Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

கல்லூரி பேருந்து ஓட்டையில் விழுந்த மாணவி படுகாயம்

*♨கல்லூரி பேருந்து ஓட்டையில் விழுந்த மாணவி படுகாயம்♨*

☀கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே, பராமரிப்பில்லாத கல்லுாரி பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்த மாணவி, படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மகள், அமுதா, 19; கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதி, தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு, 'லேப் டெக்னீஷியன் கோர்ஸ்' படித்து வருகிறார்.

☀தினமும் கல்லுாரி பேருந்தில், வீட்டிலிருந்து சென்று வரும் இவர், நேற்று முன்தினம், வழக்கம் போல கல்லுாரி முடிந்து, பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில், அமுதா அமர்ந்திருந்த பகுதி உடைந்து விழுந்தது. அதில் அவர், சாலையில் விழுந்தார்.அதைப் பார்த்த, உடன் இருந்த மாணவியர், கூச்சல் போட்டு, பேருந்தை நிறுத்தினர். 

☀சாலையில் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த மாணவியை, கேளம்பாக்கம், தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த தகவலை, கல்லுாரி நிர்வாகமும், பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களும், நேற்று முன்தினம் தெரிவிக்கவில்லை. உடனிருந்த மாணவர்கள், நேற்று தெரிவித்ததை அடுத்து, இந்த செய்தி, காட்டுத் தீயாக பரவியது. 

☀இது போல, ஐந்து ஆண்டுகளுக்கு முன், தாம்பரம் அருகே, ஓடும் பள்ளி பேருந்திலிருந்து, 2ம் வகுப்பு சிறுமி சுருதி, விழுந்து பலியானதை அடுத்து, பள்ளி, கல்லுாரிகளின் பேருந்துகளை, போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும், இன்னமும் அவலம் தீரவில்லை.

*┈┉┅━❀☀☀❀━┅┉┈​*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More