*நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.o திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் லீக்காகி உள்ளது*
அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே 1.27 நிமிடம் கொண்ட டீசர் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி
*2.O பட டீசரும் லீக்கானது.*
_டைரக்டர் ஷங்கள் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள 2.ஓ திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. வெளியான 2.ஓ திரைப்பட டீசர் அதிகாரப்பூர்வ டீசரா என்பது குறித்து எந்தவித உறுதியான தகவலும் இல்லை._
_2.ஓ பட டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் காலா படத்தின் டீசரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட நேத்திற்கு முன்பே, அவசர அவசரமாக நடுராத்திரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் காலா டீசரை நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் வெளியிட்டார்._
_1.27 நிமிடங்கள் ஓடும் 2.0 படத்தின் டீசரில் அனைவரின் மொபைல் போன்களும் திடீரென பறப்பது போன்றும், டீசர் முடிவில் ரஜினி கண்ணாடியை உயர்த்தி குக்கூ என கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது._
0 comments:
Post a Comment