திரு.தாமோதரன், பொதுச் செயலாளர், டி.சி.ஓ.ஏ. (TCOA) அவர்களுக்கு,வணக்கம்!
அனைத்து டிஜிட்டல் எம். எஸ். ஓ(MSO) .நிறுவனங்களும் ஒருங்கிணைந்தால் செட் டாப் பாக்ஸ் 3000 ரூபாய்க்கு விற்பார்கள் சரியா எனக் கேள்வி எழுப்பி
இருக்கிறீர்கள்.
கேபிள் ஆப்பரேட்டர்களின் தொழிலை, மூலதனத்தை 25-வருட உழைப்பை
ஏகாதிபத்திய சக்திகள் சுரண்டு வதைத் தடுப்பதே கூட்டமைப்பின் நோக்கம்.
கேபிள் இல்ல இணைப்பு வழங்குவதோ,டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை
அமைப்பதோ,தனி நிறுவனங்களின் ஆதரவாளராக செயல்படுவதோ
கூட்டமைப்பின் நோக்கமல்ல. ஆனால் சுமுக உறவு, சுயக்கட்டுப்பாடு தேவை
என்பதை வலியுறுத்துகிறோம். உங்களைப் பொறுத்த வரையில் (TCOA)டிசிஓஏ,
(TCCL) டிசிசிஎல் வளர்ச்சி ஒன்றே குறிகோள். அது நியாயமானதே ஆனால்
ஆப்பரேட்டர்கள் தமிழக எம் எஸ் ஓ(TAMILNADU MSO) நிறுவனங்களின்
தொழிலை பாதுகாப்பதே கூட்டமைப்பின் வேலை .அதற்காக எந்த
விலையையும் கொடுக்க தயங்காத சுயநலமற்ற தலைவர்கள் வேண்டும்.
இன்றைய தேவையென்ன என்பதை ஆய்ந்தபோது.....
1) தமிழகமெங்கும் அனைத்து ஆப்பரேட்டர்களும் நிறுவனங்களும் இணைந்து
நிர்மாணிக்கி்ன்ற பொதுவான கேபிள் கட்டமைப்பு தேவை.
2)அதை பொதுவாக பராமரிக்க மாவட்ட அளவில் 10 நபர் குழுவும்
தாலுகாவிற்கு மூவர் குழுவும் நியமிக்கலாம்.
3)பிஎஸெனெல்,(BSNL) ரெயில்டெல்(RAILTEL) மற்றும் நிறுவனங்கள்
மூலமாக பெருந்தொகை செலவு செய்து சிக்னல் கொண்டு செல்வதைத்
தவிர்த்து மிகக் குறைந்த கட்டணத்தில் ஆப்பரேட்டர்களும் எம் எஸ் ஓ
வினரும் சிக்னல் கொண்டு செல்லலாம்.
4)புதிய போட்டி ஆப்பரேட்டர்கள் உருவாவதை தடுக் கலாம்.
5) டிடி ஷெச்(DTH) மட்டுமல்லாது எந்த பன்னாட்டு நிறுவனம் நுழைந்தாலும்
தடுக்கலாம்.
6)20 வருடத்திற்கு தைரியமாக அனைத்து சேவைகளையும் வழங்கி தொழில்
செய்யலாம்.
7)மிக முக்கியமாக ஆப்பரேட்டர்களை ஆசை வார்த்தை கூறி இணைத்து
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் சதியை வெல்லலாம்!
8)மின் கம்பங்களில் கட்டக் கூடாதென்ற தடையுடைத்து தரைவழியில்
பாதுகாப்பாக சிக்னல்(UNDER GROUND) கொண்டு செல்லலாம்.
9) உள்ளூர் சானல் ஒளிபரப்பாளர்களை காப்பாற்றலாம்.
என்ன சகோதரா தயார் தானே!!
அன்புடன்....... டி.ஜி.வி.பி.சேகர்.
0 comments:
Post a Comment