*காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார் - அமைச்சர் விஜயபாஸ்கர்*
காட்டுப் பகுதியில் 10 பேர் தீக்காயங்களுடன் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்
தீவிபத்தில் காயமடைந்த இலக்கியா, சபிதா, ஸ்வேதா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
*மதுரை அரசு மருத்துவமனையில் அனுவித்யா உட்பட 2 பேருக்கு சிகிச்சை.
சென்னை மற்றும் திருப்பூரை சேர்ந்த இரு குழுவினர் காட்டு தீ விபத்தில் சிக்கினர்.
*(குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு - மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் பாக்யராஜ் பேட்டி)*
: 🔵⚪தேனி மாவட்டம் காட்டுத்தீயில்சிக்கியவர்களை மீட்கும் பணி விடியவிடிய நடைபெற்று வருகிறது.*
*காட்டுத்தீயில் சிக்கிய 36 பேரில், இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர், இவர்களில் 4 பேருக்கு 40% முதல் 95% வரை தீக்காயம்*
*காட்டுத்தீயில் சிக்கிய மேலும் 4 பேர் கேரளாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்*
🔵⚪குரங்கணி காட்டுத் தீயில் இருந்து மீட்கப்பட்ட 21 பேருக்கு போடி மருத்துவமனையில் முதலுதவி - தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ்
சென்னையை சேர்ந்த மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் என 27 பேர் , ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் மலையேற்றம் சென்றிருந்தனர் - மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ்
8 ஆண்கள், 26 பெண்கள், 3 குழந்தைகள் ஆகியோர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர் - ஆட்சியர்
🔵⚪குரங்கணி காட்டுத் தீயில் இருந்து மீட்கப்பட்டவர்கள் விவரம்:
திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சிறுமிகள் பாவனா, சாதனா
ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா, கண்ணன், சபிதா
சென்னையைச் சேர்ந்த மோனிஷா, பூஜா, சஹானா, அனுவித்யா, இலக்கியா, சுவேதா உட்பட 21 பேர் மீட்பு
*🔵⚪தேனி மாவட்டம் காட்டுத்தீயில்சிக்கியவர்களை மீட்கும் பணி ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்று வருகிறது.*
*காட்டுத்தீயில் சிக்கிய 36 பேரில், இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர், இவர்களில் 4 பேருக்கு 40% முதல் 95% வரை தீக்காயம்*
*301 மற்றும் 302 வார்டுகள் சிகிச்சை அளிக்கப்படுகிறது*
*உயிரிழப்பு பற்றிய எந்த தகவலும் இல்லை என தகவல்*
*தயார்நிலையில் மருத்துவ குழு உள்ளதாக தகவல்*
- செய்தியாளர், தேனி
*🔵⚪ தேனி - குரங்கணி வனப்பகுதியில் ஹெலிகாப்டரில் மீட்பு பணி தொடங்கியது*
*4 ஹெலிகாப்டர்களில் மீட்பு தொடங்கிய நிலையில் 16 கமாண்டோ வீரர்கள் தரை வழியாக வனத்திற்குள் சென்றனர்.*
*இன்று காலையிலும் காட்டுத் தீ தொடர்ந்து எரிகிறது.*
*மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டார்.*
: 🔵⚪தேனி : காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (9) பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.
மலையில் சிக்கியவரக்ளுக்கு சிகிச்சை தர 6 மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன.
* 13 அம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளதாக தேனி ஆட்சியர் தகவல்.
தீவிபத்தில் காயமடைந்த ஸ்வேதா தேனியில் இருந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கிய 39 பேரில் இதுவரை 25 பேர் மீட்பு.
மீட்கப்பட்ட 25 பேரில், 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
🔵⚪குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கியோரை மீட்க கேரளா மாநில காவல்துறையினர் உதவி.
* இடுக்கி டி.எஸ்.பி தலைமையில் கேரளா போலீஸ் குழு தேனி மலைக்கு மருந்துகள், உணவு, உதவி பொருட்களுடன் சென்றுள்ளது.
🔵⚪தீவிபத்தில் காயமடைந்த திருப்பூரை சேர்ந்த சத்திகலாவின் மகள்கள் சாதனா, பாவனா ஆகியோரை, வீட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் மறுப்பு.
* சிறுமிகளின் தந்தை வெளிநாட்டில் இருப்பதால், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அனுப்ப அதிகாரிகள் மறுப்பு.
தேனி : காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (9), சென்னையை சேர்ந்த நிவேதா(24) பெற்றோர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்..
#ref-menu





0 comments:
Post a Comment