Hi manisat
#ref-menu

Friday, March 9, 2018

இன்றைய செய்திகள் 09/03/2018 Today News Tamil

இன்றைய செய்திகள் 09/03/2018 Today News Tamil



*🔵⚪குக்கர் சின்னம், கட்சி பெயர் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்றுதீர்ப்பு*

*காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர் நீதிமன்றம்*

*🔵⚪திருச்சியில் காவல் ஆய்வாளர் காமராஜால் உயிரிழந்த உஷா உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி.*


*கே.கே நகரில் உஷா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது உறவினர்களுக்கும்  தமிழிசை ஆறுதல்.*

*🔵⚪ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு*

*கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 1460 கனஅடியில் இருந்து 815 ஆகா சரிவு*

*சென்னை குடிநீர் தேவைக்காக திறக்கும் நீரை படிப்படியாக குறைக்க ஆந்திர அரசு திட்டம்*

 *🔵⚪ கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று, முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.*

*திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன.*

*ஒவ்வொன்றும், 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை.*

*இரண்டாவது உலையில், பிப்., 19ல், நீராவி செல்லும் வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.*

*இன்னமும் சரி செய்யப்படவில்லை. நேற்று காலை, 9:30 மணிக்கு, முதலாவது அணு உலையிலும், டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.*

*முதலாவது அணு உலையின் பழுது இன்னமும் ஓரிரு நாளில் சரிசெய்யப்படும் எனவும், இரண்டாவது அணு உலையில், இனி எரிபொருள் நிரப்பி, மின் உற்பத்தி துவங்க ஒரு மாதம் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.*


*🔵⚪ ‘கடந்த, 11 மாதங்­களில், நாட்­டின், நேரடி வரி­கள் வாயி­லாக, 7.44 லட்­சம் கோடி ரூபாய் வசூ­லாகி உள்­ளது’ : மத்­திய நிதி­ய­மைச்­ச­கம்*

*குறித்து, நிதி­ அமைச்­ச­கம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை:*

*நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், ஏப்., – பிப்., வரை­யி­லான, 11 மாதங்­களில், நிகர நேரடி வரி வரு­வாய், 7.44 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.*

*இது, 2016- – 17ம் நிதி­யாண்­டின், இதே காலத்­தில் வசூ­லிக்­கப்­பட்­டதை விட, 19.5 சத­வீ­தம் அதி­கம்.*

*வரும், 2018-- – 19ம் நிதி­யாண்­டிற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட, 10.05 லட்­சம் கோடி ரூபா­யில், 74.3 சத­வீ­த­மா­கும்.*


*மதிப்­பீட்டு காலத்­தில், மொத்த நேரடி வரி வரு­வாய், 14.5 சத­வீ­தம் உயர்ந்து, 8.83 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.*

*கூடு­த­லாக வரி செலுத்­தி­யோ­ருக்கு, 1.39 லட்­சம் கோடி ரூபாய் திரும்ப அளிக்­கப்­பட்டு உள்­ளது.*

*கடந்த, 11 மாதங்­களில், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் வாயி­லான, நிகர வரி வரு­வாய், 19.7 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.*


*இதே காலத்­தில், தனி­ந­பர் வரு­மான வரி வசூல், 18.6 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.*

 *💥நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!* 

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மார்ச் 12 வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

*💥 தமிழ் விரைவு செய்திகள்*
[
💥இந்தியா வர முடியாது, நிறைய வேலை இருக்கு-நீரவ் மோடியின் கூட்டாளி*

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி மோசடி செய்து விட்டு வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இதற்கெல்லாம் உடந்தையாக இருந்த அவரது  உறவினரான மெஹுல் சோக்சிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. தற்போது லண்டனில் இருக்கும் அவருக்கு இந்தியா வர சொல்லி சிபிஐ மெயில் அனுப்பியுள்ளது. ஆனால், என்னால் வரமுடியாது, லண்டனில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று பதில் மெயில் அனுப்பியுள்ளார்

*💥அடுத்த படத்திற்கு தயாராகும் ராஜமவுலி!*

பாகுபலியை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலையை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி தொடங்கிவிட்டதாக தெரிகிறது. மேலும் இது தொடர்பாக போட்டோ சூட்டை அமெரிக்காவில் ராஜமவுலி நடத்தியுள்ளார். அவரது அடுத்தப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது



: *மக்கள் நீதி மய்யம் விலை போகாது- கமல் அறிவிப்பு!*

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த மாநாட்டில் பேசிய கமல்ஹாசன், "கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது, வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யமும் விலை போகாது," என்று கூறினார். மேலும், மகளிர் தின விழாவில் மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம் கட்சிக்காரர்கள் போஸ்டர்கள்,பேனர்கள்,பதாகைகளைத் தவிர்க்கவும் என்று அவர் ட்வீட் செய்திருந்தார



‬: *ரஜினி, கமலால் அந்த இடத்தை நிரப்ப முடியாது- கவுதமி பேட்டி!*

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை தான், ஆனால், அதை, ரஜினியும், கமலும் நிரப்ப முடியாது, அது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த வெற்றிடத்தை யாராலும் ஒரே நாளில் நிரப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 *ரஜினி, கமலால் அந்த இடத்தை நிரப்ப முடியாது- கவுதமி பேட்டி!*

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை தான், ஆனால், அதை, ரஜினியும், கமலும் நிரப்ப முடியாது, அது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த வெற்றிடத்தை யாராலும் ஒரே நாளில் நிரப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

: *முத்தரப்பு டி-20: வங்கதேசத்தை துவம்சம் செய்து இந்தியா அபார வெற்றி!*
கொழும்பில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக இந்திய அணி வீரர்கள் லிஷிகார் தவான் 55 ரன்களும், சுரேஷ் ரெய்னா 28 ரன்களும் எடுத்தனர்.

*®கோடம்பாக்கத்தில் இருந்து வருபவர்களை மக்கள் சீண்ட மாட்டார்கள் : ராமதாஸ்®*

*கோடம்பாக்கத்தில் இருந்து புதிதுபுதிதாக வருவோரை மக்கள் சீண்ட மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பேசிய அவர், மத்திய அரசு குறித்த காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் என்று தெரிவித்தார்*

*🌍💫🌍வேளச்சேரி பகுதியில் போதைப் பொருள் விற்ற 3 பேர் கைது*

*வேளச்சேரியில் போதை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி நேருநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின் போது அங்கே சந்தேகத்திற்கு இடமான மூன்று இளைஞர்கள் நின்றிருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.*

*விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோனுக்குமார், அசோக்சா, சவரப்குமார் என்பதும், அவர்கள் மூவரும் வேளச்சேரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதும் தெரிவந்தது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்*

*®புளியந்தோப்பு காவல்நிலைய சரகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்®*

*மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட காவல்நிலையங்களில் உள்ள பெண் காவலர்களுக்கு பிரபல சமையல் கலைநிபுணர் செஃப். தாமு சிறப்பு சமையல் கலை பயிற்சி மற்றும் அதன் செய்முறைகளை விளக்கி கூறினார். துணை ஆணையர் ஷ்யமலாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  மகளிர் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.*

*பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாமு, காவல்நிலையங்களில் பணிபுரியும் பெண்கள் காவல்பணி மட்டுமின்றி குடும்பத்தையும் கவனிக்க வேண்டி இருப்பதால் சத்தான உணவினை உண்ண வேண்டும் என்றார்*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More