Hi manisat
#ref-menu

Sunday, March 4, 2018

இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News




இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News

*♨2 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி இந்திய ஒருமைப்பாடுக்கு கிடைத்த வெற்றி - பொன்.ராதாகிருஷ்ணன்♨*

☀2 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

☀கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேசிய அவர், இதே போன்று தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்றார்

*┈┉┉┈​*
*♨போத்தீஸ் பழைய துணிகள் குடோனில் தீ விபத்து♨*

☀காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் போத்தீஸ்க்கு சொந்தமான பழையதுணிகள் சேமிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பழஞ்சூர் பகுதியில் போத்தீஸ் நிறுவனத்தின் பழைய துணிகளை சேமித்து வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.

☀நேற்றிரவு அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு இடத்தில் பரவிய தீ, மளமளவென மற்ற துணி மூட்டைகளிலும் பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

☀தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

┉┈​*
*♨வனப்பகுதியில் பற்றி எரியும் தீ - அரியவகை மரங்கள் தீயில் நாசம்♨*

☀தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயால் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

☀கொளுந்துவிட்டு எரியும் தீயால் அரியவகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் நாசமாகிவரும் நிலையில், காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்

*┈┉┈​*
*♨உதவி பேராசிரியர் பணிக்கான ’செட்’ தகுதித் தேர்வு தொடங்கியது♨*

☀கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் செட் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

☀தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநில அளவில் செட் எனப்படும் தகுதித்தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 26 துறைகளுக்கு நடத்தப்படும் செட்தேர்வில் பங்கேற்க இந்த ஆண்டு 44 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

☀இவர்களுக்காக சென்னையில் 11 மையங்களும், தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு, இன்று காலை 9.30 மணியளவில் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதல் தாள் தேர்வும், 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 9 ஆயிரத்து 923 பேர் செட் தகுதித்தேர்வை எழுதுகின்றனர்
┉┈​*
🔴🔴   *#FLASH*

*மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் தற்கொலை*

*சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.*

*ஆயுதப்படை காவலர் அருண்(22) துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.*

*தற்கொலை செய்துகொண்ட காவலர் அருண் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.*

*இச்சம்பவத்தால் மெரினா கடற்கரைக்கு காலை நடைப்பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.*


*சசிகலாவை மீண்டும் சந்திக்கும் தினகரன்- தனிக்கட்சி பற்றி நாளை மறுநாள் அறிவிப்பு?*


 *பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க அனுமதி வாங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' இந்த சந்திப்பில், அரசியல்ரீதியாக எடுக்க வேண்டிய இறுதி முடிவுகள் பற்றி விவாதிக்க இருக்கிறார். அதில், புதிதாகத் தொடங்க இருக்கும் தனிக்கட்சி பற்றியும் சிலவற்றைத் தெளிவுபடுத்த இருக்கிறார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.*


*தனது மகன் அருண் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும்,*

*தற்கொலை செய்யும் மனநிலையில் எனது மகன் இல்லை,*

*நேற்று இரவு பணிக்குச் செல்வதற்கு முன் எனது மகன் என்னிடம் போனில் நன்றாகத்தான் பேசினார்,*

 *மெரினாவில் தற்கொலை செய்துகொண்ட காவலரின் தந்தை மலைராஜா,*


*சுயமரியாதை திருமணத்தை கொண்டு வந்ததே  திராவிட இயக்கம்தான்,*

*நான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறதோ இல்லையோ தொண்டர்களுக்கு உள்ளது,*

- ஸ்டாலின்


*உதவி பேராசிரியர் பணிக்கான ’செட்’ தகுதித் தேர்வு தொடங்கியது,*

*கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் செட் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.*

*தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநில அளவில் செட் எனப்படும் தகுதித்தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 26 துறைகளுக்கு நடத்தப்படும் செட்தேர்வில் பங்கேற்க இந்த ஆண்டு 44 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக சென்னையில் 11 மையங்களும், தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு, இன்று காலை 9.30 மணியளவில் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதல் தாள் தேர்வும், 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 9 ஆயிரத்து 923 பேர் செட் தகுதித்தேர்வை எழுதுகின்றனர்.*
_*⚫⚪🔴போக்குவரத்து கழகம் லாப நோக்குடன் செயல்படவில்லை: செங்கோட்டையன்*_


*┈┉┉*
_*◾🔥🔥◾தேர்தல் வரட்டும் யார் காணாமல் போவார்கள் என்று பார்ப்போம்: விஜயகாந்த்*_

*_________*
_*◾🔹🔹◾கும்மிடிப்பூண்டி அருகே ரூ 50 லட்சம் மதிப்புள்ள இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கடத்தல் . கவரப்பேட்டையில் கொல்கத்தா சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் லாரியை கடத்தியது . ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் லாரியை கடத்திய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை*_

*___

*பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டால், மத்திய அமைச்சரை சந்திக்குமாறு கூறினால் என்ன அர்த்தம்? - மு.க.ஸ்டாலின் கேள்வி,*

*பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்ட நிலையில், மத்திய அமைச்சரை சந்திக்கக் கூறினால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்தார்.*

*சென்னை தண்டையார்பேட்டையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய மு.க.ஸ்டாலின், நேற்று முதலமைச்சரை சந்தித்து பேசியது குறித்து விவரித்தார்.பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டால், மத்திய அமைச்சரை சந்திக்குமாறு கூறினால் என்ன அர்த்தம்?*


*ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்,*

*விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளிப்பட்டு அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டோருக்கு, காய்ச்சல் ஏற்பட்டது.*

*இதையடுத்து, அவர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் முறையாக சுகாதார பணிகளை மேற்கொள்ளாததால், காய்ச்சல் அப்பகுதியில் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.*
_*⚫🛑"அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி பிரதமரை சந்திக்க முடிவெடுக்காவிட்டால் திமுக பொறுத்துக் கொள்ளாது" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்*_

*_______*
_*⚫⚪🔴"ரஜினி மற்றும் கமலை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ.*_

┈┉*
_*◾🛑🛑◾விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூரில் கிராம மக்கள் 2 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம். சிறுவன் சமயனை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதம்*_

*__*
_*◾🔸🔸◾காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திப்பது பயனற்றது - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்*_

*_

*சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் ((Jennifer Lawrence, Jodie Foster)) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *

*90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வழங்குவதற்காக கேசே அஃப்லெக் ((casey affleck)) தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் அவருக்குப் பதிலாக சிறந்த நடிகைகள் விருதை வழங்குவதற்கான பிரசெண்டர்களாக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டரை ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ளது.*
_*🍊🍊🍊முதுநிலை மருத்துவப் படிப்பில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது சமூக அநீதியாகும் - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி.*_

*

*சிதறும் சிரியா....கதறும் மக்கள் : மீட்புக்குழு வாகனங்கள் மீது ராணுவம் இரக்கமின்றி தாக்குதல்,*

 *சிரியாவில் தாக்குதலால் படுகாயமடைந்த அப்பாவி மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை தடுத்து நிறுத்த மீட்புக்குழு வாகனங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வசதியாக தினமும் 5 மணிநேரம் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷ்யாவும், சிரியாவும் அறிவித்தன. ஆனாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்ககூடாது என்பதில் ராணுவம் முனைப்புக்காட்டுகிறது.*

*நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் தொண்டு நிறுவன வாகனங்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் அரங்கேறுகின்றன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டாவில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் சிரிய ராணுவமும், அதன் கூட்டு படைகளும் கடுமையான வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வந்தன. கடந்த வியாழக்கிழமை முதல் தரைவழியாக அந்த பகுதியில் முன்னேறி வருகின்றனர்.*
*♨அமெரிக்காவுடன் வணிகப்போரில் ஈடுபடுவதைச் சீனா விரும்பவில்லை♨*

☀அமெரிக்காவுடன் வணிகப் போர் நடத்த விரும்பவில்லை எனச் சீனா தெரிவித்துள்ளது. சீன நாடாளுமன்றத்தின் ஆண்டுக்கூட்டம் இந்த வாரத்தில் தொடங்க உள்ளதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் சாங் ஏசுய் செய்தியாளர்களிடம் பேசினார்.

☀அப்போது, அமெரிக்காவுடன் வணிகப் போரில் ஈடுபடுவதைச் சீனா விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். அதேநேரம் சீனாவின் வணிக நலன்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

☀அமெரிக்காவில் உருக்கு இறக்குமதிக்கு 25விழுக்காடு வரியும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

*
*♨சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் தேர்வு♨*

☀சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் ((Jennifer Lawrence, Jodie Foster)) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

☀90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வழங்குவதற்காக கேசே அஃப்லெக் ((casey affleck)) தேர்வு செய்யப்பட்டு இருந்தார். 

☀ஆனால் பல்வேறு காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் அவருக்குப் பதிலாக சிறந்த நடிகைகள் விருதை வழங்குவதற்கான பிரசெண்டர்களாக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டரை ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ளது


*♨கல்லறையில் எலும்புக் கூடுகள் வீச்சு - வீசிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை♨*

☀சேலத்தில் கல்லறையில் எலும்புக் கூடுகளை வீசிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேவாலாயத்திற்குச் சொந்தமான கல்லறைத் தோட்டம்  உள்ளது.

☀நேற்றிரவு அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருநபர்கள், சில சாக்கு மூட்டைகளை வீசிச் சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் மனித மண்டை ஓடு   மற்றும் எலும்பு கூடுகள் இருந்தன. இதனையடுத்து எலும்புக் கூடுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை வீசிச் சென்றது யார் என விசாரித்து வருகின்றனர்


*♨பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டால், மத்திய அமைச்சரை சந்திக்குமாறு கூறினால் என்ன அர்த்தம்? - மு.க.ஸ்டாலின் கேள்வி♨*

☀பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்ட நிலையில், மத்திய அமைச்சரை சந்திக்கக் கூறினால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்தார்.

☀சென்னை தண்டையார்பேட்டையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய மு.க.ஸ்டாலின், நேற்று முதலமைச்சரை சந்தித்து பேசியது குறித்து விவரித்தார்

*♨ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்♨*

☀விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளிப்பட்டு அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டோருக்கு, காய்ச்சல் ஏற்பட்டது.

☀இதையடுத்து, அவர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் முறையாக சுகாதார பணிகளை மேற்கொள்ளாததால், காய்ச்சல் அப்பகுதியில் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்


*♨தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு♨*

☀கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்களின்  விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

☀திருமண முகூர்த்தத்தின் போதும், கோயில் விழாக்களின் போதும் பூக்களின் விலை அதிகரிக்கும். தற்போது கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  அய்யா வைகுண்டரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது. 

☀இதன் காரணமாக தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் கிலோ 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனையான மல்லிகை மற்றும் பிச்சிப்பூவின் விலை கிலோவிற்கு ஆயிரத்து 250 ரூபாய் வரை உயர்ந்துள்ளது

*♨கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக்♨*

☀ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதினோறாவது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்குகிறது.

☀இதற்காக நடைபெற்ற ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீரை அந்த அணி தக்க வைக்கவில்லை. மாறாக தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணி 7 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

☀இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை வகிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணை கேப்டனாக ராபின் உத்தப்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More