*♨களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்♨*
☀நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் தலையணை அமைந்துள்ளது.
☀இங்கு ஓடும் பச்சையாற்றில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் அங்கு நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக தலையணைக்கு குறைந்த அளவே நீர் வரத்து உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்
*┈┉┅━❀☀☀❀━┅┉┈*
0 comments:
Post a Comment