Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News



_*🚆NEWS🚆*_


காஞ்சிபுரம் - *செங்கல்பட்டு -   பள்ளிழகரம் பகுதியில் வீட்டின் தண்ணீர்  தொட்டியில் மூழ்கி  4 வயது குழந்தை விஸ்வா உயிரிழப்பு. சாலவாக்கம் போலீஸார்  விசாரணை*
------ -----------------------------காஞ்சிபுரம் -  *மதுராந்தகம்  -  தனியார்  மருத்துவகல்லூரியின் செவிலியர் விடுதியில் 22 வயதுடைய சத்தியா என்பவர் தந்தை கண்டித்ததால் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை.படாளம் போலிஸார் விசாரணை*

*♨ முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி♨*

💫சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை கடிதம் அனுப்புவார். தமிழகம் முழுவதும் 770 சிறார் மருத்துவக்குழு அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

*♨6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்: அர்ஜுன்ராம் மெஹ்வால் பேட்டி♨*

💫சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்று சென்னையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் பேட்டி அளித்துள்ளார். 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

*┈┉┅━❀☀☀❀━┅┉┈​*

*♨ பொதுத்துறை வங்கிகளில் நடைபெறும் நிதிமோசடிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்: மல்லிகார்ஜுன கார்கே♨*

💫டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நடைபெறும் நிதிமோசடிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பிஎன்பி மட்டுமின்றி பல்வேறு வாங்கி நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. வங்கி நிதிமோசடி உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

*♨ கர்நாடகாவில் காவிரி பாசன மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் மார்ச் 8-ல் சித்தராமையா ஆலோசனை♨*

💫பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி பாசன மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் மார்ச் 8-ல் சித்தராமையா ஆலோசனை நடத்துகிறார். காவிரி பாசன மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், விவசாய சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறார். காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க மார்ச் 7-ல் கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

*♨ கடந்தாண்டை ஒப்பிடும்போது விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைவு: காவல்துறை♨*

💫சென்னை: கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் பிப்ரவரி வரை விபத்துகளில் 27 உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்று சென்னை காவல்துறை கோரியுள்ளது. விபத்து தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் விபத்துகளால் 217 உயிரிழப்புகள் ஏற்பட்டது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

*┈┉┅━❀☀☀❀━┅┉┈​*

*♨ சமாஜ்வாதியுடன் கூட்டணி இல்லை : மாயாவதி விளக்கம்♨*

💫லக்னோ: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மாயாவதி விளக்கமளித்துள்ளார். சமாஜ்வாதியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி என்ற தகவல் ஆதாரமற்றது என மாயாவதி கூறியுள்ளார். கோரக்பூர், புல்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியில்லை என்று மாயாவதி அறிவித்துள்ளார். 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் பிணயாற்றுவர் என தெரிவித்துள்ளார்.

*♨ அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி : இந்தியா- இங்கிலாந்து போட்டி சமன்♨*

💫மலேசியா: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி போட்டி சமனில் முடிந்தது. மலேசியாவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் சமனில் முடிந்தது.

*┈┉┅━❀☀☀❀━┅┉┈​*

*♨ மத்திய அரசிடம் ரூ.700 நிதி ஒதுக்க கோரிக்கை: அமைச்சர் பேட்டி♨*

💫திருப்பூர்: கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.700 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காங்கேயம் இன காளை இனப்பெருக்கத்திற்காக பவானி சாகர் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் ஆய்வுக்கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

*♨ சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக கிராம மக்கள் புகார்♨*

💫சென்னை: சென்னை அடுத்துள்ள பூண்டி நீா்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் நீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கிராம மக்கள் புகார்தெரிவித்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் ஈக்காடு, தலக்காஞ்சேரி கிராமத்தில் பூண்டி நீரில் கழிவு நீர் கலக்கிறது என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். கழிவுநீர் வெளியேற அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் குடிநீர் தேவைக்காக பூண்டிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

*┈┉┅━❀☀☀❀━┅┉┈​*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More