Hi manisat
#ref-menu

Monday, March 5, 2018

90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம் Oscar award

*♨90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்♨*

☀திரைப்படங்களுக்கான சர்வதேச 90 வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

☀ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

☀முதலில் சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. Three Billboards படத்தில் நடித்த நடிகர் சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகராக விருது பெற்றார்.

☀சிறந்த ஒப்பனைக்கான விருது The Darkest Hour படத்தில் கதாநாயகன் Gary Oldmanக்கு வின்ஸ்டன் சர்ச்சிலாக மேக்அப் போட்ட மூன்று மேக்கப் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டது.

☀Phantom Thread படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்புக்காக மார்க் பிரிட்ஜசுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. 

☀சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை இகாரஸ் என்ற திரைப்படம் வென்றது. 

☀சிறந்த சவுண்ட் எடிட்டிங் விருதை Dunkirk படத்திற்காக ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும் Dunkirk படத்திற்கே கிடைத்தது

*┈┉┅━❀☀☀❀━┅┉┈​*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More