Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News

♈🇮🇳🌴*4-3-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை*  🌴🇮🇳 ♈  ♈ 🇮🇳 🌴 

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News


♈🇮🇳 ஆதார் விவரங்கள் திருடுபோகும் நிலையில் இருப்பதை பிரான்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.தெலுங்கானா மாநில அரசின் நலஉதவித் திட்டங்கள் குறித்து தகவல் வெளியிடும் இணையதளம் 'tspost'. இந்த இணையதளப் பக்கத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 56லட்சம் பேர் மற்றும் பென்சன் பெறும் 40 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் பாப்டிஸ்ட் ராபர்ட் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிப்படை எஸ்.க்யூ.எல். இன்ஜெக்‌ஷன் முறை மூலம் அந்த இணையதளம் ஹேக்கிங் செய்யுமளவுக்கு பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதன்மூலம், பல முக்கியமான தகவல்கள், ஆதார் விவரங்கள் உட்பட சுலபமாக திருடுபோகும் நிலையில் இருப்பதாகவும் விளக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் வெளியிட்டபோது, தெலுங்கானா அரசு சரிசெய்வதாக அறிவித்திருக்கிறது. சிறந்த வெப் டிசைனர்களை வைத்து அவர்கள் இதுமாதிரியான விவரங்களைப் பாதுகாக்க வகை செய்யவேண்டும்’ என பதிவிட்டிருந்தார்

♈🇮🇳 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டன: மத்திய இணை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால்

♈🇮🇳 அம்பத்தூர்  ரேசன்  கண்காணிப்பாளர் பாண்டியண் மீது நடவடிக்கை எடுத்த உணவு பொருள் துறை அதிகாரிகள் உதவி ஆணையர் வரதராஜுவிடம் விசாரணை நடத்தினார்களா. பல மாதங்களாக கொள்ளையடித்த கடைக்காரர் வீரப்பத்திரன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது  -கடை நம்பர்  -F D . 035-கடை இருக்கும் இருக்கும் இடம் வானகரம் மேட்டுக்குப்பம்

♈🇮🇳 அமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார்

♈🇮🇳பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்துகொள்ள இருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

♈🇮🇳இந்தியாவில் 7 மாத குழந்தையின் வயிற்றில் இருந்து 114 கிராம் எடை கொண்ட கருவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்திய மாநிலம் குஜராத்தில் 

♈🇮🇳 யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்-யூ டியூப் சிஇஓ சத்ய நாராயணா பேட்டி

♈🇮🇳 காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 8-ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா அந்த நதியின் பாசன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்

♈🇮🇳அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பெற்று தினகரன் அமைச்சர் ஆக வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்

♈🇮🇳  தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை சிபிஐ தேவையில்லாமல் கைது செய்கிறார்கள் என்று நீரவ் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்

♈🇮🇳பொதுத்துறை வங்கிகளை சூறையாடி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த நீரவ் மோடி, அவரது கூட்டாளி மெஹூல் சோக்ஸியால் குஜராத்தின் சூரத்தில் 2,000 பேர் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்

♈🇮🇳 பெங்களூருவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, 28 வயது இளைஞர் ஒருவர் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳 பெங்களூர்: லிங்காயத்துகள் தனிமத கோரிக்கை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்பித்து இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த குழு ஆய்வு செய்து வந்தது. கர்நாடகாவில் இருக்கும் லிங்காயத்துகள், தங்களை இந்துக்கள் இல்லை தனி மதம் என்று அறிவிக்க கோரி இருந்தார்கள். தங்களை வீர சைவர்கள் என்று அறிவிக்க வேண்டும் கோரி இருந்தார்கள்

♈🇮🇳  சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்ட போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் குடோன் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ளது. இந்த குடோனில் போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பழையதுணிகள் சேமித்து வைக்கப்படும். இந்த நிலையில் நேற்றிரவு இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக குடோனுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மளமளவென பரவி ஏராளமான துணிகள் தீக்கிரையாகிவிட்டதாக் கூறப்படுகிறது.இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாகவும் தீயணைப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன

♈🇮🇳  யானை தாக்கி உயிரிழந்த வன அதிகாரி மணிகண்டன் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

♈🇮🇳 காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை: யோகி ஆதித்யநாத்

♈🇮🇳 பொதுத்துறை வங்கிகளில் நடைபெறும் நிதிமோசடிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பிஎன்பி மட்டுமின்றி பல்வேறு வாங்கி நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. வங்கி நிதிமோசடி உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அவர் தெரிவித்துள்ளார் 

♈🇮🇳 கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் பிப்ரவரி வரை விபத்துகளில் 27 உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்று சென்னை காவல்துறை கோரியுள்ளது. விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் விபத்துகளால் 217 உயிரிழப்புகள் ஏற்பட்டது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது    

♈🇮🇳 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி விளக்கமளித்துள்ளார். சமாஜ்வாதியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி என்ற தகவல் ஆதாரமற்றது என மாயாவதி கூறியுள்ளார். கோரக்பூர், புல்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார். 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் பிணயாற்றுவர் என தெரிவித்துள்ளார்

♈🇮🇳  இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி போட்டி சமனில் முடிந்தது. மலேசியாவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் சமனில் முடிந்தது

♈🇮🇳 டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வரும் நிலையில், முதுகலை பட்டதாரிகளுக்கான ஸ்லெட் ((SLET )) தேர்வை மிக மிக சொற்ப எண்ணிக்கையிலானவர்களே எழுதியுள்ளனர். ஸ்லெட் தேர்வை எழுதும் தகுதியை பட்டதாரிகள் இழந்து வருகிறார்களா என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பியுள்ளனர்

♈🇮🇳 சென்னை போரூரில் வீட்டில் தனியாக இருந்த இரண்டு பெண்களைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த நபர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳சீனாவில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த ஒரு காரை, டிரக் ஒன்று மோதி தள்ளிக்கொண்டு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனாவின் யின்சுவான் ((Yinchuan)) நகரில் கடந்த 1-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது♈🇮🇳 *

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More