே லெனின் சிலையை அகற்றினர்*

*சிலையை வைத்து அரசியல் செய்தது திராவிட இயக்கங்கள்தான்*

*பிள்ளையார் சிலையை உடைத்தவர் சிலையை நாங்கள் பொது இடத்தில் வைக்க அனுமதிக்க மாட்டோம்: அர்ஜுன் சம்பத்*


🔵⚪ *எச்.ராஜா கருத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பகிரங்க ஆதரவு*

*எச்.ராஜா கருத்து வன்முறையை தூண்டாது: டிவி பேட்டியில் அர்ஜுன் சம்பத்*

*கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என பெரியார் கூறியதை கோயில் முன்பாக வைக்கிறார்கள்*



🔵⚪ *மார்ச் 10,11ஆம் தேதிகளில் அவிநாசி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் கமல்ஹாசன்*

🔵⚪ *#JUSTIN புதிய சட்டப்பேரவை செயலாளரான சீனிவாசன் நியமனத்திற்கு எதிராக கூடுதல் செயலாளர் வசந்தி மலர், இணை செயலாளர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்*


🔵⚪ *மெக்சிகோ : சர்வதேச துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மானு 2-வது தங்கப் பதக்கத்தை வென்றார்..*



🔵⚪ *காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரத்தில் அமைக்கும் என ஆளுநர் உறுதி அளித்துள்ளார் -  பி.ஆர்.பாண்டியன்*


________________________________
இன்றைய நிகழ்வு... 
நாளைய நினைவு...


________________________________


🔵⚪ *கோப்புகள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல*

*கோப்புகளின் பின்னணியில் தனிமனித வாழ்க்கை பிரச்னைகள், சமுதாய திட்டங்கள் உள்ளன*

*கோப்புகள் தேங்காத வகையில் விரைவாகவும் உடனடியாகவும் தீர்வு காண வேண்டும்*

*- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்*



🔵⚪ *#JUSTIN எதிர்க்கட்சிகளின் அமளியால் 2ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது*

🔵⚪ *திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் மீது தாக்குதல்*



🔵⚪ *போராட்டத்தில் ஈடுபடும் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனடியாக தன்னை சந்திக்குமாறு, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அழைப்பு.*


🔵⚪ *எக்காலத்திலும் தமிழகத்தில் பா.ஜ.க-வால் காலூன்ற முடியாது : டிடிவி தினகரன் பேட்டி*

*திருவண்ணாமலை: எந்த காலக்கட்டத்திலும் பாரதிய ஜனதா தமிழகத்தில் காலூன்ற முடியாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.*



🔵⚪ *டெல்லி : பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது*



🔵⚪ *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் திமுக, அதிமுக எம்பிக்கள் ஒன்றாக போராட்டம்; நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் போராட்டத்தில் பாஜக, கம்யூனிஸ்ட் எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்*


🔵⚪ *மாற்றுத்திறனாளிகள் சென்னை தேனாம்பேட்டையில் சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு..*



🔵⚪ *ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ரூ.742 கோடி சொத்து முடக்கத்திற்கு எதிராக சன் டிவி குழுமம் தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்*



🔵⚪ *மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைத்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணி கேள்விக்குறியாக தான் மாறும்  : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்*



🔵⚪ *ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.*

*ரஜினி அரசியலில் வெற்றிடத்தை நிரப்புவேன் என்று அவருடைய நிலைப்பாட்டை கூறியுள்ளார்; அதை மக்கள் முடிவு செய்வார்கள் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்*

________________________________
இன்றைய நிகழ்வு... 
நாளைய நினைவு...


________________________________


🔵⚪ *#சென்னையில*் 
*அப்பல்லோவில் நர்ஸ் ஆக வேலை செய்யும் ஜீவிதா தற்கொலை*

*ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்*

*20 லட்சம் கேட்டு கணவர் கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு*

*மகளின் முதல் பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சோகம்*

*கணவருடன் வேறொரு பெண்ணிற்கு தொடர்பு இருந்ததாக தகவல்*



🔵⚪ *சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் தாக்குதலை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்*

*திருமாவளவன், சீமான், வேல்முருகன், ஜவாஹிருல்லா, திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு*

🔵⚪ *எதிர்க்கட்சிகள் அமளியால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு*


🔵⚪ *திட்டங்கள் பயனாளிகளை சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் – முதல்வர்*

*பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ₨ 2,247 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்*



🔵⚪ *டப்பிங் கலைஞர்களுக்கான தேர்தலில் நடிகர் ராதாரவி வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்*



🔵⚪ *திமுக, அதிமுக எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்*

*#டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக மற்றும் திமுக எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்*

*காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்*



🔵⚪ *ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் : ரூ.742 கோடி சொத்து முடக்கத்திற்கு எதிராக சன்டிவி குழுமம் தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைப்பு : உச்சநீதிமன்றம்*


🔵⚪ *திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை குறிப்பிட்டு ராஜா சர்ச்சை கருத்து*

*லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு - எச்.ராஜா*

*கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு - எச். ராஜா*


________________________________
இன்றைய நிகழ்வு... 
நாளைய நினைவு...

*🔵⚪பெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கைகள் துண்டு துண்டாக்கப்படும் - வைகோ ஆவேசம்*

ஹெச்.ராஜாவின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி

பெரியார் சிலையை பாதுகாக்க எனது தலைமையில் வருகிறோம் – வைகோ

ஈ, கொசுவை போன்றவர்கள் எல்லாம் பெரியாரை விமர்சிக்கின்றனர் – வைகோ

இரவில் களவாணியை போல் சென்று பெரியார் சிலையை உடைப்பது வீரமல்ல – வைகோ

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More