இன்றைய மணிசாட் செய்திகள் 13/03/18 Today Tamil ManisatNews
13/03/18
*🔵⚪விபத்து வழக்கில் பாடகர் உதித் நாராயண் மகன் ஆதித்யா மும்பையில் கைது*
* மும்பையில் வேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக ஆதித்யா மீது வழக்கு
*🔵⚪ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்கிறது*
🔵⚪தமிழகத்தில் 16ம் தேதி முதல் புதிய படப்பிடிப்பு நடைபெறாது - தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு.
* வெளி மாநிலங்களில் நடைபெறும் படப்பிடிப்புகள் 23ம் தேதி முதல் நிறுத்தம் - தயாரிப்பாளர் சங்கம்.
*🔵⚪கன்னியாகுமரியில் இருந்து நீண்ட நாள் மீன்பிடிப்பிற்காக சென்ற 52 படகுகள் கரை திரும்பவில்லை*
*மீனவர்களை தொடர்பு கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது - வருவாய்,பேரிடர் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்*
*🔵⚪ கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது*
*🔵⚪ ரயில்வே - 90,000 பணியிடம் : 1.5 கோடி விண்ணப்பங்கள்*
*ரயில்வேயில் 90,000 காலியிடங்கள் கொண்ட குரூப் டி மற்றும் குரூப் சி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுக்கு இதுவரை 1.5 கோடி பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்*
🔵⚪குற்றப்பின்னணி கொண்ட யாரும் அதிமுகவில் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்
🔵⚪கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் 50 லிருந்து 100 படகில் சென்ற மீனவர்களை மட்டுமே கரை திரும்புமாறு அறிவுறுத்த வேண்டியுள்ளது : அமைச்சர் ஜெயகுமார்
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் உரிய பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளனர் : அமைச்சர் ஜெயகுமார்
🔵⚪தீக்காயமடைந்தோரில் 50% பேர் கவலைக்கிடமாக உள்ளனர், அவர்கள் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளனர் - மதுரையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.
* தீக்காயத்துக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்
🔵⚪பிறக்கும்போதே லவுடு ஸ்பீக்கருடன் பிறந்தவர் வைகோ; அவர் வீரவசனம் பேசுவதில் வல்லவர்- அமைச்சர் ஜெயக்குமார்
*🔵⚪புயல் பற்றி தெரியாமல் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு விமானம் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது*
*நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தல்*
*டோர்னியர் விமானம் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது*
*இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி*
*குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் மணிக்கு 40 கி.மீ. முதல் 60கி.மீ. வரை பலத்த காற்று வீசும்*
*லட்சத்தீவு, கேரளாவின் தெற்கு பகுதிகளில் 2நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்-வானிலை மையம்*
*🔵⚪குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்*
*தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*
*🔵⚪ ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான வழக்கில் இருந்து நீதிபதி இந்திரஜித் கவுர் விலகல்.*
*வழக்கு விசாரணையை, வேறு அமர்வுக்கு மாற்ற உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தகவல்.*
*அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்த தடை கோரிய கார்த்தியின் வழக்கு 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்*
*🔵⚪ தேனி : காட்டுத்தீ ஏற்பட்டுள்ள குரங்கணி பகுதியில் சாரல் மழை.*
*காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு.*
*தீவிபத்து மற்றும் உயிரிழந்தவர்களின் உடமைகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு.*
*கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவு.*
*கோடைக்காலத்தை ஒட்டி மே 31-ம் தேதி வரை கொல்லிமலையில் மலையேறத் தடை.*
*🔵⚪ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி ஆஜர்.*
*2011 முதல் 2012 வரை 3 மாதங்கள் உளவுத்துறை ஐ.ஜியாக பணியாற்றியவர்.*
*🔵⚪JUSTIN | அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது*
0 comments:
Post a Comment