Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

Today tamil news இன்றைய செய்திகள் 03/03/2018

_*TODAY NEWS-03/03/2018🚊*_




*♨ திரைப்பட பைனான்சியர் பேத்ரா மகள் மாயம்♨*

_💫சென்னை: சென்னை திரைப்பட பைனான்சியர் பேத்ராவின் மகள் கரிஷ்மா பேத்ரா மாயமானார். கரிஷ்மா கடத்தப்பட்டதாக தியாகராயார் நகரில் புகார் தந்துள்ளதாக பேத்ரா கூறியுள்ளார். தியாகராயார் நகரில் தங்கியிருந்த கரிஷ்மாவை கடந்த 2 நாளாக காணவில்லை என்று தெரிவித்துள்ளார்._

*♨ இந்தியா - வியட்நாம் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்♨*

_💫புதுடெல்லி: இந்தியா - வியட்நாம் இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தோ பசிபிக் பகுதியில் சர்வதேச சட்டம், இறையாண்மையை நிலை நாட் இணைந்து செயல்படுவோம் என்று மோடி தெரிவித்தார்._

*♨ திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம்♨*

_💫கோவை: திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது._

*♨ ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட 43 பேர் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு♨*

_💫திருப்பதி : ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேர் தமிழகம் புறப்பட்டனர். தமிழக அரசு பேருந்தில் 43 தமிழர்களும் முதற்கட்டமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்_


*♨ மார்ச் 6ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு: பி.ஆர்.பாண்டியன்♨*

_💫மன்னார்குடி: மார்ச் 6ம் தேதி ஆளுநர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித் அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்._

*♨ உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் கழுத்தறுத்து கொலை♨*

_💫விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் சுதா கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொலை வழக்கில் தலைமறைவான கணவர் நாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்._

*♨ நாகையில் சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்தவருக்கு கத்திக்குத்து♨*

_💫நாகை : நாகையில் தரங்கம்பாடி அடுத்த மருதம்பள்ளம் கிராமத்தில் சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்தவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. சீனிவாசன் என்பவரை கத்தியால் குத்திய செங்குட்டுவன், ரகு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்._

*♨ மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரிக்கு தேவையான நிதியை கேட்போம்: முதல்வர் நாரயணசாமி♨*

_💫புதுச்சேரி: புதுச்சேரிக்கு தேவையான நிதியை பிரதமர் மோடி அறிவிக்காதது குறித்து புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுவரை புதுவைக்கு வந்த பிரதமர்களிலேயே புதுச்சேரிக்கு நிதி அறிவிக்காமல் சென்றவர் மோடி தான் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரிக்கு தேவையான நிதியை கேட்போம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்._

*♨ காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர்-எதிர்க்கடசி தலைவர் சந்திப்பு வரவேற்கத்தக்கது: தா.பாண்டியன்♨*

_💫ஈரோடு: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர்-எதிர்க்கடசி தலைவர் சந்திப்பு வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு கூறிவரும் கருத்துகள் நீதிமன்றத்தக்கு எதிரானது என கூறியுள்ளார்._

*♨ தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்♨*

_💫சென்னை: தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.10 கோடியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம், ரூ 20 கோடியில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தகவல் கூறியுள்ளார்._

*♨ கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி♨*

_💫சென்னை: காஞ்சிபுரம் - ஆலந்தூர் சீனிவாசபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மாணவன் கீர்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்._

*♨ கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி♨*

_💫சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது._

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More