வரி விதிப்பு கெடுபிடியில் பின்வாங்கிய மதுரை மாநகராட்சி
மதுரை, மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள், போராட்டங்கள் தொடர்ந்ததால் கெடுபிடிகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.நகர் கட்டடங்கள் மறு அளவீடு செய்யப்பட்டு வரைபட அனுமதியை விட கூடுதலாக இருந்தால் 2011ம் ஆண்டு முதல் வரிவிதிப்பு செய்யப்பட்டது. இதை ஏற்று கட்டட உரிமையாளர்கள் பலர் வரி செலுத்தி வருகின்றனர். சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். பலர் வரி செலுத்தாமல் உள்ளனர்.நகராட்சி நிர்வாக ஆணைய உத்தரவால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வரிவிதிப்பை தளர்வு செய்ய ஆணையம் அறிவுறுத்தியது. இதன்படி நடப்பாண்டிற்கான வரியை செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரி செலுத்தியவர்களுக்கு வரும் ஆண்டுகளுக்கான வரிவிதிப்புகளில் இதனை ஈடுசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டு முதல் முழுமையாக வரி வசூலாகும் நிலை உள்ளது
தினமலர் மார்ச்-14
0 comments:
Post a Comment