இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil
*9am-7-3-2018-wednesday-புதன்கிழமை*
♈🇮🇳 பாஜ. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தனிப்படை அமைப்பு-கோவை ----------நிபந்தனையுடன் சரணடைய தாவூத் தயார்: வழக்கறிஞர் தகவல்-------------மார்ச்-07:பெட்ரோல் விலை ரூ. 75.07, டீசல் விலை ரூ.66.39---------பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை மாற்றக்கூடாது என்று குழு அமைத்து அனைத்து கட்சியினரும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்
♈🇮🇳 வீரத்தின் விளை நிலம் என்று தமிழகம் மார்தட்டிக் கொள்ளாது .அந்த பெருமையை இழந்து பல வருடங்களாகிவிட்டது .மன உளைச்சல் மன உளைச்சல் ன்னு சொலுறாங்க –யாரால மன உளைச்சல் ஏற்பட்டு ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறார்.அதை மட்டும் சொல்லமாட்டாங்க .அதுதான் காவல்துறை பவர். இனி ஒரு நல்வர்களை பார்க்க முடியாது .இனி தமிழ்நாடு சட்டம் ஒழுங்க்கில் சிறந்து விளங்குது என்று சொல்ல வாய்ப்பே இல்லை -தவறுகளை தட்டிகேட்காதே –கூட்டத்தோடு கூட்டமாய் வாழ்க கோஷம் போட்டு கொள்ளையடித்து வாழ கற்றுக் கொள் .இல்லையென்றால் நாளை என்ன இப்போதே உயிரற்ற சடலமாய் அநாதை பிணமாகத்தான் மாண்டு போவாய் .உன்க்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்த உன் குடும்பம் கூட பேச முடியாமல் ஊமையாய் மிரட்டலுக்கு பயந்து வாழும் –தமிழகமே வீரம் நிறைந்த உன் நாட்டில் நல்லவர்கள் கோழைகளாய் சித்தரிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறார் .ரவுடிகள் யாரும் என்கவுண்டருக்கு பயந்து ஓடவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது !!!!??????.விஸ்வரூபம்
♈🇮🇳 இந்தியாவின் வேலைவாய்ப்புயின்மை விகிதம் கடந்த 15 மாதங்களில் பிப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளது, ஏனெனில் 15 மாத காலத்திற்கு பிறகு வேலைகள் போதுமானதாக இல்லை என இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது . பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 31 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து வேலையின்மையில் அதிகபட்ச எண்ணிக்கை இது
♈🇮🇳 ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து ஏதும் தற்போது வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ராகுல்காந்தி தான் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறியுள்ளார்
♈🇮🇳 தற்போது ராஜ்ய சபாவில் மோட்டார் வாகன மசோதாவுக்கு சமீபத்திய திருத்தச் சட்டம் - 2017 - - மரபு வழிமுறைகளை எளிதாக்குவதற்கு பல பிரிவுகளை முன்மொழிந்துள்ளது. ஜனவரி 5, 2015 அன்று கணக்குப்படி , மொத்த 6,70,16,851 வகை ஓட்டுனர் உரிம பதிவுகளில், 16,72,138 போலிகள் இருக்க வாய்ப்புக்கள் உள்ளனவாம் . 7,99,923 பல வகை ஓட்டுனர் உரிம பதிவு எண்ணிக்கைகள் க்ளஸ்டர்களை [கூட்டாக ] பரவிக் கொண்டிருக்கிறதாம் – ஆராய்ந்து பார்த்ததில் போலி லைசென்ஸ் 6.70 கோடி உரிமங்கள் பதிவு செய்துள்ளது
♈🇮🇳 நீரவ் மோடியின் பிலாக் ஷிப் நிறுவனம் பையர் ஸ்டார் கம்பெனி நீதிமன்றத்தை நாடியுள்ளது தன் நிறுவனம் முடக்கப்பட்டதற்க்காக
♈🇮🇳 யூரோமணி தனியார் வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மெண்ட் சர்வேயில்(பிபிஜி] உயர் நிகர வட்டி வாடிக்கையாளர்களின் பிரிவில் ஹெச்டிஎப்சி வங்கி முதலிடம் பெற்றுள்ளது
♈🇮🇳 ஐரோப்பியன் விருதை வால்வோ எக்ஸ் சி 40பெற்றுள்ளது
♈🇮🇳 ஸ்வரூப் குழுமம், 2004 இல் NAFED வழங்கிய கடன்களைத் தவறாகப் பயன்படுத்திய பல நிறுவனங்களில் ஒன்றாகும்
♈🇮🇳 பீகார் சவ்பலில் காதல் ஜோடியை பஞ்சாயத்து கூட்டத்தின் முன் காதலனை முழங்காலிட வைத்து காதலியை உமிழ்நீரை துப்ப செய்து அதை தன் நாக்கினால் நக்கும் படி செய்துள்ளனர்
♈🇮🇳 ட்ரம்ப்பின் முக்கிய பொருளாதார நிபுணர் தன பதவியை ராஜினாமா செய்கிறார்-வெள்ளை மாளிகை ♈🇮🇳 கடந்த ஆண்டு அலபாமா செனட் சிறப்புத் தேர்தலில் வெள்ளை மாளிகையின் உதவியாளர் கெல்லின்னே கான்வே இரு வேட்பாளர்களுக்கும் வாதிட்டதின் மூலம்" விதிகளை மீறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
♈🇮🇳 டொனால்ட் டிரம்ப்பின் குழுவிற்கான உறவுகளுடன் ஒரு மத்திய கிழக்கு நிபுணர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டிரம்ப் கூட்டாளிகளுக்கு இடையில் ஜனாதிபதி மாற்றத்தில் இரகசிய கூட்டங்களில் கலந்து கொண்டார், இப்போது சிறப்பு ஆலோசகரான ராபர்ட் முல்லர் உடன் ஒத்துழைக்கிறார்
♈🇮🇳 நைஜீரியாவில் லேசா காய்ச்சலால் , குறைந்தபட்சம் 78 பேர் இறந்துள்ளனர் மற்றும் 353 பேர் "முன்னெப்போதும் இல்லாத"அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் –நைஜீரியாவின் நோய் தடுப்பு பிரிவு அறிக்கை
♈🇮🇳 இந்திய கடற்படை வீரர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்டாவை கொலை செய்த அமெரிக்க கடற்படை வீரருக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என்று தெரிகிறது
♈🇮🇳 ஈரோடு : சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி நகராட்சியை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன. வீட்டு வரி மற்றும் குப்பை வரிகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வரிகளை நகராட்சி குறைக்க வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன
♈🇮🇳 ராமேஸ்வரம் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகளில் மணல் அள்ள அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனுமதி சீட்டு நிறுத்தம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
♈🇮🇳 கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அரசுப்பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கலிங்கராஜபுரத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது.கோழிவிளையில் மர்மநபர்கள் கல்வீசியத்தில் அரசுப்பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன
♈🇮🇳 ஆற்காடு அருகே மாட்டு வண்டிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். சக்கரமல்லூரில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிதால் 1000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்
♈🇮🇳 கேரளாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்
♈🇮🇳 2016–17 நிதி ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.20 ஆயிரத்து 339 கோடி உள்பட பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன.வரிச்சலுகைக்காகவும், மூலதன மேம்பாட்டுக்காகவும் மட்டுமே இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகை வங்கிகளின் இருப்புச்சீட்டில் இடம் பெறாது.அதே நேரத்தில் கடனாளிகள், தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு தொடரும்.இந்த கடன் தள்ளுபடியால் கடனாளிகள் பலன் அடைய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி சிவ பிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், ‘‘2013–ம் ஆண்டு, ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன’’ என்று குறிப்பிட்டார்
♈🇮🇳 நெய்வேலி அனல் மின் நிலையத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தடை
♈🇮🇳 கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த கோரி வழக்கு
♈🇮🇳 நீதியரசர் ராஜமாணிக்கம் ., "தூத்துக்குடியில் தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கோ அதில் தலையிடுவதற்கோ யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இந்த கொடிக்கம்பங்களை அகற்றும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கோ, மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கோ அல்லது அவருக்கு கீழ்பணியாற்றும் காவல்துறையினருக்கோ இல்லை. எனவே இந்த கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 comments:
Post a Comment