Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News



🔵⚪ஒருசில நிகழ்வுகள் நிகழ்வு செய்தியில்...
 *🔵⚪மாணிக் சர்க்கார் ராஜினாமா..!

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வியடைந்ததால் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.
*🔵⚪கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்..!

அடுத்த மாதம் ஐபிஎல்- 11தொடர் நடக்கவிருக்கிறது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில்,  தினேஷ் கார்த்திக்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.    அதேபோன்று,  துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
*🔵⚪ஜெயலலிதா மரணம் மர்மமாகவே உள்ளது..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மிகப்பெரிய சதிவேலை நடந்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  மேலும், இறப்புக்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது எனவும் அவர் கூறினார்.
*🔵⚪கியாட்டோவில் ஓர் சுற்றுலா...!

உலகின் சிறந்த சுற்றுலா நகரங்களில் முக்கியமான ஒன்று ஜப்பானின் கியாட்டோ நகரம். இது ஜப்பானின் தலைநகராக ஆயிரம் வருடங்களுக்கும் மேல் இருந்து வந்தது. இங்குள்ள மடங்கள்  பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டவை. கியாட்டோவுக்கு 'பத்தாயிரம் மடங்கள் கொண்ட நகரம்' என்ற பெயரும் உண்டு. சுற்றுலாவாசிகளுக்கு பிடித்த நகரத்தில் இதுவே முக்கியமானது.
*🔵⚪ராஜினாமா செய்யத் தயார்..!

காவிரி விவகாரத்தில் புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயார் என புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
*🔵⚪சவுந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம்..!

பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். "இணையதளத்தில் திருட்டுத்தனமாக டீசர் வெளியானதை சகித்துக்கொள்ள முடியாது" என பதிவிட்டுள்ளார்.
*🔵⚪தேர்தல் வரட்டும் தெரியும்..!

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல் கமலும் காணாமல் போய்விடுவார் என்று முதல்வர் கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், "கூடிய விரைவில் தேர்தல் வரும்போழுது தெரியும்  யார் காணாமல் போவார்கள்" என்று பதில் தெரிவித்துள்ளார்.  மேலும் காவிரி விவகாரத்தில், வேற்றுமையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
*🔵⚪பணத்தை கொடுத்து ஆட்சியை காப்பாற்றுவது யார்?

எம்எல்ஏக்களுக்கு பணத்தை கொடுத்து ஆட்சியை காப்பாற்றுவது யார்? மாதா மாதம் படி அளப்பது யார்? தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார்.   அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா? என்றும் அவர் கூறியுள்ளார்.
*🔵⚪மேகாலயா முதல்வர் ராஜினாமா

மேகாலயாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 21, பாஜக 2, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால், மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டமன்றம் அமைகிறது. இந்நிலையில், மேகாலயா முதலமைச்சர் முகுல் சங்மா தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத்திடம் வழங்கினார்.
*🔵⚪டிராவில் முடிந்த ஹாக்கி போட்டி

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. மலேசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி சமனில் முடிந்தது.
*🔵⚪மாத வருமானம் ரூ.12 லட்சம்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மிக பிரபலமான கடைகளில் ஒன்று யாவ்லே டீ ஹவுஸ். இங்கு, டீ மட்டுமல்ல சிற்றுண்டிகளுக்கும் இந்த கடை பிரபலமானது. இந்நிலையில், தனது போட்டியாளர்களை பொறாமையும் ஆச்சர்யம் படும் வகையில் யாவ்லே டீ ஹவுஸ் ரூ.12 லட்சம் மாத வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதை, சர்வதேச பிராண்ட் ஆக மாற்றுவேன் என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
*🔵⚪கார்த்தி சிதம்பரம் வாக்குமூலம் பதிவு..!

மும்பை பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் வாக்குமூலம் காணொளி பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் குறித்து 2 பேரிடமும் பெண் சிபிஐ அதிகாரி கேள்விகளை கேட்டு வருகிறார். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
*🔵⚪எளிமையாக திருமணம் செய்த நடிகர்...!

தமிழில் “சூது கவ்வும்”, “ஆரஞ்சு மிட்டாய்”, “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். இவருக்கும் ஆர்.ஜே. நவலட்சுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இன்று காலை சென்னையில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதில், பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
*🔵⚪6 மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்..!

மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை 6 மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மார்ச் 6ம் தேதி தஞ்சை, 7ம் தேதி திருச்சி, 8ம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூரில் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
*🔵⚪"அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது"

மும்பை பைகுல்லா சிறையில் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் வெளிவந்த கார்த்தி சிதம்பரம், “ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. அரசியல் நொக்கத்தில் தான் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
*🔵⚪உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

இன்று காலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அருண்ராஜ் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனையில் காவலர் அருண்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
*🔵⚪24 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க உடல் தகனம்...

கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வனப்பணி அதிகாரி இன்று யானை தாக்கியதில் பலியானார். இதனையடுத்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்தில் 24 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
*🔵⚪முன்னாள் காதலன் வீட்டில் குண்டு வீச்சு..!

சென்னை பல்லாவரம் அருகே முன்னாள் காதலன் கிண்டல் செய்ததால் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காதலி கூறியதன் பேரில் பம்மலில் முன்னாள் காதலன் கோபி வீட்டில் தற்போதைய காதலன் குண்டு வீசியுள்ளார். இதனை தொடர்ந்து கோபி கொடுத்த புகாரின் பேரில் காதலன் சரத்குமார் உள்பட 4 பேரை சங்கர்நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
*🔵⚪காவிரி நீரில் புதுச்சேரி பங்கை தமிழக அரசு தர வேண்டும்....!

காவிரி நீரில் புதுச்சேரி மாநிலத்திற்கான பங்கை தமிழக அரசு தர வேண்டும் எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
*🔵⚪"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் கூறியுள்ளார். மேலும், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
*🔵⚪உண்மையை திரித்து கூறுகிறார்!

வேண்டுமென்றே காவிரி பிரச்சனையை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் எனத் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “கர்நாடக முதல்வர் சந்திக்க மறுத்தது குறித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பிரதமர் சந்திக்க மறுப்பதாக உண்மையை திரித்து கூறுகிறார் ஸ்டாலின். திமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்லட்டும். அதிமுகவை ஏன் அழைக்கிறார்?” எனக் கூறியுள்ளார்.
*🔵⚪"கூட்டணி என்ற தகவல் ஆதாரமற்றது"

லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி, “2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி என்ற தகவல் ஆதாரமற்றது. பகுஜன் சமாஜ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது. கோரக்பூர், புல்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியில்லை” எனக் கூறியுள்ளார்.
*🔵⚪ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு?

செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை கடிதம் அனுப்புவார். தமிழகம் முழுவதும் 770 சிறார் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
*🔵⚪நடப்பாண்டில் விபத்து குறைவு...!

கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் பிப்ரவரி வரை விபத்துகளில் 27 உயிரிழப்புகள் குறைவு எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், “விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் விபத்துகளால் 217 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 160 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.
*🔵⚪டூத் பேஸ்ட் வடிவில் புகையிலை பொருட்கள்....!

சென்னை சவுகார்பேட்டையில் டூத் பேஸ்ட் போன்று ஜர்தா, மாவா தயாரித்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற ராஜேஷ், மணீஷ் மற்றும் ரோஹித் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த புகையிலைப் பொருட்கள் நிரப்பப்பட்ட 450 டூத் பேஸ்ட் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.
*🔵⚪யாரும் ஊடுருவ முடியாது-நிர்மலா சீதாராமன்

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவ முடியாது. பாதுகாப்பு படையினர் எதிரிகள் ஊடுருவுவதற்கு முன்னதாக அவர்களை அழித்துவிடுவதாகவும், காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை கைவிடும் யோசனையில்லை" என்றார்.
*🔵⚪வித்தியாசமான திருமண விழா...!

ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவரை திருமணம் செய்ய உரிமை கோரி நடந்த போராட்டத்தையடுத்து, கடந்த டிசம்பரில் அங்கீகாரம் வழங்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் அங்கு ஒரே பாலினத்தவரை திருமணம் செய்வோருக்கான அமைப்பின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. சிட்னியில் நடந்த விழாவில் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*🔵⚪4 வயது சிறுவன் மரணம் குறித்து விசாரணை...!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பள்ளியகரத்தில் நேற்று வீட்டின் நீர்த்தொட்டியில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் விஸ்வா உயிரிழப்பு குறித்து சாலவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*🔵⚪41,000 பேர் எழுதிய செட் தேர்வு...!

தமிழகத்தில் நடைபெற்ற உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வை 41,000 பேர் எழுதினர். சுமார் 44,000 பேர் செட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 3,000 பேர் தேர்வு எழுத வரவில்லை என அன்னைதெரசா பல்கலைக்கழக நிர்பாகம் தெரிவித்துள்ளது.
*🔵⚪வாகன விபத்தில் இருவர் பலி...!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த குமார் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*🔵⚪ஆட்சியமைக்க கோரிய கொன்ராட் சங்மா...!

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் கொன்ராட் சங்மா அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
*🔵⚪தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்...!

தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக இறங்கியுள்ள கமல்ஹாசன் சென்னையில் நடந்த கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நேர்மையுடன் செயல்பட வேண்டும் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
*🔵⚪இவர்தான் மேகாலயா முதல்வர்...

மேகாலயாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 21, தேசிய மக்கள் கட்சி 19, மற்றவை 17 இடங்களில் வெற்றி பெற்றன. இங்கு ஆட்சி அமைக்க தேவையான 31 இடங்களை எந்த கட்சியும் பெறாததால் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. தற்போது பா.ஜ.க. கூட்டணியான தே.ம.க.வின் கான்ராட் சங்மா கவர்னரிடம் உரிமை கோரியதையடுத்து, மேகாலயாவின் முதல்வராகிறார்.
*🔵⚪ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு ரூ.2கோடி பரிசு...!

உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அருணா ரெட்டிக்கு ரூ.2கோடி பரிசு வழங்குவதாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். முன்னதாக பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அருணா ரெட்டி தெலுங்கானா முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More