இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil
07/03/18 !
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நிதித்துறை, உள்துறை, சுற்றுச்சூழல்துறை, வேளாண்துறை அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை.
தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் பரவும் சிலை உடைப்பு வன்முறை அம்பேத்கர் சிலையை உடைத்து வன்முறையாளர்கள் வெறியாட்டம்.
சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் தொடர்பாக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம் 2-வது முறையாக சுற்றறிக்கை.
அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி-க்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் - உள்துறை அமைச்சகம்.
தமிழக சட்டப்பேரவையில் வரும் 15ஆம் தேதி காலை 10:30மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது : துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓபிஎஸ் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 2 ஆம் நாளாக அதிமுக எம்பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் : நாடாளுமன்ற வளாகத்தில் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்.
பாஜகவை சேர்ந்தவர்கள் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமித்ஷா.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற ஹெச். ராஜாவின் பேஸ்புக் பதிவு தொடர்பாகவும் பிரதமர் அதிருப்தி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நமது கவனம் எச்.ராஜாவால் திசை திருப்பப்படுகிறது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.
தமிழகத்தில் உள்ள தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு தர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தலைவர்கள் சிலை உடைக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
பெரியார் குறித்து முகநூலில் எனது அனுமதியின்றி பதிவிட்டுள்ளனர்.என் முகநூலை நிர்வகிப்பவர் எனது அனுமதியின்றி பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார் - ஹெச்.ராஜா.
உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தற்கொலை செய்த சம்பவம் அனைத்தும் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது - தமிழக காவல்துறை.
மேஜை மீது வைத்திருந்த வெள்ளைத்தாளில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எவ்வித காரணமும் இல்லை என உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் எழுதி வைத்துள்ளார் - தமிழக காவல்துறை.
திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் பாஜகவில் இருந்து நீக்கம் -தமிழிசை சவுந்தரராஜன்.
நீட் தேர்வில் ஆதார் கட்டாயம் என்ற உத்தரவில் மாற்றம் கொண்டு வர சிபிஎஸ்இ-க்கு எந்த அறிவுறுத்தலையும் தர முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
பெரியார் சிலையை சேதப்படுத்த தூண்டிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்.தமிழகத்தில் பதற்றத்தை அதிகரிப்பதற்காக செய்யப்படும் விஷமத்தனமான செயல் கண்டிக்கத்தக்கது : பாமக நிறுவனர் ராமதாஸ்.
பெரியார் சிலையை இடிப்பதில் எந்த தமிழரும் ஈடுபடமாட்டார்கள் - கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கார்த்திக் சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு.
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனை கைது செய்வதை தடை விதிக்க முடியாது முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் கருத்து.
பெரியார் சிலை குறித்த எச்.ராஜாவின் சர்ச்சை கருத்தால் சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் 15 பேரின் பூணூல் அறுப்பு : இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பூணூலை அறுத்து "பெரியார் வாழ்க” என முழக்கமிட்டதாக போலீசார் தகவல்.
அமைதியை குலைக்கும் கருத்துக்களை ஹெச்.ராஜா தெரிவிக்கக் கூடாது
பெரியார் குறித்த கருத்தை ஹெச்.ராஜா வாபஸ் பெற்றுவிட்டதால் பிரச்சினை இல்லை - ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.
சிறந்த ஆட்சியர்களுக்கான விருது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன், விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியனுக்கு அறிவிப்பு.
மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2% அதிகரிக்கப்பட உள்ளது மாலை மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன்,ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை.
50 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கினால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசு உத்தரவு.
2011-ல் காதலர்களை கொலை செய்த வழக்கில், வெள்ளைத்துரை என்பவருக்கு தூக்கு தண்டனை மற்றும் இரண்டு ஆயுள் தண்டனை - தேனி குற்றவியல் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு.
மாயமான பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மாவை ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பள்ளியில் இருந்து கரிஷ்மாவை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
உலகின் நம்பர் 1, பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் "பில்கேட்ஸை" பின்னுக்கு தள்ளி சாதனை.
குரூப்2ஏ எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 1953 பணிகளுக்கு 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தரவரிசைப்பட்டியலும் வெளியீடு.
சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஜெயா பச்சன் போட்டியிடுவார் என அறிவிப்பு.
பெங்களூருவில் லோக் அயுக்தா நீதிபதி பிவி.ஷெட்டி தனது அலுவலகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் பெண்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.இடர்களை வெற்றிப்படிகளாக்கி இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உயர்ந்து விளங்க வேண்டும் - மகளிர் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் பழனிசாமி பெண்களுக்கு வாழ்த்து.
இலங்கையில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதிப்பு.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி தெலுங்கானா அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது.
*ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செயலாளர்களாக நியமனம்*
தகவல் தொழில்நுட்பதுறை செயலாளராக சந்திரமோகன் ஐஏஎஸ் நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக நந்த குமார் ஐஏஎஸ் நியமனம்
அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு ராமச்சந்திரன் ஐஏஎஸ் மாற்றம்
டெல்லியில் இருந்து இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை மார்ச் 22-ல் தொடக்கம்
*மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி ஒரு கி.மீ தூரத்தில் 469 கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளன மதுரை மாநகராட்சி. கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது - மதுரை மாநகராட்சி*
0 comments:
Post a Comment