Hi manisat
#ref-menu

Thursday, March 15, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 15/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  15/03/18 Today Tamil ManisatNews


♈🇮🇳🌴  *4.30pm-15-3-2018-thursday-வியாழக்கிழமை*   

♈🇮🇳 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு சுத்தம் செய்யாமல் வைத்திருந்தனர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள்.கவர்னர் வந்து தூய்மை செய்யனும்கிறதுக்காக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தோம், சுத்தம் செய்து வச்சியிருந்தா கவர்னரோட வர்ற அதிகாரிகள் திட்டுவாங்க அதனால சுத்தம் செய்யாதிங்கன்னு சொல்லியிருந்தாங்க,அதனால் சுத்தம் செய்யவில்லையாம் . சுத்தம் செய்யாத அந்த பகுதியை கவர்னர் வந்து சுத்தம் செய்வது போல் போஸ் தந்துவிட்டு, துப்புரவு பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தந்துவிட்டு சென்றாராம்

♈🇮🇳 சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்

6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்

♈🇮🇳 திருவள்ளூர்: மாதவரம் பால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிவு காரணமாக மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. பால் பண்ணையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்

♈🇮🇳 ஸ்டெர்லைட் ஆலை தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மார்ச் 24-ல் பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதிகோரி தூத்துக்குடி எஸ்பியிடம் புதிதாக மனு அளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி எஸ்.பி. அனுமதி வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 தமிழக அரசு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்

♈🇮🇳 ‘தி வையர்’  இணையதளத்துக்கு எதிரான பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன்ஜெய்ஷாவின் கிரிமினல் அவதூறு வழக்கை குஜராத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரணையை மேற்கொண்டு வந்தது. இவ்விவகாரத்தில் ‘தி வையர்’  செய்தி இணையதளம் ஜெய்ஷாவின் கிரிமினல் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னதாக வந்தது. விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,குஜராத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரணையை முன்னெடுக்க வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளது

♈🇮🇳 பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிக்கிறார் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்

♈🇮🇳 காஷ்மீர் ஆனந்த்நாக் என்கவுண்டரில் தெலுங்கானாவை சேர்ந்தவர் உள்பட 3பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

♈🇮🇳 இரு தரப்பினரும் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் பாகிஸ்தான் தனது இந்திய தூதரை மீண்டும் அழைக்கிறது

♈🇮🇳 1970களில் பிரபலமாக இருந்த ஹாலிவுட் தொலைக்காட்சி சீரியல் ஒன்டர் உமன். அதில் டயானா பிரின்ஸாக நடித்தவர் அமெரிக்க அழகி லின்டா கார்டர்.ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லின்டா கார்டர் தனக்கு நடந்த கொடுமை பற்றி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். நான் ஒன்டர் உமன் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது கேமரா மேன் ஒருவர் நான் உடை மாற்றும் அறை சுவரில் ஓட்டை போட்டார். அவரை பிடித்து வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.தவறு செய்த அந்த கேமரா மேனை தண்டித்துவிட்டனர். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. அந்த ஆள் பற்றி நான் என் தோழிகள் தவிர வேறு யாரிடமும் கூறியது இல்லை.எனக்கு ஒரு ஆண் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் செய்த செயலுக்கு அவருக்கு ஏற்கனவே தக்க தண்டனை கிடைத்துள்ளது. இது குறித்து நான் மேலும் தெரிவிக்க விரும்பவில்லை.பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் துணிச்சலாக பேசத் துவங்கியுள்ளனர். இது ஆண்களுக்கு தான் புதிய செய்தி, பெண்களுக்கு அல்ல. பெண்கள் கால காலமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகிறார்கள் என்கிறார் லின்டா

♈🇮🇳 ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பெயிலான பாடத்தில் பாஸ் செய்து தருவதாக ஏமாற்றி10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

♈🇮🇳 வழக்கமாக நாடளுமன்றத்தை விட்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதை காண்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் வெளிநடப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றது

♈🇮🇳 காவிரி வாரியம்: சட்டசபை சிறப்பு கூட்டம் துவங்கியது

♈🇮🇳 ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல நேரமில்லை: ஸ்டாலின்

♈🇮🇳 ராஜஸ்தானில் பாகிஸ்தான் நாட்டவர் கைது
♈🇮🇳 திரிபுரா தேர்தல்: துணை முதல்வர் வெற்றி
♈🇮🇳 காஷ்மீரில் பா.ஜ., தலைவர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
♈🇮🇳 காவிரி விவகாரம்: எம்.பி.,க்களுடன் சித்தராமையா ஆலோசனை
♈🇮🇳 மார்ச் 19 முதல் 22 வரை சட்டசபை தொடர்

♈🇮🇳 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வுக்கான கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் கசிந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.ஆனால், இதனை மறுத்துள்ள சிபிஎஸ்இ, கேள்வித்தாள் எதுவும் வெளியாகவில்லை. தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது

♈🇮🇳 இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே பஞ்சாப் மாநிலம் ராம்கோட் பகுதியில் 11 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருள் கடத்தியவர்கள், எல்லை பாதுகாப்பு படையினரை பார்த்ததும், போதைப் பொருட்களை அங்கேயே போட்டு விட்டு, தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது

♈🇮🇳 நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் நிற்கும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

♈🇮🇳 சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ரயில்களை மறித்து பயணிகள் போரட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து முடங்கியது

♈🇮🇳 சென்னையில் உள்ள தியேட்டர்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்

♈🇮🇳 வியாசர்பாடி கீர்த்தி என்பவனை திருவல்லிக்கேணி போலிசார் பிடித்து சிறையில் அடைத்தனர். கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பாக கீர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்

♈🇮🇳 சென்னை:தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி:
வருவாய் துறைக்கு 6.144 கோடி 
குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி
நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி
பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி
பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி
உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி
ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி
வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு
மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி
ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.347.59 கோடி 
பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி
காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு
மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி
மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58கோடி
சுகாதார துறைக்கு ரூ.11,638.44 கோடி 
உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ.172 கோடி
வேளாண்மை துறைக்கு ரூ.8916 கோடி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.191.18 கோடி
உள்ளாட்சிதுறைக்கு ரூ.17,869 கோடி
குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி
பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82 கோடி
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,336கோடி
இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758கோடி
கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி
சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More