Hi manisat
#ref-menu

Sunday, March 11, 2018

இன்றைய செய்திகள் 11/03/18 Today News tamil

இன்றைய செய்திகள் 11/03/18 
Today News tamil 


 🔵⚪தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் வறட்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். : அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தால், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

நூலகத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக நூலகத்துறை இயக்குனர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அரசாக திகழ்கிறது. : அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்


🔵⚪சென்னை கோயம்பேடு பழக்கடை மார்க்கெட்டில்   உணவு பாதுகாப்பு துறை  அதிகாரிகள் மற்றும் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள்   மேலும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் 5 டன் எடை கொண்ட பழங்கள் செயற்கை  முறையில் பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது உடனடியாக அவற்றை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கைப்பற்றினர்

🔵⚪நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான மாநாடு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. ‘வளர்ச்சிக்காக நாம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

*இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–*

நாட்டில் ஏராளமான இடங்கள் மற்றும் மாவட்டங்கள் மற்றவற்றை விட வசதியில், கட்டமைப்பில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. இத்தகைய வளர்ச்சிக்கான தேவையில் இருக்கும் 115–க்கும் மேற்பட்ட மாவட்டங்களை அடையாளம் கண்டு அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாவட்டங்களில் வளர்ச்சி அளவுருக்கள் வலிமையாக இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் இருந்து கற்றுக்கொண்டு, பலவீனமான மாவட்டங்களின் வளர்ச்சிக்காக நாம் உழைக்க வேண்டும். தேவையில் இருக்கும் இத்தகைய மாவட்டங்களை முன்னேற்றுவதன் மூலம் இந்தியாவின் மனித வளர்ச்சிக்குறியீட்டு நிலை உயரும்.

பின்தங்கிய மாவட்டங்களின் தேவையில் ஒரு அம்சத்தையாவது பூர்த்தி செய்ய நாம் முடிவு செய்தால் பின்னர் அவற்றின் அனைத்து தேவைகளையும் படிப்படியாக நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். நம்மிடம் மனிதவளம், திறன் மற்றும் வளங்கள் இருக்கின்றன.

ஒரு குறிக்கோளுடன் பணி செய்து, நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். சமூக நீதியே நமது குறிக்கோள் ஆகும். அனைத்து குழந்தைகளும் பள்ளி சென்று, அனைத்து குடும்பங்களும் மின்சார வசதி பெற்றிருந்தால் அது சமூக நீதியை நோக்கிய ஒரு படி ஆகும்.

இந்த வளர்ச்சி குறைபாட்டுக்கு பட்ஜெட்டோ, வளங்கள் குறைபாடோ காரணம் அல்ல. மாறாக சிறந்த நிர்வாக குறைபாடுதான் காரணம். சிறந்த நிர்வாகம், வலிமையான திட்ட செயலாக்கம் மற்றும் செயல்பாடுகளை முன்னிறுத்துதல் போன்றவையே வளர்ச்சிக்கான தேவை ஆகும்.

20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீங்கள் எவ்வளவு போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள்? எத்தனை முறை சிறைக்கு சென்றிருக்கிறீர்கள்? என்ற அம்சங்களே முன்னணியில் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்களோ அல்லது எதிர்க்கட்சியாக இருக்கிறீர்களோ அது பற்றி கவலை இல்லை. மக்களுக்கு சேவை புரிகிறீர்களா என்பதுதான் பிரச்சினை.

எனவே மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான போட்டி மற்றும் கூட்டாட்சி முறையுடன் வலிமையாக உழைக்க வேண்டும். இதுவே நமது நாட்டுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த பணியில் பொதுமக்களின் பங்களிப்பு எப்போதும் உதவி புரியும். எங்கெல்லாம் பொதுமக்களுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றுகிறார்களோ, அங்கெல்லாம் முடிவுகள் பிரமாதமாக கிடைத்து இருக்கின்றன.

நமது தேசத்தலைவர்களான ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் மற்றும் சர்தார் படேல் ஆகியோர் இந்த பாராளுமன்ற மைய மண்டபத்தில் அமர்ந்து அரசியல்சாசனத்தை உருவாக்கினார்கள். அந்த இடத்துக்கு நீங்கள் புனித யாத்திரையாக வந்து வளர்ச்சியை முன்னிறுத்தி விவாதிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.



*ஆந்திர மாநிலம் அருகே விபத்து: 4 பேர் உயிரிழப்பு,*

 *ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகே சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. காருபாளையம் என்ற இடத்தில் தனியார் பேருந்தும் வேனும் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் பங்காருபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*


*காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அ.தி.மு.க. உறுதி - தம்பிதுரை,*

*உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.*


*சென்னை புழல் சிறையில் கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல்,*

*சென்னை புழல் சிறையில், கைதியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறைக் காவலர்கள் ரோந்து பணியின் போது, விசாரணை கைதி அறையில், கைதி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.*

*இதையடுத்து, அவரை பிடித்த காவலர்கள், செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர், திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தாம்பரத்தை சேர்ந்த அப்பு என்பது தெரியவந்தது. சிறைக்குள் இருக்கும் நிலையில், அவருக்கு செல்போன் எவ்வாறு கிடைத்தது பற்றி, புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.*


*3 பேரைக் கொன்ற ஒற்றைக் கொம்பு காட்டுயானை மீண்டும் திரும்பியதால் கிராம மக்கள் அச்சம்,*


*சின்னாறு, ஒட்டயனூர் பகுதியில் கடந்த மாதம் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, அடுத்தடுத்த நாட்களில் 3 பேரை தாக்கி கொன்றது. இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஒகேனக்கல் அருகேயுள்ள காவேரி கரையோரத்தில் விட்டனர். இதனால் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்த பல்வேறு கிராம மக்கள், விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.*

*இந்நிலையில் 3 பேரை கொன்ற ஒற்றை கொம்பு காட்டு யானை, தற்போது மீண்டும் ஓசூர் வனப்பகுதிக்குள் 5 காட்டுயானைகளோடு நுழைந்துள்ளது. இதனால் காமன்தொட்டி , பாத்த கோட்டா, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.*


*தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியது,*

 *தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2-ம் தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியுள்ளது. நலவாழ்வு மையம், அரசு மருத்துவமனை, பள்ளி, மருந்தகம், பேரூந்துநிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்க 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*


*தேனி வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசம்,*


*வீரப்பஅய்யனார் கோயில் வனப்பகுதி, பெரியகுளம் அகலை மற்றும் போடி மரக்கமலை தேவராம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் கொளுந்து விட்டு எரியும் இந்த தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.*

*தீயின் வெம்மை காரணமாக விலங்குகள் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே தீயை விரைந்து அணைக்க வனத்துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.*


*தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது கோடை வெப்பத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்*

: *காவிரி விவகாரத்தில் தமிழக நலனுக்காக முதல் ஆளாக பதவி விலக தயார் - அன்புமணி.


🔵⚪காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் அவகாசம் உள்ளது 

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதற்கு தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பே சாட்சி

இரட்டை இலையை மீட்போம் என்ற தினகரன் கனவு பகல் கனவு 

- ஓ.பன்னீர்செல்வம்


🔵⚪ஹெச்.ராஜாவை பேசவிட்டு பாஜக தலைவர்கள் வேடிக்கை பார்ப்பது ஏன்?

தமிழகத்தில் பாஜக வன்முறையை தூண்ட முடியுமே தவிர ஆட்சியை பிடிக்க முடியாது 

- திருமாவளவன்


*ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலப்பதற்காக வெட்டப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை,*

*சென்னையில் பிரியாணி கடைகளில் ஆட்டுக்கறியுடன் கலப்பதற்காக கன்றுக்குட்டிகளின் கறியை விற்றதாக, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.*

*சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், எழும்பூர் போலீசாரும் சோதனை நடத்தினர். துர்நாற்றம் வீசும் பகுதியில் இருந்த 600 கிலோ கறியை பறிமுதல் செய்த அவர்கள், 7 பேரை பிடித்து விசாரித்தனர். அவை வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி என்பதும், ஆட்டுக்கறியைப் போல இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.*

*இவற்றை சென்னையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் வாங்கிச் சென்று, சுவையூட்டிகள் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கறி, பின்னர் அழிக்கப்பட்டது.*


*32 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு,*

*32 கோடிப் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.*

*ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் என்னும் அரசுசாரா அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 32கோடிப் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் இருந்து அனுமதி கிடைத்ததும் மேலும் 54கோடியே 50லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்த இணைப்புக்கு எவ்வளவுக் காலம் ஆகும் எனக் கேட்டதற்கு, 32கோடி ஆதார் எண்கள் மூன்றே மாதத்தில் இணைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.*


*காங்கிரஸ் சார்பில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு,*

*காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெறும் விருந்தில் பங்கேற்குமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.*


🔵⚪விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவில்லை

போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது வழக்கு; விவசாயிகள் நிம்மதியாக வாழ முடிகிறதா?

தமிழகத்தில் நீர் ஆதாரம் முற்றிலுமாக குறைந்துவிட்டது 

நான்குபோக விளைச்சலை இன்றைய இளைஞர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

- வேல்முருகன்


 🔵⚪மார்ச் 15-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் தகவல்

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் 

* இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்

 🔵⚪திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்கள் பெயர் என்ன என்று மருத்துவர் கேட்டதற்கு கருணாநிதி என கூறினார் - துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் என மருத்துவர் கேட்டதற்கு அண்ணா என கூறினார் - துரைமுருகன் 


🔵⚪திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு, செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

🔵⚪குழந்தைகளிடம் செல்போனை தரக்கூடாது 

இளம் வயதில் பெண்கள், ஆண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்

- வைகோ 

🔵⚪தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்

நம்மை காவல் காக்க இருக்கும் காவல்துறையினரும் நம்மை தண்டிக்கிறார்கள் 

- கனிமொழி
*

*JUSTIN | திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை, பொதுத்தேர்வுகள் நடைபெறும் - ஆட்சியர்*


*திரிபுரா சாரிலாம் தொகுதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு,*

*திரிபுராவில் சாரிலாம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. திரிபுராவில் சாரிலாம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் மாரடைப்பால் இறந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் மார்ச் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே பிப்ரவரி 18ஆம் தேதி 59தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 43இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. மார்ச் மூன்றாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுமே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், தொண்டர்களின் வீடுகள் ஆகியவற்றின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இத்தகைய தாக்குதலில் இருந்து சாரிலாம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாலாஸ் தேவ் வர்மாவும் தப்பி ஓடியுள்ளார். சாரிலாம் தொகுதிக்குப் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போதும் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறும் என அஞ்சுவதால் போட்டியில் இருந்து விலகுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.*


*நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது: வைகோ,*

*காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றிருந்த காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை, உச்சநீதிமன்ற தீர்ப்பில் திட்டமிட்டே நீக்கப்பட்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக சாடினார்.*


*கேரள மாநிலம் குமுளியில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த போலீசார், 5 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.*

*தமிழக-கேரள எல்லையில் குமுளியில் உள்ள உணவகத்தில் உணவருந்திய ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டு கள்ளநோட்டாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அவரை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் நகரை சேர்ந்த கிரீசன் என்பதும், இதேபோல் பல இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், 5 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதில் அவரது அண்ணன் சுகேசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.*



*வைத்திலிங்கத்திடம் முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு,*

*முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கத்தை துணை சபாநாயகர் தம்பிதுரையும் நலம் விசாரித்தார்.*


*இமாச்சல பிரதேசம்: பைஜ்நாத் கோயிலில் ரஜினிகாந்த் வழிபாடு,*

*இமயமலை புறப்பட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர், இமயமலை சென்று நீண்டநாளாகிவிட்டதால், தற்போது அங்கு செல்வதாக தெரிவித்தார்.*

*பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குறைந்தபட்சம் 15 நாட்கள் இமயமலையில் தங்கியிருக்க உள்ளதாக கூறினார்.*

*இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் பைஜ்நாத் ((Baijnath)) என்ற இடத்தில் உள்ள பழமையான பைஜ்நாத் சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார்.*

🔵⚪அதிமுகவுக்கு எதிரி திமுகதான்; திமுக ஒரு காலத்திலும் எழுந்து நிற்க முடியாது

ஸ்டாலின், தினகரன் பேசுவது ஒன்றே, ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதுதான் 

 - அமைச்சர் காமராஜ் 

🔵⚪சென்னை : போரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைத்திலிங்கம் எம்.பி-யை, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி. 


🔵⚪சினிமாவில் வேண்டுமானால், நடிகர்கள் மக்களை காப்பாற்றலாம் நிஜவாழ்வில் முடியாது - நெல்லையில் நடிகர் ராதாரவி பேச்சு..


🎯நம்ம சிங்கார சென்னை ஹோட்டல்களில், பிரியாணி, ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்பதற்க்குன்னே ஆந்திராவிலிருந்து இறந்து போன கன்றுக்குட்டிகளை சென்னைக்கு கொண்டு வந்து அதை குட்டி குட்டி துண்டுகளாக வெட்டி குறைஞ்ச விலைக்கு விற்பதாக எழும்பூர் போலீஸூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த போலீஸார் தெற்கு கூவம் ஆறு சாலையில் உள்ள கூவம் கரையில் இரும்புத் தடுப்பு அமைத்து இறைச்சியை விற்கும் இடத்திற்கு போனாய்ங்க. கூடவே சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்றனர். அங்கு சுகாதாரமற்ற முறையில் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துச்சு. அதிலும் ஆட்டிறைச்சியுடன் கலப்பதற்காக கன்றுக்குட்டிகளின் இறைச்சியை சாதாரண இரும்பு குடோன் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் விற்பது தெரிய வந்தது.

அதைப் பார்த்து ஷாக்காகி போன போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும் கன்றுக்குட்டிகளின் இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவை வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் இறைச்சி என்பதும், ஆட்டிச்சிறைச்சியை போல இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. ஸ்பாட்டுலே மொத்தம் 600 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக அங்கிருந்த 7 பேரை போலீஸார் பிடித்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டது. அப்பாலே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 7 பேரையும் சிறிது நேரத்தில் போலீஸார் விடுவித்தனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வாசுதேவனிடம்  விளக்கம் கேட்ட போது, அவர் இறைச்சியை மட்டும் கைப்பற்றி அழித்துவிட்டதாகக் கூறினார்.விரிவா தெரிஞ்சிக்க கேள்வி கேட்டப் போ’ஆட்களை போலீஸாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அவர்கள் அதற்கான முறையான பிரிவு இல்லாததால் விடுவித்துவிட்டதாக தெரிவித்தார். 

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அல்லவா இதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டபோது, 'ஆமாம். அவர்கள் தான் விசாரிக்க வேண்டும், எங்களுக்கு தகவல் கிடைத்ததால் உடனடியாக சென்றுவிட்டோம். அவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' அப்படீன்னார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, ''இது போன்ற இறைச்சி டன் கணக்கில் தினமும் சென்னைக்கு பல வகைகளில் கொண்டு வரப்படுகிறது. ஆங்காங்கே பிரித்துக் கொடுக்கப்பட்டு விடும் இதைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதற்கான காவல்துறை சட்டங்களும் இல்லாததால் ஜோராக இந்த வியாபாரம் நடக்கிறது. சென்னையின் மிகப் பெரிய மாஃபியா போன்று பெரும் கூட்டமே செயல்படுகிறது என்று தெரிவித்தார். 

அதிலும்  இது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு விஷயம். நம்ம  சென்னையில் தங்கி வேலை செய்யும் வெளியூரைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம், பொதுமக்கள் உயிரோடு விளையாடும் விஷயம். அரசு இந்த விஷயத்தில் அசட்டையாக இருப்பது ஏன் என்று புரியவில்லை'' என்றார்.

*திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மயங்கிய நிலையிலேயே இருந்து வந்த அவர் இப்போது கண்விழித்து பார்க்கிறார்*

: திருவனந்தபுரம்:
இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு கேரளா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக பயிற்சி பெறும் வக்கீல்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

3 மாதத்திற்கு ஒரு முறை 15 ஆண்டு அனுபவம் பெற்ற மூத்த வக்கீலிடம் இருந்து பயிற்சியில் தொடர்வதற்கான உறுதி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். கேரளா வக்கீல்கள் நல நிதி சட்டம் 1980ன் படி இதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த கேரளா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


விவகாரத்து கோரிய பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து சிறுவன் எழுதிய கடிதம் அனைவரையும் நெழ்ச்சியடைய செய்துள்ளது. 1997 ல் திருமணமான ஒரு தம்பதி 2 குழந்தைகள் பிறந்த பின்பு ஏற்பட்டச சில மனக்கசப்பு காரணமாக கடந்த 2011 மார்ச் மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அங்கு தீர்க்க முடியாமல் உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் கிரிமினல் குற்றம் சுமத்தினர். அந்த வழக்கும் தீர்க்க முடியாமல் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிபதிகள் குரியன் ஜோசப், மற்றும் மோகன் சந்தானகவுடர் ஆகியோர் முடிவு செய்தனர். இதையடுத்து இந்த தம்பதிகளை நேருக்கு நேர் அமர வைத்து அவர்களது பிரச்னைகளை அறிந்து அவர்களுகான அறிவுரைகளையும், சில பிரச்னைகளுக்கான தீர்வுகளை சொல்லி இருவரையும் சேர்த்து வைத்தனர். தற்போது தம்பதிகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியின் விபூ என்ற மகன் இவ்விரு நீதிபதிகள் இருக்கும் அறைக்கு வந்து அவர்களுக்கு தங்கள் பெற்றோர்களை சேர்த்து வைத்ததற்கு நன்றி தெரிவித்து ஒரு வாழ்த்து அட்டையை வழங்கினார். அதில் ''கடவுள் உங்களுக்காக ஒன்றை வழங்கி கொண்டே இருக்கிறார். பிரச்னைக்கான தீர்வு, இருட்டிற்கான வெளிச்சம், சோகத்திற்கான தீர்வு, மற்றும் நாளைக்கான திட்டங்களை கடவுள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்'' என குறிப்பிட்டிருந்தார். 

இதை படித்த நீதிபதிகள் மிகவும் நெகிழ்ச்சியடைந்து விபூவை கட்டி தழுவி முத்தமிட்டனர். இதுகுறித்து நீதிபதி குரியன் ஜோசப் கூறியபோது: விபூவின் கடித்தின் வரிகள் அவன் பெற்றோரின் பிரிவு அவன் மனதில் எவ்வளவு பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்பதை உணர முடிகிறது. தற்போது அவனின் மகிழ்ச்சியே நான் நீதிபதியாக இருந்து பணியாற்றியதற்கான பெரும் பரிசாக நினைக்கிறேன். என கூறினார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More