இன்றைய மணிசாட் செய்திகள் 12/03/18 Today Tamil ManisatNews
12/03/18
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 40 பேர் உயிரிழப்பு.
குரங்கணி மலை காட்டுத்தீ விபத்து எதிரொலியாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலையேற்றம் செல்ல தற்காலிக தடை.
வங்கதேச விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
நான் சொல்லும் சில விஷயங்கள் திரிந்து சொல்லப்படுகின்றன குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய அரசின் பணியை பாராட்டவே விரும்புகிறேன் - நடிகர் கமல்ஹாசன்.
ஈரோட்டில் 24, 25-ம் தேதிகளில் நடைபெறும் தி.மு.க. மாநாட்டுக்கு வருமாறு தொண்டர்களுக்கு முக.ஸ்டாலின் அழைப்பு.
3 ஆண்டுகளுக்குப்பின், 12 ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு சிறைதண்டனை : ஐதராபாத் போலீசார் அதிரடி.
தமிழகத்தில் அனுமதியின்றி ட்ரெக்கிங் சென்றால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 24 வரை நீதிமன்ற காவலில், திகார் சிறையிலடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை.
வாரணாசியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் மோடி படகில் பயணம்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன், விவேக் ஜெயராமன், அவரது மனைவி மற்றும் தங்கை ஷகிலா , சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர்கள் மற்றும் சசிகலாவின் உதவியாளர் உள்ளிட்டோர் சந்திப்பு.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த அனுவித்யா, கண்ணன், நிஷா, தேவி, திவ்யா, கேரளாவை சேர்ந்த மீனா, ஜெயஸ்ரீக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சென்னையை சேர்ந்த சுவேதா, பார்கவி, நெல்லையை சேர்ந்த நிவ்யரெஹ்ருதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.
காவிரி விவகாரம் மட்டுமின்றி பல விஷயங்களில் ரஜினி நழுவி வருகிறார். தீ விபத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது மகிழ்ச்சி எல்லா நேரங்களிலும் அரசை விமர்சிக்கக் கூடாது : நடிகர் கமல்ஹாசன்.
கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது.மற்ற கைதியை போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும்.தனி அறை ஒதுக்கக் கூடாது - நீதிபதி திட்டவட்டம்.
தேனி : குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 3சுபா, புனிதா, ஹேமலதா ஆகியோரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பு.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் ஜே.கே. திரிபாதி ஆஜர்.
தேடப்படும் நபராக அறிவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அனைத்துத்தரப்பு வாதங்களும் நிறைவு.
சிறை விதிப்படிதான் சசிகலா சாதாரண உடையில் பெங்களூரு சிறையில் உள்ளார்.தேர்தல் வந்தால் போட்டியிட வசதியாக சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்தோம் - டிடிவி.தினகரன்.
விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுரேஷ் பிரபு.
குரங்கணி தீ விபத்து தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனையில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை: பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை.
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
குரங்கணி காட்டுத் தீயின் எதிரொலியாக கேரளா அதிரடி நடவடிக்கை : கேரள வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிப்பு.
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்.
குக்கர் சின்ன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் டிடிவி.தினகரன் : அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளதால் கேவியட் மனு தாக்கல்.
குரங்கணி மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது.
உறவினர்கள் பதற்றத்தில், மருத்துவர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்.மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை விளம்பரப்படுத்த வேண்டும் - நடிகர் கமல்.
குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரில் 2 பேர் கவலைக்கிடம்.
அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.மீனவர்கள் லட்சத்தீவு பகுதிகளுக்கு 15 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் - வானிலை மையம்.
சென்னை : பாலவாக்கத்தில் உள்ள மலையேற்றம் மைய அலுவலகத்தில் சோழிங்கநல்லூர் தாசில்தார் ஏழுமலை தலைமையில் ஆய்வு.
ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரிக்கை.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
அங்கீகாரம் இன்றி குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தினால் ரூ1 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை - புதுச்சேரி அரசு அறிவிப்பு.
நிதி மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமருக்கு இடைக்கால ஜாமின்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நடைபயணம் செல்லத்தடை தடையை மீறி வனப்பகுதிக்கு சென்றால் வனசட்டப்படி கடும் நடவடிக்கை : இயக்குநர் கணேசன்.l
0 comments:
Post a Comment