அரசு கேபிள் டி.வி யில் பழநி தாலூகா ஆப்ரேட்டர்கள் 20000 செட்டாப் பாக்ஸ்களை பொருத்தியுள்ளனா், மேலும் பாக்ஸ்களை பெற்று செயலாக்கம் செய்ய தயாராக உள்ளனர், தற்சமயம் பாக்ஸ்களை வழங்கும் பொழுது அவற்றை 7 நாட்களில் செயலாக்கம் செய்ய வேண்டும் என்று உத்திரவாத கடிதம் பெற்று கொண்டு பாக்ஸ்களை வழங்குகின்றனர், இச்செயல் ஆப்ரேட்டர்களை பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது, தற்சமயம் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும் காலம் இச்சமயத்தில் ஏற்கனவே உள்ள இணைப்புகளை மக்கள் தற்காலிகமாக துண்டித்து விடுவார்கள், இச்சமயத்தில் செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயல்படுத்த சொல்வது ஆபரேட்டர்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்தும். மேலும் நாளொன்றுக்கு 3 பாக்ஸ்களை மட்டுமே செயலாக்கம் செய்ய முடியும், மக்களுக்கு பாக்ஸ்களை எப்படி செயல்படுத்துவது என்று அவர்களுக்கு விளக்கமாக சொல்ல பல மணிநேரமாகிறது,, அப்படியும் தவறுகள் நடந்து படம் பார்ப்பதில் தடங்கல் ஏற்படுத்திகொள்கின்றனர், ஆப்ரேட்டர்கள் திரும்பவும் சென்று அதை சரி செய்ய வேண்டும். இச்சூழலில் 7 நாட்களில் செயலாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் உத்திரவாதத்தை நீக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பழநி கேபிள் டிவி ஆபரேட்டர்கள்.
0 comments:
Post a Comment