Hi manisat
#ref-menu

Wednesday, March 7, 2018

இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil


இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil


 *♨ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு♨*

☀ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

☀கொறடா உத்தவை மீறி ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

☀எம்.எல்.ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க மற்றும் தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

☀வழக்கில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

*┈┉❀☀🇷 🇴🇾 🇦 🇱☀❀━┈​*
[07/03, 11:32 am] ‪+91 94885 03882‬: *♨செய்யாற்றுப் படுகையில் இரவு பகலாக மணல் திருட்டு - மணல் திருடிச் சென்ற லாரி மோதியதில் ஒருவர் பலி♨*

☀திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் திருடிச் சென்ற லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஆரணியை அடுத்த ராந்தம் கொல்லைமேடு பகுதியில் உள்ள செய்யாற்று படுகையில் உரிய அனுமதியின்றி இரவு பகலாக மணல் திருடப்படுகிறது. மணல் திருடிச் செல்லும் லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

☀இந்நிலையில் செய்யாற்றில் மணல் திருடிய டிப்பர் லாரி ஒன்று, ஆரணி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேகமாக வளைவில் திரும்ப முயன்ற லாரி, தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த உறவினர்கள் லாரியை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஜெய்சங்கரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பிசென்ற லாரி ஓட்டுனரைத் தேடி வருகின்றனர்

*┈┉❀☀❀━┈​*

*♨தமிழ்நாட்டில் முதல் முறையாக 11-ஆம் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன♨*

☀தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினோறாம் வகுப்பு பொதுத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. 

☀கடந்த ஆண்டு வரை பதினோறாம் வகுப்பு தேர்வு பள்ளி அளவில் மட்டும் சாதாரண தேர்வாக எழுதப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக எழுதப்படுகிறது. இதன்படி பதினோறாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்து 70 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதி வருகின்றனர்.

☀இதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 156 தேர்வு மையங்களில் 49 ஆயிரத்து 422 பேர் தமிழ் முதல் தாள் தேர்வை எழுதி வருகின்றனர். வினாத்தாளை படித்துப் பார்க்க 15 நிமிடம் என்கிற அடிப்படையில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 12.30க்கு முடிவடைகிறது

✿❁═☀ ☀═❁✿


*♨பெரியார் சிலைகளுக்கு எதிராக பேஸ்புக்கில் தான் பதிவிடவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்♨*

☀பெரியாரின் சிலைகள் அகற்றப்படும் என்று பேஸ்புக்கில் தான்  பதிவிடவில்லை என்றும், தனது அட்மின் செய்த தவறு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும், எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

☀திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் உடைக்கப்படும் என நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அந்த பதிவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து எச்.ராஜா நீக்கினார்.

☀இந்நிலையில் தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் அகற்றப்படும் என்று, தான் பதிவிடவில்லை என்றும், தனது அனுமதியின்றி, தனது முகநூல் அட்மின் அந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். அதனாலேயே அந்த பதிவை நீக்கியதாக கூறிய அவர், கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறையால் அல்ல என்றும் எச்.ராஜா கூறியுள்ளார்.

☀தனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்றும், அந்த பதிவினால் யார் மனதும் புண்பட்டிருந்தால், அதற்கு இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் எச்.ராஜா பதிவிட்டுள்ளார். பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் ஏற்புடையதல்ல என்றும், ஆக்கப்பூர்வமாக அமைதியான முறையில் இந்து உணர்வாளர்களை இணைத்து, தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்றும் எச்.ராஜா கூறியுள்ளார்

✿❁═☀☀═❁✿

*♨சிலை உடைப்பு சம்பவங்களால் பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி♨*

☀சிலைகள் உடைப்பு சம்பவங்களைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

☀தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என எச்.ராஜா கூறியிருந்த நிலையில், நேற்று வேலூர் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சிலைகள் உடைப்பு சம்பவங்களை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

☀அப்போது, சிலைகள் உடைப்பு சம்பவத்தை சகித்துக் கொள்ள கூடாது என்றும் உள்துறை அமைச்சரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், சிலைகள் உடைப்புச் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சிலைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

☀அதேபோல், சிலைகளை உடைப்பவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

*┈┉❀☀☀❀━┈​*

 *♨ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்♨*

☀புகழ்பெற்ற மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது . விழாவையொட்டி பெருமாள் சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

☀பின்னர் கருட பகவானின் படம் வரையப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பூஜைக்கு பின்னர் தங்கக் கொடிமரத்தில் தீட்சதர்கள் ஏற்றினார்கள். பின்னர் ராஜகோபாலசுவாமி பட்டு வஸ்திரம் அணிந்து கல்யாண அவசர திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

*┈┉❀☀❀━┈​*

*♨ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சுவாமி தரிசனம்♨*

☀திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

☀விரைவில் நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த நடிகை ஸ்ரேயா திருமலை விடுதியில் தங்கியிருந்தார். 

☀இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் பங்கேற்ற அவர் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்த ஸ்ரேயாவைக் காண ரசிகர்கள் கோயில் முன் திரண்டிருந்தனர்

*┈┉❀☀☀❀━┈​*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More