Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 12/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  12/03/18 Today Tamil ManisatNews


*நேபாளத்தின் காத்மாண்ட் விமான நிலையத்தில் வங்கதேச விமானம் தரையிறங்கும் போது விபத்து*

*தரையிறங்கும் போது விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விமானம் புகுந்தது*

*விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாக தகவல்; அதில் 17 க்கும் மேற்பட்டோர் காயம் *

கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது- நீதிபதி

தந்தை முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தாலும் எவ்வித சலுகை கிடையாது

மற்ற கைதியை போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும்

தனி அறை ஒதுக்கக் கூடாது- நீதிபதி திட்டவட்டம்.

☀*குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.*

* சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் உயிரிழப்பு.*

🔵⚪குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை


🔵⚪காட்டுத் தீயில் உயிரிழந்த 7 பேரின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்று, சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது - தேனியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்



🔵⚪ப.சிதம்பரம் விரைவில் கைதாவார் - சுப்பிரமணிய சாமி 

🔵⚪மாணவர்களின் கல்வி சுற்றுலாவுக்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் இந்தாண்டு முதல் செயல்படுத்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்.

🔵⚪விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் - சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி.


🔵⚪நேபாளம் : விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 8 பேரின் உடல்கள் மீட்பு. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்.

🔵⚪சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும்- செங்கோட்டையன் 

பிளஸ்டூ படித்தவுடன் வேலைவாய்ப்பு என்ற நிலைக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்

தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு செலவு செய்கிறது - செங்கோட்டையன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More