Hi manisat
#ref-menu

Sunday, March 18, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 18/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  18/03/18 Today Tamil ManisatNews



18-3-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை*   

காவிரி டெல்டா மாவட்டங்களில் கெயில் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

♈🇮🇳 போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் உலகின் மிக விலை உயர்ந்த சாக்லேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓபிடோஸ் நகரில் நடைபெறும் கண்காட்சியில் டேனியல் கோமஸ் என்பவர் தயாரித்த தங்க நிறத்திலான மேற்பூச்சுள்ள சாக்லேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பான் பான் என்ற இனிப்பு பண்டம், குங்குமப்பூ மற்றும் நறுமண பொருட்கள், மடகாஸ்கரில் இருந்த கொண்டுவரப்பட்ட வெண்ணிலா போன்ற பொருட்களால் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்த ரகசியங்களை வெளியில் கூறினால் நடப்பதே வேறு என ஆபாச நடிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 வீட்டை ரிப்பேர் செய்ய வந்த பணியாளரை தனது பாதுகாவலரை விட்டு அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக சவுதி இளவரசரான Mohammed bin Salmanஇன் சகோதரியான இளவரசிHassa bint Salman (40)க்கு பிரான்ஸ் அரசு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது

♈🇮🇳 அமெரிக்காவில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்தியரான ரமேஷ் புசிராஜம் அக்கேலா அகா ரமேஷ் பாய் என்பவருக்கு 33 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது

♈🇮🇳 சிரியாவில் கூட்டா பகுதியில் இருந்து நேற்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் வெளியேறியதாக ரஷியா தெரிவித்து உள்ளது

♈🇮🇳 வெள்ளை மாளிகை பணியாளர்களில் உடனடியாக மாற்றம் எதுவும் இருக்காது என பணியாளர் துறை தலைவர் ஜான் கெல்லி உறுதி அளித்து உள்ளார்

♈🇮🇳 ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாஸ்கோவின் நேரத்தில் இருந்து ஒன்பது மணி நேரம் கால வித்தியாசத்தில் இருக்கும் தொலைதூர கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் தொடங்கிவிட்டன

♈🇮🇳 கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியாளராக மாறிய ஜேமி காராகர், தன்னை கோபமூட்டிய காரில் இருந்த ஒரு குடும்பத்தை நோக்கி எச்சில் துப்பிய காணொளிக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்கைய் ஸ்போட்ஸ்' ஆய்வாளர் வேலையில் இருந்து காராகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳 துருக்கியில் இருந்து கடந்து செல்ல முயன்றபோது, குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது

♈🇮🇳 குரங்கணி தீவிபத்து : பலி எண்ணி்க்கை 17 ஆக உயர்வு

♈🇮🇳 மதுரையில் துணை முதல்வருக்கு பரிசோதனை

♈🇮🇳 இங்கிலாந்து ஓபன்பேட்மிண்டன் : அரையிறுதியில் பி.வி.,சிந்து தோல்வி.

♈🇮🇳 நெல்லை:ஐசிடிஎஸ் பெண் அதிகாரி சஸ்பெண்ட்

♈🇮🇳 குடிபோதையில் தகராறு:சினிமா விநியோகஸ்தர்கள் 3 பேர் கைது

♈🇮🇳 யுகாதி விழா: தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

♈🇮🇳 விடைத்தாள் திருத்தும் பணி: புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ முடிவு
♈🇮🇳 தனியார் பொறியியல் கல்லுாரிகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை, 50 சதவீதமாக குறைத்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது

♈🇮🇳 திருநெல்வேலி: பள்ளி ஆண்டு விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் சக்தி வாய்ந்த விளக்குகளால் மாணவர்களுக்கு கண்எரிச்சல் ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். விழாவில் ஒலி ஒளி ஏற்பாடு செய்த ரமேஷ் என்பவரும் கைதாகி உள்ளார்.அதிக வெளிச்சத்தின் காரணமாக மாணவர்கள் கண்களில் நீர் வடிதல், எரிச்சல் இருந்தன. மாணவர்கள் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

♈🇮🇳 இன்றைய (மார்ச்-18)விலை: பெட்ரோல் ரூ.74.87,டீசல் ரூ.66.12

♈🇮🇳 ஜெயப்பூர்: சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் கேட்ட ஊழியரை பா.ஜ. எம்.எல்.ஏ. அடித்து உதைத்த வீடியோகாட்சி வைரலாக பரவியுள்ளது

♈🇮🇳 பாரம்பரிய ரகங்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் பற்றிய கருத்தரங்கு டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியை காந்திகிராமம் பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இணைய தளம் மூலம் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பட்டது.இம் மாவட்ட விவசாயிகள்பலர் பங்கேற்றனர்

♈🇮🇳 துபாய், சிங்கப்பூர் மற்றும்இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 27 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கக் கட்டிகளை, ஏ.ஐ.யு., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

♈🇮  போதிய வரவேற்பு இல்லாததால், 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' சேவையை நிறுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது

♈🇮🇳 உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா வில் உள்ள,உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை சுத்தம் செய்யும் பணியை,ஏப்ரலில் துவங்க, இந்திய தொல்லியல் துறை முடிவு செய்து உள்ளது

♈🇮🇳 ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில்  பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னையின் எஃப்.சி. அணி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி சென்னையின் எஃப்.சி. அணி கோப்பையை தட்டிச்சென்றுள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 2-ம் முறையாக சென்னையின் எஃப்.சி. அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

♈ 🇮🇳    சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ரியாஸ் அகமது என்ற இளைஞரிடம் கத்தியைக்காட்டி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸ் அகமதிடமிருந்து ரூ.4,500பணத்தையும் செல்போனையும் மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்



*தீவிர சிகிச்சையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜனை வைகோ, திருமாவளவன் நலம் விசாரிப்பு.*
[18/03, 9:48 am] ‪+91 80980 58901‬: *குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு.*

*மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் உயிரிழப்பு.*


🔵⚪ *இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(37)  கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முறைப்படி அறிவித்தார்*.


*🔵⚪கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்*


*🔵⚪மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறினார்*


*🔵⚪ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு கிரேக்க தீவு பகுதியில் கடலில் மூழ்கிய விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது*


*🔵⚪ஜம்மு காஷ்மீரின் ஹஜிபோரா பகுதியில் சோபியான் மாவட்ட எஸ்.பி. சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எந்தவித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார்*


*🔵⚪ரஷ்யாவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது*


*🔵⚪ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்*


*🔵⚪அ,தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அதை பின்தொடர தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்*


*🔵⚪5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்*


காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் 5 பேர் பலி...


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

பூஞ்ச் மாவட்டம் பால்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன் கவலைக்கிடம். சசிகலா பரோல் கேட்டு மனு.

18/03/2018 Today petrol rate 74.87 Rs/ ltr and diesel rate 66.12 Rs/ ltr


நாமக்கல்லில் சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் சி.வி சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


*புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை டிடிவி தினகரன் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்து*

*சென்னையில் சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரன் நிகழ்ச்சி ரத்து*


மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என கூறும் காங். பின்னோக்கி செல்கிறது

திராவிட நாடு குறித்த கருத்தில் மு.க. ஸ்டாலின் படுகுழப்பத்தில் இருக்கிறார்

அதிமுகவை பாஜக இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது

- தமிழிசை


 காவிரி விவகாரத்தில் தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்; தமிழக எம்.பிக்கள் ராஜினாமா அவசியமற்றது

 - தமிழிசை சவுந்தரராஜன்


அடப் பாவி மனுஷா 
மனைவி உறவுக்கு வரமறுத்ததால் தீக்குளித்த கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (34).  பெயிண்டர். தினமும் வேலை முடித்து குடித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி பூங்கொடியை(30) உறவுக்கு அழைத்துள்ளார். பூங்கொடி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூங்கொடி கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சலை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சந்திரனை மீட்டனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்30 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருச்செங்கோட்டில் தனியார் இனிப்பகத்தில் வாங்கிய முட்டை பப்ஸில் பிளாஸ்டிக் துண்டு இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எஸ்என்டி ரோட்டில் தனியார் இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செங்கோடம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முட்டை பப்ஸ் (EGG Puffs) வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தாக தெரிகிறது. இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பத்தப்பட்ட கடைக்கு சென்ற காவலர்கள் அங்கிருந்த முட்டைகள் மற்றும் பப்ஸ்களை பறிமுதல் செய்தனர். சம்பத்தப்பட்ட கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.



சேலத்தில் நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.

புதூர் பகுதியில் சதீஸ்குமார் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. இன்று காலை அந்த கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

தீவிபத்து நடந்த கட்டிடத்தில் இருந்த கரும்புகை எழுந்ததையடுத்து அருகிலிருந்தோர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு  மின் இணைப்பை துண்டித்துவிட்டு தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.



 பட்டம் சின்னத்தில் நான் போட்டியிட்டபோது பட்டனை தட்டினால் அது வேறு சின்னத்துக்கு விழுந்தது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல, அது தந்திர வாக்குப்பதிவு

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்

- டி. ராஜேந்தர் 

சிப் வைத்து சீப்பான அரசியலை தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள் 

மாநில உரிமையை பெற்றுத்தர உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் ஜெயலலிதா

- டி. ராஜேந்தர்


தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா: 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்


தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா: 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்


இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழா வரும் 29 தேதி கொடியேற்றத்துடனும் துவங்குகிறது. மார்ச் 30 முதல், ஏப். 4ஆம்தேதி வரை தினமும் இரவு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம்,பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா வருவார். ஏழாம் நாளான ஏப்.5ல் பொங்கல் வைபவம் நடைபெறும். 

விழாவில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்துவழிபடுவர். ஏப். 6ல் அம்மனின் மின்ரத ஊர்வலம் நடைபெறும். ஒன்பதாம் நாளான, ஏப்.7 அன்று காலையில் இருந்துஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் சுமத்தல்,மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நேர்த்தி செலுத்துவர். அன்றுமாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:00 மணிக்கு அம்மன்புஷ்ப பல்லக்கில் எழுந்தருளலும் நடக்கிறது. பத்தாம் நாளான ஏப்.8அன்று இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுபெறும். இத்திருவிழாவையொட்டி, சிவகங்கை, பரமக்குடி,இளையான்குடி, மானாமதுரை, மதுரை, காரைக்குடி, கடலாடி, உட்படபல ஊர்களில் இருந்து போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள்இயக்கப்பட உள்ளன. பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன்செட்டியார் தலைமையில், ஏற்பாடுகள் நடக்கிறது.

*உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் - மாயவதியும் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்க்க தந்திரங்களுடன் தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்*

*டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 3 டாக்டர்கள் சென்ற காரானது மதுரா அருகே லாரி மீது மோதியதில் மூவரும் பரிதாபமாக பலியாகினர்*


*இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தை ஒட்டி இலங்கையில் கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தேசிய அவசரநிலை ரத்து செய்யப்படுவதாக ஜனாபதிபதி மாளிகை அறிவித்துள்ளது*


*குமரியில் பாலில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த கந்து வட்டிகாரர்கள் இருவர் மீது நாகர்கோவில மகளிர் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்*


அகஸ்தியார் அருவியில் குளிக்க தடை


*நாட்டு நடப்பு*

*#சாலை விபத்தில் இரண்டு முதியவர்கள் மரணம்*

*கோவை மாவட்டம் போக்குவரத்து துறை காவல்நிலையத்தி ற்க்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் சுமார் 60வயது மதிக்கத்தக்க இரண்டு ஆதரவற்ற முதியவர்கள் மரணமடைந்துவிட்டர்கள்.*

*பெயர்,விலாசம் மற்றும் அடையாளம் தெரியாத*
*உறவினர்கள் யாரும் இல்லாத முதியவர்களின் உடலை* *உறவாய் இருந்து நல்லடக்கம்* *செய்யும் நற்பணியில்* *உங்கள*
*Jeeva Shanthy Trust*
*தோழமைகள்*

*#உறவின்றி மரிப்போர்க்கு*
*#உறவாய் இருப்போம்*


*🔵இன்னும் அந்த சட்டம் இருக்கு! எச்.ராஜா எச்சரிப்பது யாரை தெரியுமா?*

*🗣திராவிட நாடு, தனி நாடு போன்ற கோரிக்கைகள் தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவே ஒருசில காரணங்களால் தனித்தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் தென்மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு உருவாக்கும் கோரிக்கைகள் சமீபகாலமாக வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போல் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின் திடீரென பின்வாங்கி, திராவிட நாடு கோரிக்கையை திமுக கேட்கவில்லை என்று கூறினார்*

*🗣இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளார். எச்.ராஜா, திமுக செயல்தலைவரைத்தான் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.*


*🔵"கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வெள்ளை தாளில் கூட மனு தாக்கல் செய்யலாம்: மாநில ஆணையர் தகவல்*

*✍நெல்லை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் வெள்ளை தாளில் எழுதி வேட்புமனு தாக்கல் செய்தாலும் ஏற்கப்படும் என மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 2, 7, 16, 23.ஆம் தேதிகளில் நடத்தப்படவிருக்கிறதுகிறது.*


 *🔵"24 மணிநேரத்தில் மழை... வட தமிழகம், தென் தமிழகத்தில் மழை*

*📡சென்னை: 24 மணி நேரம், 24 மணிநேரம்... வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌍♨5½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.*🤝

.      

*🌍♨மோசமாக கலாய்க்கிறார்கள்.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல்*⭕

.         

சென்னைக்கு குடிநீருக்காக திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவு  குறைப்பு


அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் சரக்க ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் தடம்புரண்டதால் அரக்கோணம் வழியாக சென்னை வரும் ரயில்கள் தாமதமாக வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


 காவிரி டெல்டா மாவட்டங்களில் கெயில் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More